பிகாரில் மீண்டும் நிதீஷ் ஆட்சி
லக்னோ, நவ.9_ பிகார் சட்டப்பேரவைத் தேர் தலில், அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைமை யிலான மதச்சார்பற்ற மகா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கூட்டணி, மொத் தம் உள்ள 243 இடங் களில் 178 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து, நிதீஷ் குமார் மீண்டும் பிகார் மாநில முதல்வராகிறார். மதச்சார்பற்ற கூட்ட ணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்ட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 58 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 53 இடங் களைக் கைப்பற்றியுள்ளது.
பிகாரில் 16-ஆவது சட்டப்பேரவைக்கான தேர்தல், கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் நவம்பர் 5-ஆம் தேதி வரை, அய்ந்து கட்டங்களாக நடைபெற் றது. இந்தத் தேர்தலில், ஆளும் அய்க்கிய ஜனதா தளம் தலைமையிலான மதச்சார்பற்ற மகா கூட்டணி ஓரணியாகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட் டணி மற்றொரு அணி யாகவும் களம் கண்டன. இதில், 272 பெண்கள் உள்பட மொத்தம் 3,450 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர்.
பாஜக-காங்கிரஸுக்கு கவுரவப் பிரச்சினை:
கடந்த ஆண்டு டில்லி சட்டப்பேரவைத் தேர்த லில் சந்தித்த படுதோல் வியை ஈடுகட்டவும், மாநிலங்களவையில் கட்சி யின் பலத்தை அதிகரிக்க வும், பிகார் பேரவைத் தேர்தல் பாஜகவுக்கு மிக வும் முக்கியமாகக் கருதப் பட்டது.
இதேபோல், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படு தோல்வியால் குறைந் துள்ள கட்சியின் செல் வாக்கை மீட்டெடுக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி, பிகாரில் செல்வாக்கு மிக்க மாநிலக் கட்சிகளான அய்க்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவற்றுடன் கைகோத்து தேர்தலைச் சந்தித்தது.
அறுதிப் பெரும்பான்மை:
இறுதியில், அய்க்கிய ஜனதா தளம் தலைமை யிலான மதச்சார்பற்ற மகா கூட்டணி, மூன்றில் இரண்டு பங்கு இடங் களைக் கைப்பற்றி மாபெ ரும் வெற்றி பெற்றது. பிகார் சட்டப்பேரவையில் அறுதிப் பெரும்பான்மை பெற 122 இடங்களே போதுமான நிலையில், இந்தக் கூட்டணி 178 இடங்களை கைப்பற்றியுள் ளது.
இதையடுத்து, நிதீஷ் குமார் மீண்டும் பிகார் முதல்வராகிறார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி அதிகரிப்பு
- மாட்டிறைச்சி சாப்பிட்டால் கர்நாடக முதல் அமைச்சர் தலை துண்டிக்கப்படுமாம் மிரட்டிய பாஜக தலைவர் கைது
- சிறுவனின் தலையை செருப்பணிந்த காலால் உதைத்துத் தள்ளிய பா.ஜ.க. பெண் அமைச்சர் எதிர்க்கட்சிகள் கண்டனம்
- மக்களைப் பிளவுபடுத்தும் மதவெறி அமைப்புகள் அணுகுண்டை விட ஆபத்தானவை குடியரசுத் தலைவருக்கு விஞ்ஞானிகள் கடிதம்
- 45 ரயில் நிலையங்களில் இணைய வழியில் உணவு முன்பதிவு செய்யும் வசதி தொடங்கியது
No comments:
Post a Comment