Wednesday, July 20, 2016

கலைஞர் கூறியதில் குற்றம் என்ன?



- மின்சாரம்
மத்திய அரசுக்கு சொந்தமான அஞ்சல் அலுவலகத் தில் கங்கை நீர் விற்பனை செய்வது பற்றி திமுக தலைவர், முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் கருத்து ஒன்றைக் கூறிவிட்டாராம்.
அவர் என்ன தவறாகக் கூறிவிட்டார்? ஒரு மதச்சார்ப்பற்ற அரசின் அலுவலகத்தில் குறிப்பிட்ட மதம் சார்ந்த ஒன்றை விற்பனை செய்வது சட்ட விரோதம் தானே? திருநீறு குங்குமம் கூட விற்பார்கள் போலும் என்று கூறியிருக்கிறார். உடனே, ஆகா எப்படி சொல்லலாம் கலைஞர்?  இந்துக்களாகிய எங்கள் மனதைப் புண்படுத்தி விட்டார் என்று கூறி, கலைஞர் வீட்டுக்கு குங்குமம் வகையறாக்களை அனுப்பி வைத் தார்களாம். தமிழக பிஜேபி தலைவரும் கலைஞர் அவர்களின் கருத்துக்கு எதிராக துள்ளிக் குதித்தி ருக்கிறார்.
ஆத்திரப்படுகிறார்களே தவிர, தமிழக மூத்த தலைவர் எழுப்பிய கேள்விக்கு அறிவார்ந்த முறையில் பதில் அவர்களால் சொல்ல முடிந் துள்ளதா? அறிவு வேலை செய்ய முடியாத இடத்தில் ஆத்திரம்தானே அலை மோதிக் கிளம்பும்.
இந்த ஆத்திரக்காரர்களுக்கு ஒரு சரியான சவுக்கடி செய்தி வெளிவந்துள்ளது.
எந்த அஞ்சல் அலுவலகம் கங்கை நீரை விற்கிறதோ அந்த அஞ்சல் துறையே ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினைச் செய்திருக்கிறது.
“கங்கை நீர் மாசு அடைந்துள்ளது,  எனவே குடிப்பதற்கு உகந்ததல்ல” என்று அஞ்சல்துறை அதிகாரி அறிவித்து விட்டாரே!
இது என்ன கொடுமை! குடிப்பதற்கு உகந்ததல்ல என்று தெரிந்திருந்தும் கங்கை நீரை மத்திய அரசு விற்கிறது என்றால், இது மக்கள் விரோத அரசுதானே!
அஞ்சல் துறையின் இந்த அறிவிப்புக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
ஆகா, புனித கங்கை நீரைக் குடிப்பதற்கு உகந்ததல்ல என்று அவமானப்படுத்தலாமா? அஞ்சல் துறை அதிகாரி, கறுப்புச் சட்டைக்காரரா? கருணாநிதியின் ஆள் என்று சொல்லப் போகிறார்களா?
கங்கை நீரில் தொற்று நோயை உண்டாக்கும் கார்சினோ ஜென்ஸ் (CARCINOGENS) எனப்படும் புற்று நோயை உண்டாக்கக் கூடிய காரணிகள்  உள்ளன என்று தேசிய புற்று நோய்ப் பதிவு மய்யம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழக பிஜேபி தலைவராக இருக்கக் கூடியவர் ஒரு டாக்டராக இருந்தும், அறிவியல் ரீதியாக இந்தப் பிரச் சினையை அணுகியிருக்க வேண்டாமா? மதப் போதை கருத்துக் கண்களைத் திரையிடலாமா? மதத்தை ஒரு அபின் என்று புரட்சியாளர் லெனின் சொன்னதுதான் எவ்வளவு சரியானது!
கங்கை நீர் மட்டுமல்ல - புனித நீர் என்று சொல்லப்படுகிற  அய்யப்பன் கோவில் பம்பை நதியாக இருந்தாலும் சரி, கும்பகோணம் மகாமகக் குளமாக இருந்தாலும் சரி எல்லாமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தானே!
கும்பகோணம் மகாமகக் குளத்துத் தண்ணீர் என்பது என்ன?
மலக்கழிவு 28 சதவிகிதம், மூத்திரக்கழிவு
40 சதவிகிதம் ஆகும். இதை நாங்கள் சொல்ல வில்லை. மகாமக நிகழ்ச்சி முடிந்த பின்பு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த ஆணையின் அடிப்படையில்  அக்குளத்து நீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அந்த ஆய்வுதான் இந்தக் தகவலைக் கூறுகிறது.
அய்யப்பன் கோயில் பம்பை நதியின் யோக்கிய தைதான் என்ன?
பம்பை நதி மலக்காடாகவே காட்சி அளிக்கிறது. மலத்தின் வாடை அறிந்த பன்றிகள் மொய்க்கின்றன.
மதம் என்ற போர்வையில் மனித அறிவு நாச மடைகிறது - உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் கூறிய கருத்தை ஒரு கணம் யோசித்து பார்க்கட்டும் - டாக்டர் படித்த தமிழிசை சவுந்தரராஜன்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...