Monday, November 16, 2015

தூய்மை இந்தியா திட்டத்துக்காக வரி விதிப்பதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி கண்டனம்



புதுடில்லி, நவ. 16_- தொலைபேசி கட்டணம், ஓட்டலில் சாப்பிடுவது மற்றும் தங்குவதற்கான கட்டணம், காப்பீடு தொகை போன்றவற்றுக்கு முன்பு 14 சதவீதம் சேவை வரி விதிக்கப்பட்டு வந்தது. கடந்த மே 31-ஆம் தேதி வரை 12.36 சதவீதம் தான் சேவை வரி விதிக்கப்பட் டது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ஜூன் 1-ஆம் தேதி முதல் சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் தூய்மை இந்தியா திட்டத்துக்காக சேவை வரி மேலும்  சத வீதம் உயர்த்தப்பட்டுள் ளது. இந்த திட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காக சேவை வரியை கடந்த 6ஆம் தேதி மத்திய அரசு  சதவீதம் உயர்த்தியது. இந்த வரி உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
தூய்மை இந்தியா திட்டத்துக்காக சேவை வரி உயர்த்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது. டில்லியில் நேற்று (15.11.2015) அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதா ராம் யெச்சூரி நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறிய தாவது:-
துவரம்பருப்பு, காய்கறி மற்றும் பெட்ரோல், டீசல் விலைஉயர்வால் சாமா னிய மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், தற்போது உயர்த்தியுள்ள சேவை வரி உயர்வால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள னர். தங்களை விளம்பரப் படுத்திக்கொள்வதற்காக மோடி அரசு, மக்களின் வயிற்றில் அடிப்பது எந்த விதத்தில் நியாயம்?.
மோடியை முன்னி லைப்படுத்தி தூய்மை இந் தியா திட்டத்தை விளம் பரப்படுத்த எவ்வளவு பணம் செலவிடப்பட் டது?. இதனை மக்களுக் கும், நாடாளுமன்றத்திற் கும் அரசு தெரியப்படுத்த வேண்டும். பிரதமர் விமா னத்தில் உலகம் முழுவ தும் சொகுசாக பயணம் மேற்கொள்கிறார். ஆனால் சாதாரண மக்கள் சுகா தார வசதிகளே இல்லாத ரயில்களில் பயணம் செய் கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...