குற்றவாளிகளை ஒடுக்க உத்தரப்பிரதேச சாமியார் ஆதித்யநாத் அரசால் நடத்தப்படும் என்கவுன்டர் குறித்த குற்றப் பத்திரிகைகளில் ஒரே விவரமே பதியப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பாஜக அரசு குற்றவாளி களைப் பிடிக்கும் செயலில் ஈடுபடத் துவங்கியது. இதன்படி சாமியார் ஆதித்யநாத் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து 1462 என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளன. இது குற்றவாளிகளை ஒழிக்க காவல்துறை செய்யும் சுலபமான வழி எனப் பலரும் கூறுகின்றனர். இந்த என்கவுன்டர்களில் பலருக்கு உடலில் 265க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து என்கவுன்டரில் மரணம் அடைந்த குற்றவாளிகளின் உறவினர்கள் மட்டும் இன்றி பல சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சியினரும் சந்தேகங் களை எழுப்பி உள்ளனர். அவர்கள் அனைவரும் இவை போலி என்கவுன்டர்களாக இருக்கலாம் என சந்தேகத்தைத் தெரிவித்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட 34-பேர் விவகாரத்தில் அனைத்து குற்றப் பத்திரிகைகளிலும் ஒரே மாதிரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றப்பத்திரிகைகளில் பொதுவாக காணப் படும் வாசகங்கள், "குற்றவாளி தனது கூட்டாளியுடன் கார் அல்லது பைக் போன்ற வாகனத்தில் தப்பிச் சென்றார். காவல்துறையினர் அவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நிகழ்த்தினர். தங்களைக் காப் பாற்றிக் கொள்ள காவல்துறையினர் பதிலுக்கு சுட்ட தில் குற்றவாளி மரணம் அடைந்தார்" என்பதே ஆகும்.
இது போல எழுதப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைகளில் 10-க்கு 9 வழக்குகளில் கூட்டாளி என சொல்லப் படுபவர் கண்டுபிடிக்கப்படுவதில்லை. சில விவ காரங்களில் அவர் என்ன ஆனார் என்பதும் சொல்லப்படுவதில்லை. அதே போல பல நேரங்களில் தப்பிச் சென்றதாகச் சொல்லப்பட்ட குற்றவாளிகள் அவர்களின் உறவினர்கள் முன்பு பிடித்துச் செல்லப் பட்டவர்களாகவே உள்ளனர்.
மேலும் குற்றவாளிகளை இவ்வாறு பிடித்துச் செல்லும் காவல்துறையினர் சீருடையில் வருவ தில்லை. அத்துடன் பிடித்துச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற போதே அவர்கள் தப்பித்துச் செல்ல முயன்றதாகவும், அப்போது என்கவுன்டர் நடைபெற்றதாகவும் காவல் துறையினரால் பதியப்படு கின்றது. ஆனால் ஒருமுறை கூட அதை உடன் இருந்த உறவினர்கள் பார்த்ததாகவோ அல்லது அவர்களிடம் விசாரணை நடத்தியதாகவோ எந்த ஒரு குறிப்பும் இருப்பது கிடையாது. மேலும் இது குறித்து ஊடகங்களின் எந்த ஒரு கேள்விக்கும் காவல்துறை அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்து விடுகின்றனர்.
மேற்கூறிய தகவல்களை வெளியிட்டுள்ள என்.டி.டி.வி. ஊடகம் பல குற்றவாளிகளின் மேல் குற்றங்கள் நிரூபிக்க முடியாது என்பதால்தான் இதுபோல என்கவுன்டர்கள் நடக்கின்றனவா என அய்யம் எழுப்பி உள்ளது. இதுவரை என்கவுன்டர் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜாதிவாரியாக வெளியிடப்பட்டதில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் 360 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். 240 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களில் 612 பேர் கொல்லப்பட்டனர். 590 பேர் சிறையிலை டைக்கப்பட்டனர். பார்சி மற்றும் இதர சிறுபான்மை மதத்தவர்கள் என்கவுன்டரில் 80 பேர் கொல்லப்பட்டனர். 130 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
இசுலாமியர்களில் 410 பேர் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டனர். 90 பேர் சிறைவைக்கப்பட்டுள் ளனர். அர்ஜக் சங் என்ற நாத்திக அமைப்பு என் கவுன்டர்களில் கொலை செய்யப்பட்டவர்களின் பட்டி யலை மாநில காவல் துறையிடமிருந்து வாங்கி அதை ஜாதிவாரியாக பிரித்துப் பார்த்த போது ஒரு உண்மை தெரிய வந்துள்ளது.
மேலுள்ள பட்டியலில் ஒரு பார்ப்பனர்கூட கொல் லப்படவில்லை, கைது செய்யப்படவும் இல்லை என்பது தான். இந்தியாவுக்கு டில்லி தலைநகரம் என்று சொல்லப் பட்டாலும், உத்தரப்பிரதேசம்தான் மிகப் பெரிய மாநிலமாகும். அங்கிருந்துதான் பெரும் பகுதியான பிரதமர்களும் வந்து உள்ளனர்.
மோடியைத் தொடர்ந்து அடுத்த பிரதமர் உ.பி. முதல் அமைச்சர் சாமியார் ஆதித்யநாத் என்று ஊடகங்களில் அவ்வப்பொழுது உலாவ விடப்படுகிறது. அப்படியானால் அது அசல் ராம ராஜ்ஜியம்தான் என்பதற்கு இவை எல்லாம் முன் னோட்டமே, 2019இல் மக்கள் இதற்கொரு முடிவை ஏற்படுத்துவார்களாக!
No comments:
Post a Comment