குடியாத்தம், நவ. 14 குடியாத்தம் கீழ்வழித்துணையாங் குப்பத்தில் 28.10.2017 அன்று காலை 10.30 மணியளவில் அன்னை மணியம்மையார் சிந்தனைக்களம் மற்றும் கீழ் வழித்துணையாங்குப்பம் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் மற்றும் தந்தை பெரியார் அவர்களின் சமூக சிந்தனைகள் குறித்த பேச்சுப் போட்டி, பெண் ஏன் அடிமை யானாள்' நூல் பரப்புரை நிகழ்ச் சிகள் ஒரு சேர கிளை நூலகத்தில் நடைபெற்றது.
வாசகர் வட்ட தலைவர் எஸ்.மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி. குடியாத்தம் மகளிர் பாசறை தலைவர் சி.லதா, அன்னை மணியம்மை யார் சிந்தனைகளம் இர. உஷா நந்தினி மற்றும் வினாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்த னர். வாசகர் வட்ட துணைத் தலைவர் மு.பிரபு வரவேற்புரை யாற்றினார்.
சமூக விஞ்ஞானி பெரியார்
கருத்தரங்கில் பெண்கள் முன்னேற்றத்தில் பெரியாரின் பங்கு என்ற தலைப்பில் உரை யாற்றிய வேலூர் மாட்ட மகளிர் பசறை தலைவர் ந.தேன்மொழி தன் உரையில் பெரியார் ஏன் சமூக விஞ்ஞானி என அழைக் கப்பட்டார்? பெரியார் ஏன் ஜாதி ஒழியவேண்டும் என்றார்? என் பதுபற்றியும், பெரியார் பெண் களுக்கு செய்த சாதனைகள் குறித்தும் உரையாற்றினார். மாவட்ட இளைஞரணி ஓவியா அன்புமொழி பேசும்பொழுது தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும், மாண வர்கள் உளவியல் ரீதியாக பிரச் சினைகளை எதிர் கொள்வது எப்படி, எதிர் கால வாழ்வை எப்படி வளமாக்கி கொள்ளலாம் என்றும் உரையாற்றினார். பெண்கள் முன்னேற்றத்தில் பெரியாரின் பங்கு என்ற தலைப் பில் மாணவர்களின் பேச்சுப் போட்டி நடைபெற்றது. வெற் றிப்பெற்ற மாணவர்களுக்கு நூலகத்தின் சார்பில் புத்தகங் களும். குடியாத்தம் மின்வாரியத் தின் சார்பில் பேனாவும் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக் கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட மகளிர் பாசறை சார் பில் பெண் ஏன் அடிமையானாள்' நூல் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன். முற் போக்கு எழுத்தாளர் சங்கம் முல்லை வாசன், முனிராஜ், முனிசாமி வழக்குரைஞர், பரி மளம். சா.குமரன் இளைஞரணி தே.அ.புவியரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நெட் டேரி அமுதா மற்றும் ஆசிரியர் சுப்பிரமணி ஆகியோர் பெண் கள் விழிப்புணர்வு பாடல்கள் பாடினர். இந்நிகழ்வில் ஏராள மான மாணவர்களும் மற்றும் அந்தப்பகுதி பெண்களும் கலந்துகொண்டனர். இறுதியில் நூலகர் எல்.லட்சுமிதேவி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment