Thursday, June 9, 2016

13 ஆம் எண்


சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.கே.சந்துரு அவர்களின் கட்டுரை ஒன்று நேற்றைய இந்து (தமிழ்) நாள் ஏட்டில் வெளிவந்துள்ளது.

கேரளாவில் அமைச்சர் களிடம் வாகனங்கள் ஒப்படைக் கப்பட்டன. அந்த வரிசையில் 13 ஆம் எண் கொண்ட வாகனத்தைக் காணவில்லை. 13 ஆம் எண் இராசியில்லாததாம் - அதுதான் காரணமாம்.

இடதுசாரி அமைச்சரவையில் உள்ள நிதியமைச்சர் தாமஸ் அய்சக் அவர்கள் தானாக முன் வந்து தனது வாகனத்துக்கு 13 ஆம் எண்ணைப் பெற்றுக் கொள்ள முன்வந்தார்.
படித்தவர்கள், நீதிபதிகள்கூட 13 ஆம் எண் என்றால் அஞ்சுகின்ற மூடநம்பிக்கைபற்றி நீதிபதி கே.சந்துரு அவர்கள் அலசித் தள்ளியிருக்கிறார்.

இத்தகு முட்டாள்தனம் படிக் காத பாமரர்களிடத்தில் மட்டு மல்ல; படித்த பாமரர்களிடத் திலும்கூட உண்டு.

சென்னை மாநகராட்சியில் வீட்டுக்கு இலக்கம் இடும்பொழுது 13 என்பதற்குப் பதிலாக 12-ஏ என்றுதான் குறிப்பிடுவார்கள். ஒருமுறை அந்த நிலை வந்த போது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தமது இல்லத்துக்கு அந்த 13 ஆம் எண்ணைத் தவிர்க்கவேண்டாம்; கட்டாயம் பதிவு செய்யுங்கள் என்றாரே பார்க்கலாம்.

டில்லி உயர்நீதிமன்ற நீதி பதியாக இருந்தவர் குரோவர் என்பவர். அவர் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தபோது குற்றவாளி ஒருவன் அவரைக் கத்தியால் குத்திவிட்டான். உட னடியாக டில்லி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவர் கண் திறந்து பார்த்தபோது அறை எண் 13 என்றிருந்ததைக் கண்டு கூக்குரல் போட்டார்.

‘‘நான் 13 ஆம் தேதிதான் கத்தியால் குத்தப்பட்டேன்; நான் விசாரித்த வழக்கு எண் 13 - அப்பொழுதுதான் அந்தக் கத்திக் குத்தும் நடந்தது; உடனே என்னை இந்த அறையிலிருந்து வேறு அறைக்கு மாற்றுங்கள்’’ என்று கத்தினார். சிறிது நேரத்தில் அவர் தூங்கியபோது, 13 என்ற எண்ணை எடுத்துவிட்டு, 12-ஏ என்று போட்டு விட்டனர் - அதே அறைதான் - ஆனால், அவருக்கு அது தெரியாது. 12-ஏ என்று பார்த்தவுடன் நிம்மதி அடைந்தார் அவர்.

இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும்கூட இந்த மூடத்தனம் உண்டு.

பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத் தங்கை  1930 ஆகஸ்டு 21 ஆம் தேதி பிறந்தார். ஆனால், பிறந்த அந்தக் குழந்தையை உடனடியாகப் பதிவு செய்ய வில்லை. பிறந்த நாளன்று பதிவு செய்திருந்தால், அந்தக் குழந்தை 13 ஆம் எண் வரிசையில் இடம் பெற்றிருக்குமாம்.

1965 ஆம் ஆண்டில் இங்கி லாந்து அரசி எலிசபெத் ஜெர்மனி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டி ருந்தார். ஒரு இடத்தில் ரயில் பயணத்தை மேற்கொள்ள வேண் டியிருந்தது. டூயிஸ் பர்க் என்பது அந்த ரயில் நிலையத்தின் பெயர்.

இராணியார் பயணம் செய்ய வேண்டிய ரயில் 13 ஆம் பிளாட்பாரத்திலிருந்து புறப்படத் தயாரானது. அவ்வளவுதான், பதின்மூன்றா? வேண்டவே வேண்டாம் என்று அலறினார்!
அரசியாயிற்றே - அவரை அலற விடலாமா? என்ன செய்தார்கள் தெரியுமா? ரயிலை வேறு பிளாட்பாரத்திலிருந்து புறப்பட ஏற்பாடு செய்தார்கள்.

மூடத்தனம் இந்தியாவிற்கு மட்டும் சொந்தம் அல்லவே!

- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...