Friday, April 27, 2018

அன்று ஒபாமா சொன்னாரே!

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் சாமியார் ஆதித்யநாத் வழியில் அசாம் மாநில பாஜக அரசின் முதல்வர் சர்பானந்தா சோனாவால் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பித்து இறைச்சித் தொழிலை முடக்க முனைந்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிப்பொறுப் பேற்றதி லிருந்து சிறுபான்மை மக்களுக்கு பெருமளவிலான அச்சுறுத்தல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சி என்கிற ஆணவத்தில் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார, இந்துத்துவா வன்முறை யாளர்களால் மாட்டிறைச்சித் தடை என்கிற பெயரால் கும்பல் வன்முறைகள், கொலைகள், கொலை வெறித் தாக்குதல்கள் வட மாநிலங்களில் அன்றாட நிகழ்வுகளாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளன.
உத்தரப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராட்டிரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் ‘‘கவ் ரக்ஷாக்கள்'' என்கிற பெயரில் பசுப் பாதுகாவலர்கள் எனும் போர்வையில் கும்பல் வன்முறைகள் அங்கிங்கெனாதபடி கட்டவிழ்த்து விடப்பட்டன. மத சிறுபான்மையரில் முசுலீம்கள், கிறித் துவர்கள் தாக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். குஜராத் மாநிலத்தில் உனா நிகழ்வையடுத்து தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் நாடுமுழுவதும் கிளர்ந்தெழுந்தனர்.
அதேநேரத்தில் வடகிழக்கு மாநிலங்களில், கேரள மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஆர்.எஸ்.எஸ். பாஜகவினரில் சிலர் வாக்கு வேட்டை நோக்கில், நரித்தந்திரத்துடன் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட மாட்டாது என்று உறுதிகூறியும் வாக்குகள் சேகரித்து வந்துள்ளனர்.
தற்போது வடகிழக்கு மாநிலங்களில், திரிபுராவில் சட்டமன்றத் தேர்தல் நடந்துள்ளது. அதனையடுத்து பிப்ரவரி 27ஆம் நாளன்று மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் முதல்வர் பொறுப்பேற்ற சாமியார் ஆதித்யநாத் இறைச்சிக்கூடங்கள் மற்றும் இறைச்சித் தொழிலையே முடக்கும் வண்ணம் தொடர்ச்சியாக கெடுபிடிகள் செய்து வந்தார். இதுவரை பசு மாடுகள், எருதுகள் என்று மட்டும் கூறிவந்த பாஜகவினர் தற்போது வடகிழக்கு மாநிலமாகிய அசாம் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இறைச்சித் தொழிலை முடக்கும் நோக்கத்துடன் ஆட்டிறைச்சித் தொழிலையும் குறிவைத்துள்ளனர்.
அசாம் மாநில பாஜக அரசு இறைச்சிக்கூடங்களில் யாரும் ஆடுகளை வெட்டக்கூடாது என்றும், இறைச்சிக் கூடங்களுக்குத் தேவைப்படுகின்ற ஆட்டிறைச்சியை அரசு கூடங்களிலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின்மூலமாக இறைச்சித் தொழிலில் பெரும்பான்மையராக உள்ள முசுலீம்கள் குறிவைக்கப் பட்டுள்ளனர்.
தனியார் நிறுவனமான என்.இ.சி. உணவுப்பொருள் உற்பத்தி நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆடுகளை விலைக்குவாங்கி, ஆட்டிறைச்சியைத் தொடர்ச்சியாக வழங்கிவருபவரும், குரைஷி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவருமாகிய முசுலீம் அலி கூறியதாவது: Òஇறைச்சியை விலைகொடுத்து வாங்கும் மக்கள் காலங்கடந்த இறைச்சியை வாங்க விரும்பமாட்டார்கள்.. அரசின் இறைச்சிக் கூடங்களில் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகின்ற இறைச்சியும் தரமானதுதானா என்று எங்களுக்கே தெரியாது’’ என்றார்.
அசாம் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இறைச்சித் தொழிலை, இறைச்சிக்கூடங்களை முடக்கும் முயற்சியை அசாம் மாநில பாஜக அரசு முனைப்பாக செய்யத் தொடங்கியுள்ளது. இதைப்போலவே, பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் இறைச்சி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைக்கிறதா? தரமானகல்விகிடைக்கிறதா?குடியிருக்கவீடு கிடைக்கிறதா? குடிநீர் கிடைக்கிறதா? என்பதைப்பற்றி யெல்லாம் கவலைப்பட வேண்டிய ஓர் அரசு, மக் களுக்கு மலிவாகக் கிடைக்கக் கூடிய சத்துணவான மாட்டிறைச்சியைத் தடை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பது மிகவும் தரந்தாழ்ந்த மதவாத சிந்தனையாகும்.
இந்தியாவைப் பார்த்து உலகம் பரிகசிக்கும் நகைப் புக்குரிய நடவடிக்கை இது.
அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது, பிரதமர் மோடியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே நறுக்கென்று சொன்னாரே! ‘இந்தியாவில் மதச் சகிப்புத் தன்மை உள்ளவரை உலகில் அதன் மதிப்பு உயரும்' என்றாரே, இதைவிட நாகரிகமாக வேறு எப்படித்தான் குத்திக்காட்ட முடியும்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...