Monday, November 9, 2015

ஒரு மதவாத யதேச்சதிகார ஆட்சி பற்றிய எச்சரிக்கை




கலாச்சார சகிப்புத் தன்மையின்மையே இன்றைய அரசின் செயல்பாடுகளில் மிகுந்த ஆதிக்கம்  செலுத்தும் அம்சமாக விளங்குவதாகும். நாம் என்ன உண்ணவேண்டும், எதை உடுத்தவேண்டும், எதைப் படிக்கவேண்டும், எதைப்பார்க்க வேண்டும், எதை நாம் நேசிக்கவேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்ய அது விரும்புகிறது
இந்துத்துவக் கோட்பாட்டின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் ராஷ்டி ரிய சுயம் சேவக் சங்கம், மற்றும் அதன் தாக்கத்தை அதிகமாகக் கொண்டி ருக்கும் பா.ஜ.க. அரசு பற்றி இத்தகைய கேள்வி ஒன்றை  நாம் கேட்கக் கூடும். பகுத்தறிவு மற்றும் காரணகாரிய களத் திலிருந்து நாட்டை வெகு தூரத்துக்கு அனுப்ப இயன்ற ஒரு இந்து மத யதேச்சதிகார ஆட்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோமா? இழப்புக் கேடாக அதுதான் உண்மை  என்பது போலவே தோன்றுகிறது.
மக்களாட்சி சமூகத்தில் நிலவுவது போலவே,  பகுத்தறிவு மற்றும் காரண காரிய, நியாய உணர்வின் அடிப் படையில் இயங்கும் எந்த ஒரு சமூகத் திலும், கருத்து மாறுபடுவது என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடு என்ற முறையில் நியாயமான கருத்து வேறுபாடுகளுக்கு ஊக்கம் அளிக்கப் படுகிறது. இன்றைய இந்தியாவில், தற்போதைய அரசின் பொதுக் கொள் கையின் ஒரு பகுதியாக நியாயமான கருத்து மாறுபாட்டுக்கான இடம்   குறைக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் அதன் இடம் சுருங்கிக் கொண்டே வருகிறது.
அதன் விளை வாக, எந்த  மாறுபாட்ட கருத்தையும் சகித்துக் கொள்ள இயலாத தன்மை வளர்ந்து கொண்டே வருகிறது. இவ் வாறுதான், கர்நாடக மாநிலத்தில் ஹூசங்கி பிரசாத் என்னும் தாழ்த் தப்பட்ட மாணவ எழுத்தாளர் கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்டு, ஜாதி பாகுபாடு களைப் பற்றியும், இந்து கடவுள்களை அவமதித்தும் எழுதியற்காக ஒரு கும்பலால் அடித்து நொறுக்கப் பட்டுள்ளார். ஜாதி நடைமுறையே இந்து சமூகத்தின் ஒரு பேரிழிவாக இருந்து கொண்டிருக்கிற போதிலும்,  இன்னமும் அதிகமான ஆர்வத்துட னும், வேகத்துடனும் அது கடைபிடிக் கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் பரீதாபாத் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீட்டின் மீது  ஒரு கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் இரு தாழ்த்தப்பட்ட குழந்தைகள்  உயி ருடன் எரிக்கப்பட்டது போன்ற தாழ்த் தப்பட்ட மக்களுக்கு எதிரான குற் றங்கள் அதிகரித்து வருவதிலிருந்து இது தெரிகிறது. இத்தகைய வன் முறைச் செயல்கள் மட்டுமன்றி,  பசுமை அமைதி (green peace) போன்ற நன்கு அறியப்பட்ட அமைப் புகளுக்கு எதிராகவும், டீஸ்டா ஸ்டே வல்வாட் போன்ற தனிப்பட்டவர் களின் மீதும் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுக் கெண்டே இருக்கின்றன. இதற்குக் காரணமே மாறுபட்ட கருத்தை வெளியிட அவர்கள் துணிந்ததுதான்.
பகுத்தறிவுக்கு ஒவ்வாதவைகளை ஆதரித்து வளர்த்தல்
நமது அரசமைப்புச் சட்ட 51ணீ(லீ)  பிரிவின்படி அறிவியல் மனப்பான்மை, மனித நேயம், எதையும் கேள்வி கேட்டு ஆராயும் தன்மை, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அவ் வாறாக இருக்கையில்,  அறிவியல் மனப்பான்மையைக் கடைபிடிப்பதில் உள்ள மாபெரும் தடையே நமது அரசு தான். அறிவியல் மனப்பான்மை என்ப தற்கு,  பகுத்தறிவு, காரணகாரிய, நியாயக் கோட்பாடுகளில் வேர் கொண்டுள்ளது என்ற விளக்கம் அளிக்கப்படுகிறது.
