தமிழக நியாய விலைக் கடைகளில், இதுவரை ஒரு கிலோ சர்க்கரை 13.50 ரூபாய்க்கு அளிக்கப்பட்ட நிலையில், இன்று (1.11.2017) முதல் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களைத் தவிர்த்து, பிறருக்கு ரூ.25 ஆக விலை உயர்த்தி விற்கப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அதிகபட்ச மாக ஒரு மாதத்திற்கு அய்ந்து கிலோ சர்க்கரை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்தமாதம் முதல் வறுமைக் கோட் டிற்குக்கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே சலுகை விலையில் சர்க்கரை வழங்கப்படும் என்று உணவுத்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
நியாயவிலைக் கடையில் சர்க்கரையின் விலை அதிகரிக் கப்பட்டாலும், வெளிச்சந்தையில் விற்கப்படும் சர்க்கரையின் விலை ஒரு கிலோவிற்கு ரூ.45 ஆக இருப்பதால், நியாய விலைக் கடையில் ஒரு கிலோவிற்கு ரூ.20 அய் அரசு ஏற்றுக்கொண்டு, மானியத்துடன் விற்பனை செய்யப்படுகிறது என்று அரசு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக ஒரு ஆண்டிற்கு ரூ.836.29 கோடி ரூபாயை சர்க்கரைக்கான மானியமாக செலவிட வேண்டியுள்ளது என்றும் தெரிவித் துள்ளது.
இதுநாள் வரை மத்திய அரசு சர்க்கரைக்கு அளித்து வந்த மானியம் கடந்த ஜூன் மாதத்தில் நிறுத்தப்பட்டதால், தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் சலுகை விலையில் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் சர்க்கரை வழங்க ரூ.85.92 கோடி முதல் ரூ.109 கோடி வரை செலவு செய்யவேண்டிய நிலைக்கு ஆளானது என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சர்க்கரை அளிப்பதிலும் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் 10,820 மெட்ரிக் டன் அளித்து வந்ததை வெறும் 1,863 மெட்ரிக் டன்னாகக் குறைத்ததால் தமிழக அரசு இந்த விலை உயர்வை அமல்படுத்தியுள்ளது என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
நியாய விலைக் கடைகளில் சர்க்கரையின் விலையேற்றத் தைக் கண்டித்து, திமுக சார்பில் நவம்பர் 6 ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து நியாய விலைக் கடைகளின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது .
‘‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் பொது விநியோகத் திட்டத்துக்கு ஏற்படும் மோசமான பாதிப்புகள் பற்றி கவலைப்படாமல், தமிழ்நாடு அரசு கையெழுத்துப் போட்ட காரணத்தால்தான், தமிழ்நாடு அரசு இன்றைக்கு ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை விண் ணளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ சர்க்கரையை 25 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலைக்குத் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்’’ என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
‘‘சர்க்கரை விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானியத்தை மத்திய அரசு நிறுத்தியபோது எதிர்க்காமல், தற்போது வறுமைக்கோட்டிற் குக்கீழ் உள்ளவர்களுக்கு ஒரு விலையும், மற்றவர்களுக்கு வேறு ஒரு விலை என்றும் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வது மக்கள் விரோத நடவடிக்கை’’ என்ற கருத்துள்ளது. விலைவாசி உயரும் அளவுக்கு மக்கள் வரு மானம் உயர்ந்துள்ளதா என்பது முக்கியமான வினாவாகும்!
‘‘தமிழகத்தில் மொத்தமுள்ள 2.03 கோடி குடும்ப அட்டைகளில், வெறும் 9.15%, அதாவது 18,64,600 அட்டைகள் மட்டும்தான் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்கீழ் பெறப்பட்டவை. இலவச அரிசி பெறும் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை 1.91 கோடி, அதாவது 94.05% ஆகும். இவ்வளவு பேரை பாதிக்கும் முடிவை அறிவித்து விட்டு, அதனால் ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராசன் மாநில அரசின் குரலாக ஒலித்திருக்கிறார்.
தற்போதைய சூழலில் விலைவாசி எவரெஸ்ட் உயரத்தை தொட்டுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் உணவுச் செலவை ஓரளவிற்கு சமாளிக்க உதவுவது இந்த பொது விநியோக திட்டம். இதிலும் மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் சேர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தின் மூலாதார மான உணவுப்பொருளில் கைவத்து மரண அடி கொடுப்பது நியாயந்தானா? ஏற்கெனவே துவரம்பருப்பை நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக பஞ்சத்துக்கு பயன்படும் மசூர் பருப்பை வழங்கிவருகிறது. நாள்தோறும் பெருகிவரும்பெருவணிக முதலாளிகளின் பொருள்களை வாங்க வற்புறுத்தும் ஒரு வகையான ஏற்பாடாகவும் இது கருதப்படுகிறது. நியாய விலைக் கடைகளை மக்கள் நாடாமல் செய்துவரும் சூழ்ச்சியே இந்த விலையேற்றம்!
மத்திய அரசின் நடவடிக்கை சர்க்கரை விலை உயர்வுக்கு அதிக காரணம் என்பதை முக்கியமாக உணரவேண்டும்.
எப்படியோ இனிப்பான சர்க்கரை கூட ஏழைகளுக்கு இன்றுமுதல் கசக்கவே செய்யும்!

No comments:
Post a Comment