சென்னை, நவ. 8- ஒரு முழு பகுத்தறிவாளராக; ஒரு முழு பெரியார் பற்றாளராக நிறை வாழ்வு வாழ்ந்த பெரியார் பேரு ரையாளர்; முனைவர் மா.நன் னன் காலமானதையொட்டி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இவர் கடலூர் மாவட்டத் தில் காவனூர் எனும்
ஊரில் 16-.7.-1924இல் மீனாட்சி - மாணிக் கம் இணையருக்கு மகனாகப் பிறந்தவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னை பல் கலைக்கழகத்தில்
தமிழ் ஆசிரி யர் பயிற்சிச்சான்றும், எம்.ஏ; பி.எச்.டி. ஆகிய பட்டங்களும்
பெற்றவர். அருப்புக்கோட்டை கைலாசம் அறக்கட்டளையில் சொற்பொழிவாற்றி பெரியார்
பேருரையாளர் என்ற பட்டம் பெற்றவர். தந்தை பெரியா ரோடு சுற்றுப்பயணத்திலும்
சில காலம் பங்கேற்றவர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திராவிடர்
கழகத்தின் தலைவ ரையும், துணைத்தலைவரையும் தானாகவே விரும்பி அழைத்து தனது
மரண வாக்குமூலத்தை கம்பீரமாகப் பதிவு செய்தவர். தான் இறந்த பிறகு எந்த சடங்
குமின்றி தனது இறுதிப்பயணம் அமைய ஏற்பாடு செய்தும் வைத்திருந்தவர். அந்த
அள வுக்கு தந்தை பெரியாரின் பகுத் தறிவுக் கோட்பாட்டை பின் பற்றியொழுகி
நிறைவாழ்வு வாழ்ந்த அன்னார் நேற்று (7.11.2017) காலையில் சைதாப் பேட்டையில்
உள்ள அவரது இல்லத்தில் தனது 94 ஆவது வயதில் முதுமை காரணமாகக் காலமானார்.
அப்படிப்பட்ட சிறப்புக் குரிய முனைவர்
நன்னன் அவர்களுக்கு தமிழர் தலைவர் நேற்று நேரில் சென்று வீர வணக்கம்
செலுத்தியதோடு, குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார். கழகத் துணைத் தலை
வர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வெளி யுறவுச் செயலாளர்
வீ.குமரேசன், வழக்குரைஞர் அருள்மொழி, சைதை எம்.பி.பாலு, எழுத்தாளர் மஞ்சை
வசந்தன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அரசு பணியாளர்கள் கூட்ட மைப்பின்
பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி (துணைவியா ருடன்), தென்சென்னை மாவட் டத்
தலைவர் இரா.வில்வ நாதன், வடசென்னை மாவட் டத் தலைவரும் வழக்குரைஞரு மான
சு.குமாரதேவன், பிரின்சு என்னாரெசு பெரியார், பா.மணி யம்மை, சேரலாதன்,
தளபதி பாண்டியன், அரும்பாக்கம் தாமோதரன், தரமணி மஞ்சநாதன், வீரபத்திரன்,
சைதை செல்வேந்திரன், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் பொருளா ளர் சேரன்,
மாதவன், மகேந் திரன், உடுமலை வடிவேல், வை.கலையரசன், கலைமணி, சுரேசு, விமல்,
சக்திவேல், ஆனந் தன், சிறீராம், அருள், மயிலை இளங்கோவன், முரளி, ஈழமுகி
லன், மணித்துரை, யுவராஜ், அஜித், மதன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின்
வீரவணக் கத்தைச் செலுத்தினர். கழகத் தலைவரின் இரங்கல் அறிக்கை அச்சிட்டு
அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், தி.மு. க. மாவட்ட செயலாளர் மா.சுப் பிரமணியன் எம்.எல்.ஏ., தாய கம் கவி மற்றும் திமுகவினர் இறுதி மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், தி.மு. க. மாவட்ட செயலாளர் மா.சுப் பிரமணியன் எம்.எல்.ஏ., தாய கம் கவி மற்றும் திமுகவினர் இறுதி மரியாதை செலுத்தினர்.
இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர்
இன்று காலை 8.30 மணிய ளவில் புலவர் மா.நன்னன் அவர்களின் இறுதிப் பயணம் புறப்பட்டது. கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உட் பட கழகத் தோழர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சுடுகாட் டுக்கு வந்து இறுதி மரியாதை செலுத்தினார்.
புலவர் மா.நன்னன் வாழ்விணையரின் 'உணர்வுப்பூர்வமான' அந்த வார்த்தைகள்
இன்று காலை 8.30 மணியளவில்
சென்னை-சைதாப்பேட்டை அரங்கராசபுரம் புலவர் மா.நன்னன் இல்லத்திலிருந்து
இறுதி ஊர்வலம் புறப்பட்டு, காலை 9 மணிக்கு கண்ணம்மாள்பேட்டை எரிவாயு தகன
மேடையில் உடல் எரியூட்டப்பட்டது. நன்னன் அவர்களின் வாழ்விணையர் பார்வதி -
மகள்கள் வேண்மாள், அவ்வை, மருமகன்கள், பேரப் பிள்ளைகள் சூழ அவர்
குடும்பத்தார் தோழர்கள் சுடுகாட்டுக்கு வந்தனர்.
'அய்யா நீங்கள் அறிவுறுத்தியபடி, வாழ்ந்து
காட்டியபடி எந்தவித மூடச் சடங்கிற்கும் இடமின்றி உங்களை இறுதி அடக்கம்
செய்கி றோம். இதனை உங்களிடம் சொல்லிப் போகவே இங்கு வந்தோம்' என்று நன்னன்
அவர்களின் வாழ்விணையர் குரல் தழுதழுக்க சொன்னபோது, கூடியிருந்த அனைவரும்
உணர்ச்சி வயப்பட்டனர்.
No comments:
Post a Comment