கடந்த காலத்தில் இருந்த எந்த ஓர் அரசும் இவ்வளவு குறைந்த அளவிலான அறிவி யல் அறிதலைப் பெற்றிருக்கவில்லை. நாட்டின் முன்னேற்றச் செயல் திட்டத்தின் மீது ஒரு மிகப்பெரிய எதிர் மறை பாதிப்பை இதனால் ஏற்படுத்த இயலும்.
ஒரு கோளிலிருந்து மற்றொரு கோளுக்குப் பறந்து செல்லக்கூடிய மிகப் பெரிய விமானங்களை நாம் கொண்டி ருந்ததோம் என்றும்,  மனித முண்டத்தின் மீது யானைத் தலையை அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடிந்தது  என்றும்  நமது கடந்த காலத்தைப் பற்றிய அறிவற்ற மூடத்தனமான உரிமைக் கோரல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதிகாச பாத்திரங்களையும்,  வரலாற்று நாயகர்களையும் கடவுள்களாகக் காட்டும் மத நம்பிக்கைகளுக்கு  ஏற்றவாறு வர லாறு திரித்துக் கூறப்படுகிறது; எழுதப்படு கிறது. பகுத்தறிவு, நியாயத்தன்மை அல்லது மதச்சார்பின்மை என்னும் மதிப்பீடுகளை விட்டுத் தள்ளுங்கள்;  அவற்றின் மீது மட்டுமன்றி, நாட்டின் சட்டதிட்டங்கள் மீதும் சற்றும் மரியாதை அற்ற அமைப்புகளின் மறைமுகமான ஆதரவுடன், இந்துத்துவ செயல்திட் டத்தை நாடு முழுவதிலும் திணிப்பதற் கான திட்டமிடப்பட்ட, அமைப்பு ரீதி யிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருக்கும் சிவசேனா கட்சியின ரால் அண்மையில், பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷி முஹமத்தால் எழுதப்பட்ட நூல் ஒன்றினை வெளியிட முன்வந்ததற்காக,  அப்சர்வர் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் சுதீந்திர குல்கர்னி முகத்தின் மீது கருப்பு மை அடித்தது,  பாகிஸ்தானைச் சேர்ந்த இசைக் கலைஞர் குலாம் அலி மும்பை யில் இசை நிகழ்ச்சி நடத்துவதை அனு மதிக்காமல் எதிர்த்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் குழும அதிகாரிகளுடன் கூடிப் பேசிக் கொண்டிருந்தபோது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்  அலுவலகத்திற்குள் நுழைந்து கலவரம் செய்தது போன்ற நிகழ்ச்சிகளை எடுத் துக்காட்டாகக் கூறலாம்.
சுயசிந்தனை யாளர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மட்டுமன்றி, சிறுபான்மையின மக்கள் தங்களை இரண்டாம் தர குடி மக்களைப் போன்று உணரச் செய்யப்பட்டுள்ளனர். கிறித்துவ தேவாலயங்கள் தாக்கப்பட்டன. அண்மையில் டில்லிக்கு அருகில் உள்ள டாட்ரி என்ற இடத்தில் வசித்து வந்த முஹமது அக்லக் என்பவர், மாட்டிறைச்சி அருந்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்; அவரது மகன் படுகாயமடைந்தார். இந்த நிகழ்வை பா.ஜ.க. சட்டமன்ற உறுப் பினர்கள் சங்கீத் சோமும், சாக்ஷி மகராஜூம் நியாயப்படுத்திப் பேசினர்.
இந்தியாவில் முஸ்லிம் மக்களின் எண் ணிக்கை இந்து மக்களின் எண்ணிக் கையை விட வேகமாக அதிகரித்து வருவதைத் தடுப்பதற்காக, அய்ந்துக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் இந்துக்களுக்கு பரிசு வழங் கப்படும் என்று இந்து மதவாத அமைப்பு ஒன்று அறிவித்தது. இதற்கிடையே, மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயின் பிறந்த நாளான நவம்பர் 15 தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படும் என்று இந்து மகாசபை அறிவித்துள்ளது.
முக்கியமான பணிகளைத்  தனியார் மயமாக்குவது
எந்த ஒரு நல்ல மக்களாட்சி நாட்டிலும், 18 ஆம் வயது - 12 ஆம் வகுப்பு வரை யிலான கல்வியும், சுகாதரத் துறையும் அரசினால் கவனித்துக் கொள்ளப்படும்.  இவ்வாறிருக்க, இந்தியாவில் கல்வி, சுகாதாரம் ஆகிய இரு துறைகளும், பணம் படைத்தவர்கள் மட்டுமே அணுக இயலும் அளவில், தனியார் மயமாகவும், வணிக நோக்கம் கொண்டதாகவும் ஆக்கப்பட் டுள்ளது. இது யதேச்சதிகாரத்தின் பண்பைக் காட்டுவதாகும்.
