உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் அரசு ரூ.90000 கோடி முதலீடு அளித்தாக கூறிய கொரிய நிறுவனம் பற்றிய உண்மைகளைப் பற்றி என்.டி.டி.வி தொலைக்காட்சி செய்தி வெளி யிட்டுள்ளது
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் முதலீட் டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் மூலம் அரசுக்கு பெருமளவில் அந்நிய முதலீடுகள் வந்துள்ளதாக செய்திகள் வந்தன. அதில் அதிக பட்சமாக ரூ. 90000 கோடியை ஒரு கொரிய நிறுவனம் அளிக்க உள்ளதாக அரசு தெரிவித்தது. அந்த நிறுவ னத்தின் பெயர் ஒர்ல்ட் பெஸ்டெக் எனவும் அந்த நிறுவனம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்சாரம், உணவு பதப்படுத்துதல் மற்றும் குளிர் பதனப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடு செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளி வந்தன.
இந்த நிறுவனம் அதிகம் பேசப்படாத ஒரு நிறுவனம் என்பதால் செய்தித் தொலைக்காட்சியான என்.டி.டி.வி க்கு சிறிது சந்தேகம் வந்துள்ளது. அதனால் அந்த தொலைக்காட்சி நிறுவனம், அந்த நிறுவனத்தின் இணைய தளத்தை ஆய்வு செய்தது. அப்போது அந்த நிறுவனம் குளிரூட்டும் பணிகளை செய்து வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் வாடிக் கையாளர்களாக ஹ¨ண்டாய் மோட்டார் மற்றும் டேவூ மோட்டார் ஆகியோர் உள்ளனர். அந்த இணைய தளத்தில் அந்த நிறுவ னத்தின் நிதி நிலை பற்றி குறிப் பிடப்படவில்லை.
அதே நேரத்தில் கொரிய வர்த்தக நிறுவனங்களின் விவரங்களை அளிக்கும் மற்றொரு இணைய தளத்தை என்.டி.டி.வி ஆய்ந்துள்ளது. அதில் இந்த நிறுவனம் கடந்த 2000ஆம் ஆண்டில் தொடங் கப்பட்டது எனவும் மொத்தம் சுமார் 50 பேர் பணி புரியும் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் அமெரிக்க டாலரில் 6.5 மில்கிலியனில் இருந்து 13 மில்லியன் எனவும் காணப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஆறரைக் கோடியிலிருந்து ரூ.13 கோடி வரை ஆகும்.
இந்த நிறுவனம் முதலீடு செய்வதாக அறிவிக் கப்பட்ட தொகையைப் போல 0.01 விழுக்காடு மட்டுமே இந்தக் கம்பெனியின் வருவாய் ஆகும். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த என்.டி.டி.வி அந்த நிறுவனத்தை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட போது, நாங்கள் அந்த மாநாட்டிற்கு வரவே இல்லை. உத்தரப்பிரதேச மாநில அரசு எங்கள் நிறுவனத்துடன் எந்த ஓர் ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை என பதில் கூறியது, மின்னஞ்சல் மூலமாகவும் பதில் அனுப்பியது.
சாமியார் முதல்வரின் பொய்யான முதலீடு குறித்த தகவலுக்கு பதில் அளித்த மாநில தொழில் முன்னேற்றத் துறை அமைச்சர் சதீஷ் மகானா, நாங்கள் அந்த குறிப்பிட்ட நிறுவனத்துடன் எந்த ஓர் ஒப்பந்தமும் செய்யவில்லை. எங்களுக்கு ரூ.90,000 கோடி முத லீட்டை எந்த ஒரு நிறுவனமும் அளிக்கவில்லை" என என்.டி.டி.வி.யிடம் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேசத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.ஒரு லட்சம் கோடிவரை முதலீடு செய்ய முன்வந்துள்ளனர் என்று கூறிய சாமியார் முதல்வர் ஆதித்யநாத், பெரிய அளவில் முதலீடு செய்த நிறுவனங்களின் பட்டியலை வாசித்தார். அதில் பெரும்பாலான நிறு வனங்கள் குறித்து இணையதளத்தில் கூட தகவல் இல்லை. இந்தியா போன்ற நாட்டில் முதலீடு செய்ய வரும் நிறுவனம் இணையதளம் கூட இல்லாமல் இருக்குமா என்ற கேள்வி ஊடகங்களில் எழுந்துள்ள நிலையில், முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக அர சால் அறிவிக்கப்பட்ட ஒரு நிறுவனம் தாங்கள் எந்த ஓர் ஒப்பந்தமும் மேற் கொள்ளவில்லை என்று கூறி யுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மோடி, உபி முதல்வர் மிகவும் குறுகிய காலத்தில் பல பெரிய நிறுவனங்களின் முதலீடு களை ஈர்த்துள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.
பொய்யையும், புனை சுருட்டுகளையும் அவிழ்த்துக் கொட்டுவதில் பிஜேபிகாரர்களை அடித்துக் கொள்ள நாட்டில் இனி ஓர் ஆட்சி பிறக்க வேண்டும்.
சீனாவின் ஷாங்காய் பேருந்து நிலையத்தை, குஜராத்தின் அகமதாபாத் பேருந்து நிலையம் என்று விளம்பரம் செய்தவர்தானே அன்றைய குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி! இது மாதிரியான தில்லுமுல்லுகளில் மோடிக்குப் போட்டியாக வந்துள்ளார் அவரும் ஆர்.எஸ்.எஸ். பிஜேபிக்காரரான ஒரு சாமியார் அவர்தான் உ.பி. முதல் அமைச்சர் ஆதித்யநாத். வெட்கக் கேடு.
No comments:
Post a Comment