லஞ்ச ஊழலையும், கறுப்புப் பணத்தையும் ஒட்டு மொத்தமாக ஒழிக்கப் போவதாகக் கூறிக் கொண்டும், தீவிரவாதத்தின் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப் போவதாகக் கூறிக் கொண்டும், ரொக்கப் பணப்பரி வர்த்தனை பற்றிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, டிஜிடல் மேடைகளைப் பரவலாகப் பயன்படுத்தி, நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் ஒரு நிதிக்கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண் டும், அரசியல் அரங்கில் அதிர்ச்சி வைத்தியங்களை நமது பிரதமர் அவ்வப்போது அளித்து வந்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் எட்டப்பட இயலும் என்று தங்களால் கருதப்பட்ட இலக்குகளை எட்டு வதற்குத் தவறிவிட்டதால், இத்தகைய அதிர்ச்சி வைத்தி யத்தின் இலக்குகள் மற்றும் பேரறிவு பற்றிய கேள்வியை எவர் ஒருவராலும் எழுப்ப இயலும். ஆனாலும், நிலை நாட்டப்பட்ட அரசாட்சி நடைமுறைகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன், அழிவு சக்திகளையும், தீய சக்திகளையும் பல வழிகளிலும் கட்டவிழ்த்து விட்டிருப்பதே, இந்திய அரசியல் நடைமுறையின் மீது மேற்கொள்ளப்பட்ட பேரழிவைத் தரும் மிகக் கடுமையான தாக்குதல் ஆகும்.
சங்பரிவார பிரச்சாரகர்கள் செல்வாக்கு மிகுந்த பதவிகளில் நியமிக்கப்பட்டிருப்பது கவலை தரும் ஒரு செய்தியாகும். இத்தகைய செயல்பாடுகளால் நாட்டில் ஏற்படும் அமைதிச் சீர்குலைவிற்குப் பின்புலத்தில் உள்ள தங்களது விரிவான கோட்பாட்டு விளக்கத்தை அளிப் பதுடன், அவற்றை நியாயப்படுத்தவும் முயலுகின்றனர். தன்னிடம் இருந்து விலகி நிற்கும்படி பா.ஜ.கட்சியினால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள இத்தகைய அழிவு சக்திகள், இந்துத்துவக் கோட்பாட்டுக்கு எதிராக எழுப் பப்படும், எந்தக் குரலையும் நெறித்து அடக்குவதற்காக வன்முறைச் செயல்பாடுகளையும் கைக்கொள்வதற்கு சற்றும் தயக்கம் இல்லாதவர்கள் ஆவர். தலித்துக்களை வெட்டி கொல்வது, முசுலிம்களையும், பகுத்தறிவாளர் களையும் திட்டமிட்டு படுகொலை செய்வது, முசுலிம் மற்றும் இதர சிறுபான்மை மத மக்களின் வழிபாட்டு நடைமுறை, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவை மீது தாக்குதல் மேற்கொள்வதன் மூலம் அவர்களிடையே அச்ச உணர்வைத் தோற்றுவிப்பது. அனைத்துக்கும் மேலாக, ஒரு குறிப்பிட்ட மன நிலையை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவில் ஒரு பொய் மாற்றத்தை ஏற்படுத்துவ தற்கான தங்களது தேசிய அரசியல் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதற்கான முயற்சி ஆகியவை இவற்றில் அடங்கும்.
