Friday, November 27, 2015

இந்தியாவில் மத மோதல்: வெளிநாட்டு மாணவர்கள் வருகைக் குறைவு உள்துறை அமைச்சகம் ஒப்புதல்




புதுடில்லி, நவ.27 - இந்தியாவில் மத மோதல் கள் அதிகரித்து வருவதால் இந்தியாவிற்குக் கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண் ணிக்கை குறைந்துள்ளது என்று இந்தியாவின் உள்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்து உள்துறை அறிக்கை கூறுவதாவது: மதமோதல் காரண மாக, கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர் களின் எண்ணிக்கை 73 விழுக்காடு குறைந்துள்ளது. 
ஆப்பிரிக்கா மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளில் இருந்து மருத்துவம், வணிகக் கல்வி, பொருளாதாரம், மொழியியல் கல்வி போன் றவற்றை கற்க ஆண்டு தோறும் இந்தியாவிற்கு மாணவர்கள் வந்து கொண்டு இருப்பார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் இந்தியா விற்கு கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கை கடுமையான அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. 
இது குறித்து பெங் களூரு அய்.அய்.எம்., மத்திய உள்துறை அமைச் சகத்தின் அறிக்கையை மய்யமாக வைத்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு பொருளாதாரக் கல்வி மய்யங்களில் ஜெர் மனி, கொரியா, பிரான்ஸ், சீனா, சிங்கப்பூர், மற்றும் மத்திய ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பல்வேறு மாண வர்கள் கல்வி பயில இந்தியா வருகின்றனர். ஆனால் கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் ஏற்பட் டுள்ள அசாதாரண சூழலின் காரணமாக திடீரென்று மாணவர்களின் வருகை குறைந்துவிட்டது,
பொதுவாக இயற்கை காரணங்களால் மாணவர் களின் வருகைகள் சிறிது குறைவது எப்போதும் நடைமுறையில் உள்ளது, இது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை, ஆனால் 2014-2015 ஆம் கல்வி ஆண்டில் எப்போது மில்லாத அளவில் 73 விழுக்காடு மாணவர்கள் வருகை குறைந்துள்ளது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. 2013-2014 ஆம் கல்வி ஆண்டில் மாணவர் களின் வருகை 13,961-ஆக இருந்தது, 
ஆனால் 2014-2015 ஆம் ஆண்டில் வெறும் 3,737 மாணவர்களே வருகை புரிந்துள்ளனர். பிரதமர் மோடி சிங்கப் பூர் மற்றும் மலேசியா சென்று தொழில் முதலீடு குறித்து பேசிக்கொண்டு இருக்கும் அதே நேரத்தில் மலேசியாவில் இருந்து 2013 ஆம் ஆண்டு 4000 மாண வர்கள் வருகை புரிந்துள் ளனர். ஆனால் இந்த ஆண்டு மலேசிய மாண வர்களின் வருகை முற் றிலும் இல்லாமல் போனது, 
அதே நேரத்தில் சிங்கப்பூர் மாணவர்கள் 200 பேர் 2013-2014 ஆம் ஆண்டு கல்வி பயில வந்தனர். இந்த கல்வியாண்டில் வெறும் 53 பேர்தான் கல்வி வருகை புரிந்துள்ளனர்.   முக்கியமாக வணிகக் கல்வி நிறுவனங்கள், மருத் துவக் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர் களின் வருகைக் குறைவால் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளன.
வெளிநாட்டு மாணவர் களின் வருகையால் பல் கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங் களுக்கு வருமானம் மட்டுமின்றி இந்திய மாணவர்களுக்கு அந்நிய நாட்டுக்கலாச்சாரம் மற்றும் மொழியறிவு பெற வும் பேருதவியாக இருந் தது, வெளிநாட்டு மாண வர்களின் வருகையின்மை யால் அதிக இழப்பு அவர் களுடன் இணைந்து பயிலும் இந்திய மாணவர் களுக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...