2014-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி - அரியானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச தேர்தல் முதல் நடந்து முடிந்த திரிபுரா உள்ளிட்ட வடமாநிலத் தேர்தல்கள் அனைத்துமே முகநூல் மூலம் போலியான பல தகவல்களை பரப்பிவிட்டு அதன் மூலம் வெகு மக்களின் மனநிலையை மாற்றி பெற்ற வெற்றி என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இர்ஷத் ஜகான் கொலை என்றதுமே முதலில் வரும் மோடியை மிகச்சிறந்த பிரதமர் என்று போலியாகக் காட்டி மக்களை திசை திருப்பியது 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனம் தான் என்பது தற்போது வெளிவந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடு செய்து இருப் பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜகவிற்கும், இந்த நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தக வல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிறுவனம் 12 கோடிக்கும் மேற்பட்ட முகநூல் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. முகநூல் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முகநூல் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியா மல் எடுக்கப்பட்ட பிரச்சினை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் முகநூல் பாதுகாப்பானது இல்லை என்று குற்றச்சாட்டு முன்வைத்து வருகிறார்கள். இந்த முறைகேட்டில் முதலில் பாஜக தான் காங்கிரசுமீது குற்றச்சாட்டு வைத்தது. ஆனால் இந்த முறைகேட்டில் பாஜக தான் முக்கிய பங்கு வகித்து இருக்கிறது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளையான 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' என்ற நிறுவனத்துடன் பாஜக தான் தொடர்பில் இருந்துள்ளது. இதை 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் இந்திய தலைவர் ஒப்புக்கொண்டதும் பெரிய பிரச்சினை ஆகியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் முகநூல் தலைமையகம் சென்ற ஒரே பிரதமர் பாஜகவை சேர்ந்த நரேந்திர மோடி மட்டுமே! 2014 ஆம் ஆண்டு தேர்தலில் உதவியதற்கான நன்றிக் கடன்தான் இந்த சந்திப்பு என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. மேலும் இதில் நிறைய பணம் கைமாறி இருக்கலாம் என்றும் காங்கிரசு குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதே சமயத்தில் 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் 'லிங்க்டின்' பக்கத்தில் முக்கியமான தகவல் இருக்கிறது. அதில் 'நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜகவுக்காக நாங்கள் உதவி செய்தோம்; அதன் மூலம் பாஜக வெற்றி பெற்றது' என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறது. பாஜக என்ன செய்தது? இந்த 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனம் மூலம் பாஜக இந்தியா முழுக்க பொய்யான செய்திகளை பரப்பியதாகக் கூறப் படுகிறது. மேலும் பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்து மக்களின் மனநிலையை மாற்றி உள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்துடன் ராஜ்நாத் சிங்தான் அதிக நெருக்கமாக இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஊடகப் புலனாய்வு மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் முகநூலில் மக்களின் தகவல்களைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. சேனல் 4 இலங்கை தமிழர்கள் மீது நடத்திய இனப்படு கொலையை உலகத்தின் பார்வைக்குக் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, உத்தரப் பிரதேச தேர்தல் வெற்றி, குஜராத் தேர்தல் வெற்றி, திரிபுரா போன்ற சில சிறிய மாநிலங்களின் தேர்தல் வெற்றி என எல்லாவற்றிற்கும் பின்புலமாக - பலமாக இவர்கள்தான் இருக்கிறார்கள். இவர்களிடம் பாஜக பணம் கொடுத்து முகநூலில் அவர்களுக்கு சாதகமான செய்திகளைப் பரப்ப வைத்துள்ளது. ராகுல் காந்தி எதைச் செய்தாலும் உடனடியாக அதை கிண்டல் செய்யும் வீடியோக்களை சாதாரண முகநூல் பயனாளி அனுப்புவது போல் முகநூலில் பரப்பிவிட்டு, பிறகு அதை வாட்ஸ் அப் மூலம் வெகுஜன மக்களிடையே கொண்டு சென்று ராகுல்காந்தி இன்றளவும் ஒரு சாதாரண சின்னப்பையன் என்ற மாயையை உருவாக்கியவர்கள் இவர்கள்தான். இதன் மூலம் ராகுல் காந்தி மீது இருக்கும் மக்களின் நிலைப்பாட்டை மொத்தமாக மாற்றுவது இவர்களின் முதல் பணியாக இருந்துள்ளது. அதேபோல் இந்தியா முழுக்க மோடி அலையை உருவாக்கியவர்கள் இவர்கள்தான் என்று கூறப்படுகிறது. மோடியை ரட்சகன் போல காட்டி, நிறைய கட்டுரைகளை முகநூலில் விளம்பரங்கள் மூலம் பரப்பி இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாசகமான ''ஆப் கி பார் மோடி சர்க்காரை'' வைரலாக்கியது இவர்கள்தான் என்று கூறப்படுகிறது. 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவன செயல்பாடுதான் அகண்ட பாரத கனவிற்கு உதவி இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, மதவெறியாட்டம் போன்றவை அதிகரிக்கும் போது அதை மறைக்க காஷ்மீர் பிரச்சினை, மாட்டுக்கறி என்று பல்வேறு போலியான பிரச்சினைகளை உருவாக்கி அதை மக்களிடையே பரபரப்பாக்கி முக்கிய மான பிரச்சினைகளை திசை திருப்புவது இவர்கள்தான்! அமெரிக்கா, இந்தியா, அய்ரோப்பா என பல நாடுகளில் அவர்கள் இந்த பணியை செய்துள்ளார்கள். குஜராத் மாடல் என்ற வலுவான பிரச்சாரத்தை இவர்கள்தான் உருவாக்கினார்கள். மோடி குறித்து 6 வருடங்களுக்கு முன் கூகுளில் தேடல் செய்தால், ரயில் எரிப்பு சம்பவம் மட்டுமே வரும்.
"பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!" பா.ஜ.க. நிலை இப்பொழுது அப்படிதான் ஆகிக் கொண்டு இருக் கிறது.
No comments:
Post a Comment