பேரழிவுச் செயல்களை தடுத்து நிறுத்துக
நல்லிணக்கத்தையும், நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் அரசமைப்பு சட்டப்படியான அரசியல் நடைமுறையையும் சீரழிப்பதற்காக மேற் கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகளை, உண்மையான ஒரு தேசிய கட்சியான காங்கிரசு கட்சி முறியடித்து இச்சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டும். தனது மாறுபட்ட செயல் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான துணிவான முயற்சிகளை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள நிலை யில், ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.கட்சியை வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசு கட்சி எதிர்கொள்ள வேண்டும். அனைத்து தகவல் பரிமாற்ற ஊடகங்களின் வாயிலாகவும், நமது சிந்தனைகள் எழுத்து மற்றும் பேச்சு மூலமாக மக்களைச் சென்றடைய வேண்டும். குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், ஆளுநர்கள், பல்கலைக்கழக துணைவேந் தர்கள், அரசமைப்பு சட்டப்படியான அமைப்புகளின் தலைவர்கள் என்று பல மிகமிக முக்கியமான பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்கள் ஆக்கிரமித்துக் கொண்டி ருப்பதை மக்களுக்கு நாம் எடுத்துக் காட்டவேண்டியது அவசியம். அரசமைப்பு சட்டப்படியான பழக்க வழக் கங்கள், நடைமுறைகள் எவ்வாறு மீறப்படுகின்றன என்பதையும், மாநிலங்களவையில் அறிமுகப்படுத் துவதைத் தவிர்ப்பதற்காக சாதாரண மசோதாக்களையும், பண மசோதாக்கள் என்ற பெயரில் மக்களவையில் மட்டும் அறிமுகப்படுத்தி நிறைவேற்றுகிறது என்பதையும் நாம் மக்களுக்கு எடுத்துக் கூறுவேண்டும். அரசமைப்பு சட்டப் பதவியான ஆளுநர் பதவியை வகுப்பவர்கள் கட்சி சார்பற்ற நடுநிலைத் தன்மையுடன் செயல்படுவதற்கு மாறாக, மாநில சட்டமன்றங்களில் பா.ஜ.கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை கட்சி மாறவைத்து எதிர்கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்க்கும் பணியில் வெளிப்படையாக அனைவரும் அறியும் வகையில் ஆளுநர்கள் செயல் பட்டு வருகின்றனர். கடந்த கால தேசியத் தலைவர்களின் பெயர்களே இடம் பெறாமல் செய்யும் வகையில் நாட்டின் வரலாறு மாற்றி எழுதப்பட்டு வருகிறது. உண்மை நிலை எது, பொய் எது என்று பிரித்து அறிய முடியாதபடி குழப்பமான நோக்கத்தை ஏற்படுத்துவதற்கு புள்ளிவிவரங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட செயல் திட்டங்களின் பெயர்களை மாற்றி அவற்றை ஏதோ தங்களது திட்டங்களைப் போலக் காட்டிக் கொள்வது. அது மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்கள்மீது புலனாய்வு குழுக்களின் மூலம் விசாரணை என்ற பெயரில் அவர்கள் மீது அழுத்தம் கொடுப்பது, பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆளும் பா.ஜ.கட்சிக்கு இந்தப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் விருப்பத்துடன் ஆதரவு அளித்து பயன்படுவது: இவற்றைப் பற்றியெல் லாம் நாம் பொதுமக்களுக்கு விளக்க மாகவும், விரிவாகவும் எடுத்துரைக்க வேண்டும்.
நமது மதிப்பீட்டு நடைமுறைக்கு அழிவையும், இழிவையும் ஏற்படுத்தும் செயல்பாடுகளை எதிர்ப்பதற்கு தகுதியுள்ள தலைமையை அளிப்பது மட்டுமே போதுமானது அல்ல.
