Friday, April 27, 2018

அகாடாக்கள் அரசியல்

வட இந்தியர்களால் பய பக்தியுடன் வணங்கப்படுகிறவர்கள் மனித மாமிசம் சாப்பிடும் அகோரி சாமியார்கள். மண்டையோடுடன் பிணநாற்றத்தோடு முழு நிர்வாண மாக கங்கை நதிக்கரைகளில் சுதந்திரமாக நடமாடும் இவர்கள் தனி மனிதர்கள் அல்லர். இவர்களின் குழுக்கள் இந்துத்துவா சக்திகளின் வன்முறைத்தலைமைக் களமாக இருக்கும் அகாடாக்கள் எனப்படும் சாதுக்களின் மட மாகும்.
இந்துத்துவா அமைப்புகள் எத்தனையோ முகங் களுடன் வட இந்தியாவில் இருக்கின்றன. இவர்களில் நிர்வாணச் சாமியார்களின் ஒருங்கிணைந்த சங்கங்கள்தான் அகாடாக்கள் ஆகும்
அரித்துவாரில் திரும்பிய திசையெங்கும் இந்த அகாடாக்களைப் பார்க்க முடியும். கும்பமேளா காலங் களிலும், சிவராத்திரி காலங்களிலும் இந்த அகாடாக்களைச் சேர்ந்த சாமியார்கள்தான் நிர்வாணமாக ஊர்வலம் நடத்துவார்கள்.
நிர்வாண ஊர்வலம் நடத்தி வரும் சாமியார்கள் வசிக்கும் அகாடாக்களில் அய்ந்து நட்சத்திர விடுதிகளுக்கு இணையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கும். இந்த அகாடாக்களுக்கு நிதி கொடுப்பவர்கள் யார்? இந்த அகாடாக்களுக்கான வருமானம் என்ன? அகாடாக் களுக்கான கணக்கு வழக்கு எதுவும் ஆய்வுக்குட்பட்டதே இல்லை. எவரும் இந்த அகாடாக்களை கேள்வி கேட்க முடியாது. இதுதான் எல்லா ஆட்சிகளிலும் நடந்து கொண்டிருக்கிறது.
இங்கு பிரதான 13 அகாடாக்கள் (இவற்றில் அந்தந்த ஜாதிகளுக்கு என்று பிரிவுகள் தனியாக உணடு) இருக்கின்றன. இந்த அகாடாக்களின் தலைவர்கள் மகா மண்டலேஸ்வர்கள் எனப்படுவர். அனைத்து அகா டாக்களின் மகா மண்டலேஸ்வர்களை ஆலோசித்துதான் கும்பமேளா நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கும்பமேளா காலங்களில் ஒவ்வொரு அகாடா சாமியார்களுக்கும் ஒவ்வொரு நாள் ஒதுக்கீடு செய்யப்படும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் அரித்துவார் கும்ப மேளாவில் நிர்வாண ஊர்வலம் நடத்தியபோது யார் முதலில் புனித நீராடுவது என்பதில் சாதுக்களிடையே மோதல் வெடித்து 100-க்கும் மேற்பட்டோர் அடித்துக் கொல்லப்பட்டனர். இதனால் ஒவ்வொரு அகாடாக்களுக்கும் ஒரு நாள் என பிரித்துக் கொடுக்கப்படும். புனித நீராடுவதற்கு முன்னதாக அத்தனை அகாடா சாமியார்களும் நிர்வாண ஊர்வலம் நடத்துவர்.
அகாடாக்கள் அனைத்திலும் தாராளமாக புழங்குவது கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள். பகிரங்கமாக கங்கை நதிக்கரைகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை புகைத்தபடியே அமர்ந்திருப்பர் இந்த அகாடா சாதுக்கள். இவர்களின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது என நினைப்பவர்கள், அஞ்சுபவர்கள் வட இந்தியர்கள். இந்த அகாடாக்களில் ஒன்று மகா நிர்வாணி அகாடா. இதில் உள்ளவர்கள்தான் அகோரிகளாக எப்போதும் நிர்வாண கோலத்தில் அலைபவர்கள். மனித மாமிசம் சாப்பிடக் கூடியவர்கள். அகாடக்களில் பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் தலை வனாகிவிடலாம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மகாமண்டலேசுவர் அகாடாவான மகாநிர்வாணியின் தலைவராக 2015 ஆம் ஆண்டு நித்தியானந்தா நிய மிக்கப்பட்டார். அவரை போலிச் சாமியார்கள் பட்டியலில் 2017 ஆம் ஆண்டு சேர்த்த பிறகும் கூட அவரை நீக்க நிர்வாண சாமியார்கள் மறுத்துவிட்டனர்.
இம்மடங்களில் சட்டத்திற்குப் புறம்பான பல நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டே இருக்கும். இங்கு நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும் யாரும் வெளியே சொல்வதில்லை, அப்படி சொன்னால் சாபம் பிடிக்கும் என்ற அச்சம் வட இந்திய பக்தர்களிடம்.
இந்த அகாடா சாமியார்கள் தான் 2002 இல் குஜராத்தில் கொடூரமான படுகொலைகளை அரங்கேற்றியவர்கள். அகாடா சாமியார்கள் குஜராத்தில் நடத்திய படுகொலைகள் குறித்து இன்றுவரை எவருமே பேசவில்லை. இந்த அகாடா சாமியார்கள் தான் பாபர் மசூதியை இடித்த வர்களில் பெரும்பாலானவர்களாக இருந்தனர்.  அரசியல்  தலைவர்களின் பெயர்கள் மட்டுமே இத்தகைய சம்பவங் களில் அடிபடுகின்றனவே தவிர அகாடாக்களின் வன்முறைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினத்த வருக்கு எதிராக நாள் தோறும் நடந்துவரும் வன்முறைகள், கொலைகளின் பின்னணியில் இந்த சாமியார்களின் பங்கு முக்கியமானது. ஆனால் காவல்துறையோ இது குறித்து பேசக்கூட மறுக்கிறது.
அடுத்த நாடாளுமன்றத்தேர்தல் 2019 ஆம் மே மாத மத்தியில் நடைபெற உள்ளது. தற்போது தனது இழந்துகொண்டு இருக்கும் செல்வாக்கை இந்தச் சாமி யார்களைக் கொண்டு மிரட்டி வாக்குகளைச் சேகரிக்கும் திட்டத்தில் இந்துத்துவ அமைப்புகள் இறங்கியுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச தேர்தலில் இருந்தே துவங்கவிருப்பதாகத் தெரிகிறது, மத்தியப்பிரதேசம் உஜ்ஜையினில் நிர்வாணச் சாமியார்களின்  ஒருங்கு கூடல் குறித்து ம.பி. அரசு சார்பில் விளம்பரங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. ம.பி. தேர்தலின் போதே சாமியார்கள் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடுவார்கள் என்பது அரசு கொடுக்கும் விளம்பரத்தில் இருந்தே தெரிந்துவிட்டது.
இந்தியா என்னும் ஜனநாயக நாட்டில் பா.ஜ.க. - சங் பரிவார் வளர்க்கும் மதவாதம் நாட்டை எங்கே கொண்டு செல்லுகிறது? வெட்கக்கேடு! மக்கள் விழிக்கவில்லை என்றால், இந்தியர்கள் காட்டுவிலங்காண்டிகள் என்ற பட்டம்தான் உலகில் நிலைக்கும்!
வளர்ச்சி என்பதெல்லாம் வார்த்தை விளையாட் டாகவே முடியும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...