Friday, October 9, 2015

மும்பை தமிழ்ப் பள்ளி மாணவ மாணவியர்களிடேயே பெரியாரியல் சிறப்பு சொற்பொழிவு



பெரியாரியல் சிறப்பு சொற்பொழிவு
மும்பை, அக்.9_ மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக மும்பை தமிழ் பள்ளி மாணவ  மாணவியர்களிடேயே  பெரியாரியல் சிறப்பு சொற்பொழிவு  கடந்த 3.10.2015 அன்று காலை 11மணிமுதல் பகல் 12.30 மணிவரை பாண்டுப் பீரைட் உயர்நிலை பள்ளி யிலும் மாலை 3 மணிமுதல் 4.30 மணிவரை தாராவி கம்பன் பள்ளியிலும் மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் அ.இரவிச்சந்திரன் தலை மையில் சிறப்பாக நடை பெற்றது.
நிகழ்வுக்கு மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளர் மு.சசிகுமார் வரவேற்புரையாற்ற மனிதநேய இயக்கத்தின் மும்பை ஒருங்கிணைப் பாளர் பி.கே.சங்கர் டிரா விட் தொடக்கவுரையாற்றி னார். சிறப்புரையாக திரா விட கழகத்தின் தலைமை நிலைய சொற்பொழி வாளர் பூவை.புலிகேசி அவர்கள் மாணவர்கள் மத்தியில் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் மும்பை பாண்டுப் பகுதியில்வுள்ள பீரைட் தமிழ் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி கவுசல்யா மற்றும் சந்தியா ஆகியோர் பங்கேற்றும், தாராவி பகுதியில்வுள்ள கம்பன் தமிழ் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி சுரேகா  மற்றும் மாண வர்கள் ரோஹித், சந்தோஸ் ஆகியோர் பங்கேற்றும் தந்தை பெரியாரின் சமு தாய தொண்டினை கருத் துரையாக வழங்கினார்கள்.
திராவிடர் கழகத்தின் தலைமை கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை. புலிகேசி அவர்கள் பங் கேற்று சிறப்புரையாற்றி னார்.
இந்நிகழ்வில் தமிழ் இலேமுரியா முதன்மை ஆசிரியர் சு.குமணராசன், பிரைட் பள்ளியின் நிறு வனர் தேவதாசன், பாம்பே லெதர் நிறுவனத்தின் எஸ்.ஏ.துரை , திருவள்ளுவர் பவுண்டேசன் மேனாள் தலைவர் சிவ.நல்லசேகரன்,
நெல்லைமாவட்ட திரா விடர் கழகத்தின் தலைவர் இரா.காசி, மும்பை திரா விடர் கழகத்தின் தலைவர் பெ.கணேசன், செயலாளர் அந்தோணி, பொருளாளர் கண்ணன் மற்றும் கழக தொழர்கள் செல்வகுமார், இராதாகிருஷ்ணன்  மற் றும் பாண்டுப் பீரைட் பள்ளியிலும், தாராவி கம்பன்  பள்ளியிலும் சுமார் 150 மேலாக பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
பகுத்தறி வாளர் கழகத் தின் பொருளாளர் ம.பரம சிவம் நன்றியுரையாற்றி னார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...