நேர்மையான உறுதிமொழிகளை அளித்தல்
இந்த உலகம் பல வழிகளிலும் மாற்றம் அடைந் துள்ளது. தகவல் ஒலிபரப்புத் துறைப் புரட்சி, தூரம் என்பதையே இல்லாததாக செய்துவிட்டது. உலகின் அனைத்து நாடுகளும் நமக்கு மிக அருகில் இருக்கின்றன என்பதுவே இன்று நிலவும் நிலைமை ஆகும். நமது மக்கள் நம்மை நன்கு அறிந்து இருக்கின்றனர். நம்மால் பேசப்படும் ஒவ்வொரு சொல்லும் மிகுந்த கவனத்துடன் கேட்கப்படுகிறது. திறந்த புத்தகம் போல இருப்பதுவே நமது தனித்தன்மையாகும். எனவே இனியும் நம்மால் மக்களை முட்டாள்களாக ஆக்க முடியாது. நமது நேர்மை, நாணயம், மதிப்பீடுகளுக்கு நாம் காட்டும் மரியாதை, நமது போக்கு மனோநிலை ஆகியவை திரட்டப்பட்டு கணினி ஆவணத்தில் பதிவு செய்து பாது காக்கப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட மனிதர்களுக்கும், அமைப்புகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பொருந் தும். எனவே நாம் என்ன பேசுகிறோம் என்பதில் நாம் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். நான் பேசியதைக் கொண்டு நம்மை வீழ்த் துவதற்கு எதிர்கட்சியினர் எப்போதுமே தயாராக உள் ளனர். நமது பேச்சுக்கள், மிகப்பெரிய உறுதிமொழிகள், உண்மைக்கு மாறான பொய்களைப் பேசியும் தேர்தலில் நம்மால் வெற்றி பெறக்கூடும். நமது ஏமாற்று வேலைகள் வெளிப்பட்டு விடுவதால் தேர்தலில் நாம் தோற்றுப் போகவும் கூடும். தனது பேச்சுக்களுக்காக மரியாதைக் குரிய பிரதமர் நரேந்திர மோடி பெரியதொரு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே தங்களால் எதை யெல்லாம் தரமுடியும் என்பதைப் பற்றி நன்றாக சிந்தித்து அதன்படி மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்குவதே அரசியல் கட்சிகளின், தலைவர்களின் கடமையும், பொறுப்பும் ஆகும்.
இன்றைய பிரச்சினைகளைத் தீர்ப்பதாக அரசியல் வடிவமைக்கப்பட வேண்டும். கடந்த காலத்தில் இருந்து ஒரு கட்சி தனது செயல்பாட்டுக்கான தூண்டுதலைப் பெறலாம். என்றாலும் இன்றைய உண்மை நிலையை கருத்தில் கொண்டு அது வாழ வேண்டும். கடந்த காலத்தின் வெற்றிகள், சாதனைகள் இன்றைக்கு உதவி செய்பவையாக இருக்காது; இருக்க முடியாது.செய்திகள் எளிதில் பதியக்கூடிய இளம் மனங்களில், தவறான செய்திகளை அளித்து தவறாக வழிகாட்டும் சுனாமி போன்ற தகவல்களால் கோடிக்கணக்கான இளைஞர்கள் ஆட்கொள்ளப்படுகின்றனர். அரசியல் கட்சிகள் இந்த உண்மையை மனதில் கொண்டு, இளைஞர்களை வழி நடத்தவும், அவர்களுக்குக் கற்பிக்கவும் டிஜிட்டல் போர் வீரர் படை ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், நாட்டில் அரசியல் பிரச்சாரம் ஒரே பக்கமாக சாய்ந்து இருப்பதாக இருக்கும்.
மக்களின் மிகமிக அடிப்படையான பிரச்சினைகள் பற்றி உணர்ந்தவர்களாகத் தங்களைத் தாங்களே வைத்துக் கொள்ளும் ஆற்றல் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் இன்றியமையாதது ஆகும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் நம் நாட்டில் உள்ள இரண்டு பிரச் சினைகள் சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் பற்றிய கவலைதான். பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இயன்ற ஒரு கல்விக் கொள்கையும், அதை நடைமுறைப்படுத்துவ தற்கான முற்றிலும் மாறுபட்ட தீவிரமான கல்வி நடை முறையும் நமக்குத் தேவை. சிந்தனை மிகுந்த விவாதத் துக்குப் பிறகு அதற்கான விரிவான செயல்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
அதுபோன்றதொரு புதிய, தீவிரமான நடைமுறை மக்களுக்கு மருத்துவ வசதிகளை செய்து தருவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போதுள்ள கல்வி மற்றும் மருத்துவ வசதித் திட்டங்கள் மிகப்பெரிய அளவில் பின்னடைவு பெற்றுள்ளவையாகவே தோன்று கின்றன.
