Thursday, November 5, 2015

மோடியின் காஷ்மீர் பயணம்: காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் 300க்கும் மேற்பட்டவர்கள் கைது



சிறீநகர், நவ.5_  பிரதமராக உள்ள மோடி  காஷ்மீர் மாநிலத்துக்கு செல்கிறார். இதனையொட்டி, கடந்த 5 நாள்களாக காஷ்மீர் மாநில காவல் துறையினர் ஏராளமானவர்களைக் கைது செய்தவண்ணம் உள்ளனர். 300_க்கும் மேற்பட்ட சமூக செயற் பாட்டாளர்கள், பல்வேறு அமைப் புகளின் தலைவர்கள் மற்றும் ஏற்கெ னவே பிரிவினை கோரி போராடிய வர்கள் என்று பலரையும் அம்மாநில அரசின் காவல்துறை கைது செய் துள்ளது.
அண்மையில் மாட்டிறைச்சித் தடையைக் கண்டித்து விருந்து நடத்திய பொறியாளரும், காஷ்மீர் சட்டமன்ற  சுயேச்சை உறுப்பினரு மாகிய ரஷீத் என்பவரும் கைது செய் யப்பட்டுள்ளார். மோடியின் வருகை யின்போது அவரை எதிர்த்து கருப்புக் கொடிப் போராட்டம் நடத்தப் போவதாக ரஷீத் அறிவித்திருந்தார். அவர் கூறும்போது, குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது ஏராளமானவர்களை கொன்று குவித்தார். தற்போது பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் நாடு முழுவதும் சகிப்புத்தன்மையற்ற சூழலை ஏற்படுத்திவிட்டார் என்று ரஷீத் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 5 நாள்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல்வேறு பகுதிகளி லிருந்து ஏற்கெனவே பிரிவினை கோரியவர்கள், பல்வேறு அமைப்பு களின் தலைவர்கள், சமூக செயற்பாட் டாளர்கள் என்று 300_க்கும் மேற் பட்டவர்களை காஷ்மீர் மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வடக்கு காஷ்மீர் தாங்கிவாச்சா பகுதியில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர், பொறியாளர் ரஷீத் புதன் கிழமை மாலை கைதுசெய்யப்பட்டார். எந்த இடத்துக்கு கொண்டு செல்லப் பட்டார் என்று இதுவரை தெரிய வில்லை.
ஹுரியத் (ஜி) தலைவர் சையத் அலி ஜீலானி லட்சக்கணக்கிலானவர் கள் பங்கேற்கும் நடைப்பயணத்தை அறிவித்தார். அவர் தற்போது வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த நடைப்பயணத்துக்கு ஹுரியத் காங்கிரசு (எம்) தலைவர் மீர்வாயிஸ் உமர் ஃபாரூக் தம்முடைய அமைப்பின் சார்பில் ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும், 1947ஆம் ஆண்டில் காஷ் மீரில் ஏராளமானவர்கள் கொல்லப் பட்டதையடுத்து, அவர்களின் நினை வாக சிறீநகரின் பெரிய மசூதி, ஜாமியா மசூதியில் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக ஜீலானி மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் ஆகியோ ரையும் பேரணியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மீர்வாயிஸ் உமர் ஃபாரூக் தற்போது காவல்துறையினரால் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு இருப்பதாக காவல் துறையினர் அவருக்குத் தெரிவித்துள் ளனர். ஜிலானியின் பேரணி அறி விப்புக்குப்பிறகு, பிரிவினைவாதத் தலைவர்கள், ஏற்கெனவே பல்வேறு அமைப்புகளில் இணைந்து  பிரிவினை கோரி போராடியவர்கள் என பலரை யும் காவல்துறையினர் கைது செய் துள்ளனர்.
காஷ்மீர் மாநில அரசின் செயலை யொட்டி, பிரிவினைவாதத் தலை வர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு களின் தலைவர்களும் கூறும்போது, ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகம் மத் சையத் தம்முடைய ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக   ஆர். எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டங் களை  செயல்படுத்திவருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேர்தலுக்கு முன்பாக காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கொள்கை மோதல்கள்குறித்து பிரிவினைவாதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முப்தி முகம்மத் சையத் வாக்குறுதியாகக் கூறியிருந் ததை நினைவுபடுத்துகின்றனர்.
காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மத் சையத், கடந்த சில நாள்களாகவே மோடியைப் புகழ்ந்து வருகிறார். மேலும், மோடியின் காஷ்மீர் வருகை வரலாற்று ரீதியிலானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேசியகாங்கிரசு செயல் தலைவரும், காஷ்மீர் மாநில  மேனாள் முதல்வரு மாகிய உமர் அப்துல்லா கூறும்போது, முப்தி கூறுவது உண்மைதான். மோடி 7.11.2015 அன்று சிறீநகர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.  கூட்டம் நடத்தப்படுவ தற்காக ஏராளமானவர்கள் கைது செய்யப்படுவதன்மூலமாக, வரலாறு படைத்துள்ளார் என்றார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...