Friday, April 27, 2018

மகளிர் உரிமை எந்த நிலையில்?

ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டுப் போராடியதை குறிப்பிட  ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8ஆம் தேதி உலகளாவிய நிலையில் மகளிர் உரிமை நாள் கொண்டாடப்படுகிறது.
அய்க்கிய நாடுகள் சபையினால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நாளை சீனா, ரஷ்யா, பல் கேரியா, வியட்நாம் உள்பட பல நாடுகள் விடுமுறை நாளாக அறிவித்துள்ளன.
1789ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம்  என்ற கோரிக்கைகளை முன் வைத்து பிரெஞ்சுப் புரட்சியின்போது பாரீசில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்!. ஆண்களுக்கு நிகராகப் பெண் களுக்கு இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும், எட்டு மணி நேர வேலை,  வேலைக்கேற்ற ஊதியம், பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமை களாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்! ஆர்ப் பாட்டக்காரர்களைச் சமாதானம் செய்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னர் வாக்களித் தார். ஆனால், அது அவரால் இயலாமற்போகவே மன்னர் லூயிஸ் பதவி இழந்தார்.
இதனால் அய்ரோப்பிய நாடுகளிலுள்ள பெண்களும் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். இக்கட்டத்தில் இத்தாலியிலும் பெண்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்று தங்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராட ஆரம்பித்தனர். கிரீஸ் நாட்டில் விஸிஸ்ட்ரடா என்பவரின் தலைமையிலும், ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, ஆளும் வர்க்கம் அசைந்துகொடுக்கத் தொடங்கியது.
1857இல் நியூயார்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண் களின் அமைப்புகள் தோன்றி, போராட்டங்கள் ஆரம்ப மாகியிருந்தன. இப்போரட்டங்களால் ஆட்சியாளர்கள் நிலை குலைந்தனர். உலகநாடுகள் அனைத்திலும் பரவிய இப்போராட்டங்களின் விளைவாக, 1910இல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான பன்னாட்டு மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித் தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARA ZETKIN)  பன்னாட்டு மகளிர் உரிமை கொண்டாடும் நாள் குறித்து யோசனையை முன்வைத்தார். பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோர உலகம் முழுதுவம் ஒரு நாளைக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
ஜெர்மனியில் The Vote for Women மற்றும் ஆஸ்தி ரேலியாவில் Women"s Day  என்ற பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு "பெண்கள் உரிமைகள்", "நாடாளு மன்றத்தில் பெண்கள்" என்பனபற்றி பல கட்டுரைகளை வெளியிட்டன. எல்லாப் பத்திரிகைகளுமே பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின.  1911இல் பன் னாட்டு மகளிர் உரிமை நாளுக்கு கிடைத்த வெற்றி எட்டுத் திக்கிலும் பரவியது. அந்த வெற்றியைத் தொடர்ந்து மார்ச் 8-அய் (1848இல் பிரான்ஸ் மன்னர் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புக்கொண்ட நாளான) நினைவுகூரும் வகையில், 1913 முதல் மகளிர் தினத்தை மார்ச் 8க்கு மாற்றியமைத்தனர்.  ஆனாலும் அது அதிகார பூர்வமானதாக இருக்கவில்லை. இது குறித்து 1917 மார்ச் 8ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள சென்பீட்டர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இப் போராட்டத்தில் அலெக்ஸ்சாண்ட்ரா கொலன்றா என்ற ரஷ்யப் பெண்ணிய வாதியும் கலந்து கொண்டார்.
இப்போராட்டத்தையடுத்து 1921ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதியே பன்னாட்டு பெண்கள் தினமாக அதிகார பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து மார்ச் 8ஆம் தேதி பன்னாட்டு பெண்கள் உரிமை நாளாக கடைபிடிக்கப்பட்டு சம உரிமைகளுக்கான பெண்களது போராட்டம் தொடர்கிறது.
இவ்வளவு போராடிப் பெற்ற பெண்ணுரிமை இன்று ஆபத்தில் நிற்கிறது. உலகப் பொதுமன்னிப்புச்சபை பிப் ரவரி 23 (2018) அன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் உலகின் முக்கியத் தலைவர்களின் பொறுப்பற்ற சுயநலப் போக்குகள் காரணமாக எளியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று கோடிட்டுக் காட்டியுள்ளது,
இந்தியாவிலும் சுமார் 40 ஆண்டுகளாக தொடர்ந்து உயர் நிலையில் சென்றுகொண்டு இருந்த பெண் கல்வி திடீரென்று கடந்த 2 ஆண்டுகளாக சரிவைச் சந்தித்துள்ளது. முக்கியமாக பள்ளிக்கல்வியை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறும் பெண்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரிக்கத் துவங்கியுள்ளது,
மத்திய அரசு பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் என்று திட்டங்கள் அறிவித்துள்ள நிலையில் பெண் கல்வி விழுக் காடு குறைந்து வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண்களுக்கு உரிய உரிமைகளை கொடுக்கத் தயங்கு கின்றனர். 1996ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் முடக்கப்பட்டு கிடப்பது இந்தியாவின் சமத்துவ மற்ற சிந்தனைப் போக்குக்கான அடையாளமாகும்.


"பெண்ணடிமை என்பது மனித சமூக அழிவு என்று நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித  சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது" என்றார் பெண்ணுரிமை காவலர் தந்தை பெரியார் ('குடிஅரசு' 16.6.1935). உலக மகளிர் நாளில் இதன் உள்ளடக்கத்தைச் சீர் தூக்கிப் பார்க்கட்டும் உலக மக்கள்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...