வரும் கல்வியாண்டு (2017-2018) முதல் இந்தியா முழுவதும் தேசிய தொழில் நுட்ப நிறுவனத்திற்கு உள்ளதைப் போல அனைத்துப் பொறியியல் கல்விகளுக்கும் ஒரேமாதிரியான பொதுநுழைவுத்தேர்வை நடத்தும் முடிவை மனித வளத் துறையால் மத்திய அமைச்சரவையின் பார்வைக்கு அனுப் பப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கல்விக் கொள்கையில் மத்திய அரசின் தலையீட்டால் கல்வி காவி மயமாகிக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் மருத்துவ கவுன்சிலின் விதிகளை எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி மாற்றியமைத்து மருத்துவக் கல்விக்கென்று நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வை வலிந்து திணித்துவிட்டது, இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். பாஜக ஆளும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவில் பொது நுழைவுத்தேர்விற்கு எதிர்ப்புகள் கடுமையாக கிளம்பி வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் நுழைவுத் தேர்விற்கு எதிராக நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளது.
டில்லி சென்று மோடியைச் சந்தித்துத் திரும்பிய தமிழக முதல்வர் வலியுறுத்திய கோரிக்கைகளில் முக்கியமானது தமிழகத்திற்கு பொது நுழைவுத்தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்பதே! ‘
நீட்’ விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பொதுமக்களிடமிருந்து கல்வியாளர்களிடமிருந்து, கடுமையாக எதிர்ப்பு கிளம்பிக்கொண்டு இருக்கும்போது மனித வளத்துறை அமைச்சரகம் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது.
தலைநகர் டில்லியில் மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவேடகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, ‘‘மருத்துவ கல்விக்காக நீட் எனப்படும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதே போன்று, பொறியியல் கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வு முறையை அமல்படுத்துவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒரு ஆலோசனையை நாங்கள் நடத்தி முடித்துள்ளோம். பல்வேறு மட்டத்தில் இருந்து கருத்துகளை நாங்கள் கேட்டறிந்தோம். இதனை அடுத்து வரும் கல்வியாண்டு 2017-2018 முதல் இந்த முடிவை நடைமுறைக்குக் கொண்டுவர மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம்‘’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், “மோடி தலைமையினாலான அரசு எந்த ஒரு துறையிலும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர முயன்றுகொண்டிருக்கிறது, இதனடிப்படையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் பேரங்களை ஒழிக்கும் வகையில் மத்திய அரசே பொதுவான நுழைவுத்தேர்வை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பொறி யியல் கல்லூரிகளில் நடக்கும் ஊழல்கள் குறையும். வெளிப் படையான மாணவர் சேர்க்கை மற்றும் தரமான மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேரும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.
நுழைவுத் தேர்வு என்பதே தத்துவ அடிப்படையில் ஊழ லான ஒன்று; அது ஊழலை ஒழிக்கப்போவதாகக் கூறுவது கடைந்தெடுத்த நகைச்சுவைதான்.
இந்தியாவில் அரசு அனுமதிபெற்ற 3,300 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்துடன்இணைக்கப்பட்டுள்ளன.இந்த கல்லூரிகளில் ஆண்டுக்கு 16 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போதைய விதிகளின்படி மாநில அரசுக்கென்று இட ஒதுக்கீட்டின் மூலமும், சில மாநிலங்களில் நுழைவுத்தேர்வு மூலமும், சில மாநிலங்களில் பொது வரையறை மூலமும் மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது.
மத்திய அரசு கல்வித்துறை நடத்தும் பொறியியல் கல்வி நுழைவுத் தேர்வில் (யிணிணி) பல்வேறு மாநிலங்களில் இருந்து 12 லட்சம் மாணவர்கள் நுழைவுத் தேர்வில் பங்கேற்று வருகின்றனர். இந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மத்திய அரசு நடத்தும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில்கின்றனர்.
இந்த நுழைவுத் தேர்வுகளில் சில நூறு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். இந்தப் பொது நுழைவுத் தேர்விற்காக தயார் செய்கிறோம் என்ற பெயரில் பல் வேறுநகரங்களில்சிலதனிநபர்கள்லட்சக்கணக்கில்பணம் பெற்றுக்கொண்டு நுழைவுத் தேர்வு பயிற்சி நடத்தி வரு கின்றனர். இன்றுவரை மத்திய அரசு நடத்தும் பொது பொறி யியல் கல்வி நுழைவுத்தேர்வு என்பது ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தின் மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
மத்திய அரசின் இந்த முடிவுப்படி இனி வரும் காலங்களில் செல்வந்தர்களின் பிள்ளைகள் மட்டுமே பொறியியல் கல் லூரியில் பயிலும் நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பேசும்போது ‘‘இளையவர்கள் தங்களுக்கு தெரிந்த தொழிலைக் கற்றுக்கொண்டு அதிலேயே அவர்கள் ஈடுபடவேண்டும். அவர்களுக்கு தொடர்பில்லாதவற்றை கற்கப் போய் அதனால் ஏற்படும் கால விரயங்களால் பல இளைஞர்களின் எதிர்காலம் வீணாகிப் போகிறது’’ என்று கூறினார். இது ஒரு வகையான பழைய குலக் கல்வித் திட்டம்தானே! மேலும் மறைமுகமாக ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்து இளைஞர்கள் யாரும் உயர்கல்வி பயில்வது அவசியமற்றது என்று கூறினார். அதையே மனிதவளத்துறை பொது நுழைவுத்தேர்வு என்ற பெயரில் தற்போது நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது.
பி.ஜே.பி. என்பது உயர்ஜாதி - பார்ப்பன ஆதிக்கத் தன் மையைக் கொண்டது என்பதால் - இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது என்பது வெளிப்படை.. நேரடியாக எதிர்க்க முடியாதபோது அவர்களுக்கே உரித்தான சூழ்ச்சி நுழைவுத் தேர்வு என்ற கண்ணிவெடியாக வருகிறது - எச்சரிக்கை!
No comments:
Post a Comment