தமிழர் தலைவர் அறிக்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடத்தப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தை சரியான அணுகுமுறையின்றி, துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி வரலாற்றில் இதற்குமுன் எப்போதும் தமிழ் நாட்டில் நடந்திராத வகையில் 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது தமிழ்நாட்டு மக்களிடத்தில் மட்டுமல்ல; மனிதநேயம், மனித உரிமை விரும்பும் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் சட்டப்படி எந்தவித விதிமுறை களையும், நியதிகளையும்கூட பின்பற்றாது, ஆலை முதலாளிகளுக்கு அனுசரணையாக மாநில அரசும், காவல்துறையும் நடந்துகொண்ட போக்கு கண்டிக்கத் தக்கதாகும். தூத்துக்குடியை சுடுகாடாக்கும் போக்கிற்கு முடிவு கண்டாகவேண்டும்.
மக்களின் கண்டன உணர்வைப் பதிவு செய்யும் வகையிலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும், தமிழ்நாடு தழுவிய அளவில் நாளை (25.5.2018) அறிவிக்கப்பட்டுள்ள முழு வேலை நிறுத்தத்தை வெற்றியடையச் செய்யுமாறு பொது மக்களையும், வணிகப் பெருமக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
-கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை
24.5.2018

No comments:
Post a Comment