நாட்டில் உள்ள மிக உயர்ந்த அரசு பதவிகளை நிரப்பும்போது,  தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதற்கு மாறாக,  ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புள் ளவர்களும், அரசியல் செல்வாக்கு பெற் றவர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்கு ஒரு எடுத்துக் காட்டாக, கஜேந்திர சவுஹான் இந்திய திரைப்பட, தொலைக் காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதைக் கூறலாம். இது அந்த நிறுவன மாணவரிடையேயும், திரைப்படத் தயாரிப்பாளர்களிடையேயும் எதிர்ப் பினை உருவாக்கியுள்ளது.
எதை நாம் உண்பது,  எதை நாம் உடுத்துவது,  யாரை நாம் நேசிப்பது, எந்த நூல்களை நாம் படிப்பது,  எந்த திரைப் படங்களை நாம் பார்ப்பது என்பதை முடிவு செய்ய விரும்பும் தற்போதைய அரசின் செயல்பாடுகளில் கலாச்சார சகிப்புத் தன்மையின்மை என்பது பேராதிக் கம் செலுத்தும் ஓர் அம்சமாக விளங்கு கிறது.  இதற்கு முன் இருந்த எந்த அரசும் இவ்வாறு செய்ததில்லை. பண்டைய இந்தியாவில் மாட்டிறைச்சி உண்பது அனு மதிக்கப்பட்டிருந்ததை அறியாததாகவே அரசு இருக்கிறது என்றே தோன்றுகிறது. ஆயுர்வேத நூலான சாரக சம்ஹிதாவில், மாட்டிறைச்சியின் தன்மைகள் கீழ்க் கண்டவாறு கூறப்பட்டுள்ளன. அதிக வாயுத் தொல்லை, சளித் தொல்லை, விட்டுவிட்டு வரும் காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு, கடினமான உடலுழைப்பால் ஏற்படும் அதிகபசி போன்ற உடற்குறைபாடுகளுக்கும், அவற்றால் ஏற்படும் உடல் இளைப்புக்கும் மாட்டிறைச்சி மிகவும் சிறந்த உணவாகும்.
எந்த ஒரு மதமும், பிற மதங்களை விட உயர்ந்தது அல்ல என்பதையும், அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு, காரணகாரிய கோட்பாடுகளுக்கு எதி ரான கூறுகள் இந்த அனைத்து மதங் களிலுமே உள்ளன என்பதையும் இந்துத் துவத்தைப் பிரச்சாரம் செய்பவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
அனைத்து யதேச்சதிகாரிகளும்,  அறிவாளிகளுக்கு எதிரானவர்களே ஆவர் என்பதை வரலாறு நமக்குக் கூறுகிறது. அதனால், 300 க்கும் மேற் பட்ட அறிஞர் பெருமக்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட தேசிய விருதுகளைத் திருப்பி   அளித்துனர் என்ற உண்மை யின் காரணத்தைப் பரிசீலனை செய்து அறிந்து கொள்ள முயல்வதற்கு மாறாக,  இவர்களை தேசவிரோதிகள் என்றும், பிளவை ஏற்படுத்துபவர்கள் என்றும் தற்போதைய அரசு அழைப் பதில் வியப்பேதும் இருக்க முடியாது.
மேலே பட்டியலிடப்பட்டுள்ளவை இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெற்ற நிகழ்வுகளின் ஒரு பகு தியே அன்றி முழுமையான பட்டி யலன்று. பா.ஜ.க.  மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளின் முக்கிய நோக்கமே,  இந்திய ஜனநாயகக் கட்டமைப்பை சீர்குலைத்து, அதனை ஒரு இந்து மத யதேச்சதிகார நாடாக ஆக்குவதுதான்  என்பதை நம்மால் காண இயன்ற ஏராளமான சாட்சியங் களிலிருந்து தெரிய வருகிறது.
தொழில் ரீதியிலான உயிரியல் ஆய்வாளர் என்ற முறையில்,   ஒரு முக்கியமான உயிரியல் கோட் பாட்டைக் குறிப்பிடுவதுடன் எனது கட்டுரையை நிறைவு செய்து கொள் கிறேன்.  பல்வகையானவை என்பது  புதிய உருவாக்கத்திற்கும், ஒன்றுபோல இருப்பது என்பது அழிவிற்கும் வழி வகுக்கும் என்பதுதான் அந்த கோட் பாடு. இந்தியா பெற்றுள்ள மாபெரும் சொத்தே, ஒவ்வொரு பகுதியிலும் அது பெற்றிருக்கும் பன்முகத்தன்மைதான். இந்தியா ஒரு இந்து மத யதேச்சதிகார நாடாக ஆகாமல் இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், இந்த பன் முகத்தன்மையை நமது செயல்களின் மூலம் மதிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நன்றி : ‘தி ஹந்து’ 3-1-2015                                                                                                                                                                                                          தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...