மலேசியாவில் டாக்டர் மகாதீர் தலைமையிலான ஆட்சி
பிரதமருக்கும் - அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள் !
மலேசியாவில் அனுபவப் பழமான 92
வயது டாக்டர் மகாதீர் ஆட்சியில், மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கான
பாதுகாப்பு, அமைச்சரவையில் தமிழர்களுக்குப் பங்களிப்பு, சமன்மை
உறுதிப்படுத்தப்படும் என்று நம்புகிறோம் - பிரதமர் உள்பட அமைச்சர்களுக்குப்
பாராட்டுகள் - வாழ்த்துகள் என்று கூறி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மலேசிய நாட்டில் கடந்த 9.5.2018 அன்று
நடைபெற்ற பொதுத் தேர்தலில் புதிதாகத் தொடங்கப்பட்ட டாக்டர் மகாதீர்
அவர்களது தலைமையிலான கட்சி, பல காலம் பதவியிலிருந்த அம்னோ (ஹினீஸீஷீ)
கட்சியை - அதன் கூட்டணி பாரிசானை தோற்கடித்து, வெற்றி பெற்று ஆட்சி
அமைத்துள்ளது.
மலேசியாவின் பிரதமர் 92 வயது அனுபவப் பழம்
வெற்றி பெற்ற டாக் டர்மகாதீர்அவர்கள்தலை
மையில் அங்கே புதிய அமைச்சரவை அமைந் துள்ளது. டாக்டர் மகாதீர்
அவர்கள்92வயதுநிரம் பியவர். தேர்தல் பிரச்சாரத் தில் ஈடுபட்டு, ஏற்கெனவே
அன்வார்இப்ராகிம்அவர் கள் தலைமையில் இயங்கும் கட்சியுடனும், மற்ற சில
கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து - குறுகிய காலத்தில் பிரச்சாரம் செய்து
வெற்றி பெற்றுள்ளார்.
டாக்டர் மகாதீர் அவர்கள் ஆளும்
அனுபவத்தில் பழுத்தவர். மலேசியர்களும், சீனர்களும் - இந்தியர்கள் என்ற
தலைப்பில் பெரிதும் தமிழர்களும் வாழும் நாடு அந்நாடு.
பினாங்கு துணை முதலமைச்சர் இராமசாமியின் வெற்றி
பினாங்கு மாநிலத்தில் எதிர்க்கட்சிதான் ஆளுங் கட்சியாக தொடர்ந்து பெற்றி பெற்று மாநில ஆட்சியை நடத்தி வருகிறது.
அதில் துணை முதல மைச்சராக மொழிப்பற்றும்,
இன உணர்வும், ஆளுமையும் நிறைந்த திரு.இராமசாமி அவர்கள் பொறுப்பேற்று சிறந்த
புகழை ஈட்டியுள்ளார். அவர் இத்தேர்தலில் முன்னரே அதிகமான அளவுக்கு
வாக்குகள் வாங்கி வரலாறு படைத்து, மீண்டும் தற்போது வெற்றி பெற்றுள்ள
கூட்டணியில் இடம்பெற்றுள்ளார் என்பது மகிழத்தக்க செய்தி!
தமிழர்களுக்குப் பாதுகாப்பு
அங்கே தமிழர்கள் கடாரம் புகழ்பெற்ற
இனத்தவர்கள். மண்ணின் மைந்தர்களான மலாய் குடிமக்களும், தமிழர்களும்,
சீனர்களும் வாழும் பல் இன சமுதாயங்களை உள்ளடக்கிய நல்லாட்சியாக நடைபெறும்
என்பதில் அய்யமில்லை. புதிய பொறுப்பேற்றுள்ள ஆட்சியில் தமிழர்களின் நலனும்,
வாழ்வுரிமையும் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டு அவர்களுக்கு ஆட்சியில்
பங்கு - பொறுப்பினை ஏற்று நடத்திடும் சமன்மை முதலியவற்றில் புதிய பிரதமர்
சமூக நல்லிணக்கத்தோடு திறம்பட நடத்திடுவார் என்றே நம்புகிறோம்.
அனைவருக்கும் வாழ்த்துகள்
(இந்தியர்கள்) தமிழர்கள் பிரச்சினையை நன்கு புரிந்தவர்தான் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பழம்பெரும் தலைவரான டாக்டர் மகாதீர் அவர்கள்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் நமது வாழ்த்துகளை - பண்பாட்டுப் பழம்பெரும் உறவுகள் அடிப்படையில் கூறுகிறோம்.
மலேசியத் திருநாட்டிற்குத் தந்தை பெரியார் இருமுறை சென்று திரும்பியுள்ளார்கள்.
அரசியல் கட்சியாக இல்லாது சமூக
சீர்திருத்த இயக்கமாக மலேசிய திராவிடர் கழகம் அங்கே இயங்கி வருகின்ற ஒரு
பண்பாட்டுப் பாதுகாப்பு இயக்கமாகும்!
அனைவருக்கும் பாராட்டுகள் - வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை
14.5.2018
No comments:
Post a Comment