போதிய நிதி ஆதாரம் இன்மை, போதுமான் எண்ணிக்கை கொண்ட தரம் வாய்ந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இன்மை, மருத்துவர்கள் இன்மை, தகுந்த கட்டுமானங்கள் இன்மை போன் றவை இதற்கான சில காரணங் களாகும். இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அளிக்கும் எந்த ஒரு முயற்சியின் மய்யமாக, தேர்வு செய்யும் தங்களது ஆற்றலை அழிக்கும் மக்களின் கொடிய வறுமையை ஒழிப்பது இருக்க வேண்டும். மேற்கொள்ள உத்தேசிக்கப்படும் எந்த ஒரு தீர்வு பற்றிய திட்டமும் இதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் பயணிக்க வேண்டிய வளர்ச்சிப் பாதை
நமது மனப்போக்கையும், அரசு நடைமுறைகளையும் மாற்றி ஒழுங்கு படுத்தவேண்டிய தேவை நமக்கிருக்கிறது. பொருளாதா வளர்ச்சிக்காக தொழில்துறை செழிப்படைய வேண்டும். வணிகத்தையும் அதன் மூலமான வளத்தையும் இப்போது நாம் சந்தேகத்துடன் பார்க்க வேண்டும். தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை முடக்குவதற்கு புலனாய்வு அமைப்புகள் பயன் படுத்தப்படக்கூடாது. தனியார் துறையினரிடம் இருக்கும் பணம், அரசிடம் உள்ள பணத்தைப் போல அல்லாமல் மிகுந்த திறமையுடன் பயன்படுத்தப்படுகிறது. அப்படி யிருந்தும் கூட கட்டுமானப் பணிகளுக்காகவும், பொதுத் தேவைகளுக்காகவும் தேவையான நிதி ஆதாரங்களை அரசு திரட்ட வேண்டிய நிலை உள்ளது. சமத்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் அனைவருக்கும் எளிதில் கிடைப்பவையாக இருக்க வேண்டும்.
நமது நாட்டில் கனிம மற்றும் இதர செல்வங்களை விநியோகிப்பதில் சந்தை முறையிலான நடைமுறையைப் பின்பற்றும் நமது விருப்பத்தைப் பற்றி மறுபரிசீலனை ஒன்றை நாம் மேற்கொள்ள வேண்டும். நிலம், அலைக் கதிரி, கனிமங்கள் மற்றும் இதர இயற்கை வளங்களின் விநியோகம் கணினி மூலம் போட்டி அல்லது ஏல நடைமுறையில் செய்யப்படுமானால், நமது தொழில்துறை உலக அளவில் போட்டியிட முடியாததாக ஆக்கப் பட்டுவிடும்.
தொழில்துறையினர் ஈட்டும் லாபத்தில் ஒரு பங்கு பெறுவதற்கு அரசுக்கும் உரிமை அளிக்கும் வகை யில் இயற்கை வள விநியோக நடைமுறை ஒன்று புதிய தாக உருவாக்கி நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். மேலும் உயர்ந்த வட்டி விகிதம் தொழில் துறையையும், வணித் துறையையும் பெரிய அளவில் பாதித்துள்ளது. தொழில் முனைவோர் முறையான கணக்குகளைப் பேணாமல் இருப்பது, லஞ்ச ஊழல் வழிகளை நாடுவதற்கான முக்கிய காரணமும் இதுதான்.
நமது நீதி நடைமுறையும் தரம் தாழ்ந்ததாகவே இருக்கிறது. துறைக்கு வெளியே இருந்து அளிக்கப்படும் அழுத்தத்திற்கு அடிபணியாததாக நீதித்துறை விளங்க வேண்டும். நமது நீதி நடைமுறைத் துறையில் நிலவும் லஞ்ச ஊழல் அரசின் மீதும், நீதித்துறையின் மீதும் குடிமக்கள் கொண்டு இருக்கும் நம்பிக்கையையே அழித்துவிடுகிறது. நமது காவல்துறையும், புலனாய்வுத் துறையும், வரி ஏய்ப்புத் தடுப்பு நிறுவனமும் வெளியில் இருந்து அளிக்கப்படும் அழுத்தத்திற்கு இடம் கொடாமல் செயல்படுபவையாக இருக்க வேண்டும்.
நமது நாட்டின் வளர்ச்சி பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் ஒரு புதிய தொலை நோக்குப் பார்வை ஒன்றை நாம் உருவாக்கிக் கொண்டு அதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும். நாம் சேவை செய்யும் குடி மக் களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நாம் செயல் படத் தொடங்குவோமாக!
நன்றி: "தி இந்து", 23.10.2017
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment