லண்டன், நவ.15 நவம்பர் மோடி குளிர் கால சுற்றுலாப் பயண மாக இங்கிலாந்து சென் றுள்ள நிலையில், மோடிக்கு இங்கிலாந்தில் கடுமையான எதிர்ப்பு மற்றும் போராட் டங்களை லண்டன் வாழ் இந்தியர்கள் நடத்தியுள் ளனர்.
இந்தப் போராட் டத்தில் கலந்துகொண்ட லண்டன் நகர மேயர் கூறியதாவது: ரத்தக்கறை படிந்த கரங்களுடன் மோடி வந்திருப்பதாகவும், அவருடன் இங்கிலாந்து பிரதமர் கேமரூன் கை குலுக்குவது வெட்கக் கேடானது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், “மோடி, இந்தியா என்ற பெரிய நாட்டின் பிரதமர்தான், ஆனால் அவர் ஒன்றும் சிறந்த பிரதமர் அல்ல, மோடியின் கரங்களில் ரத்தக்கறை படிந்துள்ளது, அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கக் கூடாது’’ என்றும் கால் லோவே தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடந்த இந்தப் போராட்டத்தில், தமிழர்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள், நேபாளிகள், காஷ்மீரிகள் மற்றும் பெண்கள் அமைப்பினர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஒன்றிணைந்து போரட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் மோடியை இங்கிலாந்துக்கு அழைத்த குஜராத் ஹிந்து அமைப் பைச் சேர்ந்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மோடி லண்டனில் காலடி வைத்த நாளில் துவங்கி, நூற்றுக்கணக் கான இந்தியர்கள் திரண்டு, “கொலைகாரனே திரும் பிப் போ’’ முழக்கத்துடன் பிரம்மாண்ட போராட் டங்களை லண்டனில் நடத்தியுள்ளனர்.
டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா என்ற பெயரில் இந்தியாவை விற்பனை செய்ய மோடி முயற்சிப்பதாகவும்; இந் தியாவில் கட்டமைக்கப் பட்டு இருந்த மதச்சார் பின்மை மீது மோடியின் ஆட்சியில் பெருந்தாக்கு தல் நிகழ்த்தப்பட்டு வருவ தாகவும் இந்த ஆர்ப்பாட் டங்களில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பி உள்ளனர்.
பாதி ஹிட்லர் முகத் துடனும், பாதி மோடி புகைப்படத்துடனும் உள்ள பதாகை இங்கி லாந்து பிரதமர் கேம ரூனை பிரதமர் மோடி சந்தித்த போதும், அவ ருக்கு எதிராக போராட் டங்கள் அரங்கேறின.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- ஆயுர்வேதத்தில் மாட்டிறைச்சி மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது
- மதவாத அடிப்படையில் மக்களிடம் பிளவை உண்டாக்க இந்துவாத நோக்கில் வரலாற்றை உருவாக்கும் அபாய போக்கு!
- சுயமரியாதை இயக்க மகுடத்தில் இதோ ஒரு வைரக் கல் வெற்றி! அதன் வரலாற்றில் இது ஒரு நல்ல பரிசு!
- பிகார் தேர்தல்: பார்ப்பன ஆதிக்கம் தகர்ந்தது!
- பிகார் தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன? தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன?
No comments:
Post a Comment