மூடி மறைக்கும் பிஜேபியின் முகத்திரை கிழிந்தது
மாட்டிறைச்சி விவகாரம்: கைதானவர்கள் அனைவருமே பாஜகவைச் சேர்ந்தவர்கள்
தாதரி(உபி) அக் 5_ உத்தரப் பிரதேச மாநிலத் தில் மாட்டிறைச்சி வதந்தி தொடர்பாக அக்லாக் என்பவர் கொலை செய்யப் பட்டார். இந்தக் கொலை தொடர்பாக கைதானவர் களில் 11 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் என்று உத்தரப்பிரதேச காவல் துறையினர் தெரிவித் துள்ளனர்.
பாசாரா கிராமத்தைச் சேர்ந்த வன்முறைக்கும் பல் மாட்டிறைச்சி வதந் தியை கிளப்பி செப்டம்பர் 28 ஆம் தேதி அக்லாக் என்பவரின் குடும்பத்தின் மீது கடுமையான தாக்குதல் நடந்தி அக்லாகை, கொலை செய்தது; அவரது மகன் உயிர்க்குப் போராடிக் கொண்டு இருக்கிறான். இந்த விவகாரம் தொடர் பாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 11 பேரை உத்தரப் பிரதேசக் காவல்துறை கைதுசெய்தது, இன்னும் 26 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களைத் தேடிவருகின்றனர். இந்த நிலையில் கைதான 11 பேரும் அந்த ஊரைச் சேர்ந்த பாஜக பிரமுகரான சஞ்சய் ரானா என்பவரின் உறவினர்கள் என்று தெரியவந்தது.
மேலும் இவர்களில் 8 பேர் பா.ஜ. கட்சியில் உறுப்பினர்கள் என்றும் தெரிய வந்தது. டில்லி போட்டு கொடுத்த திட்டமா? இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி சிவம், வினய் கைது செய்யபட் டனர். இதில் வினய் என்பவன் அந்த ஊரில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்துள்ளான். சம் பவத்தன்று இரவு இவனும் பாஜக பிரமுகரான சஞ்சய் ரானாவின் மகன் விஷால் என்பவனும் சேர்ந்து தான் கோவிலில் அறிவிப்பு செய்தனர் என்று ஒப்புக் கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வினய் காவல் துறையினரிடம் தெரிவித்ததாவது:
சம்பவத்தன்று நானும், விஷால் என்பவரும் சேர்ந்துதான் கோவிலுக்குச் சென்று அறிவிப்பு செய் தோம். கையில் என்ன கிடைக்கிறதோ கொண்டு வாருங்கள் என்று கூறி னோம். கரும்பு வெட்ட வைத்திருந்த கோடரி, மற்றும் கம்பு, கம்பிகள் போன்றவற்றை பலர் எடுத்து வந்தார்கள். மேலும் கைதான ச்வுரப், கவுரவ், சந்தீப், சிவம், சசின், விவேக், மற்றும் கைலாஷ் இவர்கள் அனைவரும் உள்ளூர் பாஜக பிரமுக ரின் நெருங்கிய உறவின ராவார்கள். விரைவில் நடக்கவிருக்கும் பஞ்சாயத் துத் தேர்தலில் சஞ்சய் ரானா தனது ஆதரவாளர் களை தேர்தலில் நிறுத்த டில்லி சென்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அந்தப் பேச்சு வார்த்தை யின் போது அவருடன் இந்தக் கொலையில் தொடர் புடைய அனைத்துக் குற்ற வாளிகளும் சென்றுள்ள னர். இவ்விவகாரம் தொடர்பாக கவுதம் புத்தா மாவட்ட காவல்துறை ஆணையர் அனுராக்சிங் கூறியதாவது. குற்றவாளி களில் 11 பேரைக் கைதுசெய்துவிட்டோம். இவர்களில் 9 பேர் பாஜ கட்சியைச் சார்ந்தவர்கள். கைதான அனைவரும் பாஜக பிரமுகரான சஞ்சய் ரானாவின் நெருங்கிய உறவினர்கள். ஹரி மற்றும் ஓம், விவேக் மற்றும் சஞ்சய் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இவர்களில் ஹரி மற்றும் ஓம் இது வரை காவல்துறையின் பிடியில் சிக்கவில்லை.
அக்லாக்கைக் கொலை செய்த போது விவேக், ஓம், சசின் ஹரி, வினய் போன்றவர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் அவர்கள் கையில் ஆயுதங்கள் இருந்ததாகவும் நேரில் கண்ட சாட்சிகள், மற்றும் அக்லாக்கின் தாயார் கொடுத்த புகார் மனுவில் உள்ளது. அவர் களும் தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். உதவிக்கு வராத இந்து நண்பர்கள் வன்முறைக் கும்பல் வீட்டைத் தாக்கும் போது அக்லாக் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மனோஜ் என்பருக்கு போன் செய்து உதவிட வேண்டியுள்ளார். மனோஜ் மற்றும் கொலை செய்யப்பட்ட அக்லாக் இருவரும் குழந்தைப் பருவத்தில் இருந்தே நண்பராக இருந்தவர்கள். தாக்குதலுக்கு ஆளான தானிஷ் கோமாவில் இருந்து மீளவில்லை. இது குறித்து காவல் துறையினர் பேசும் போது அக்லாக் இறுதியாக மனோஜிற்கு இரவு 10 மணியளவில் போன் செய்துள்ளார். அக்லாக் கின் போன் ரிக்கார்டை பரிசோதனை செய்த காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக மனோஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நான் சொந்த வேலை தொடர்பாக அருகில் உள்ள ஊருக்குச் சென்றுவிட்டேன்; அப் போது எனது போனில் அக்லாக் பேசினார் ஆனால் சிக்னல் சரியாக இல்லாததால் அவர் என்ன பேசுகிறார் என்று எனக் குக் கேட்கவில்லை என்று கூறினார்.
மாட்டிறைச்சி கொலை விவகாரம் ஒபாமா கண்டனம்
நியூயார்க், அக் 5 மாட்டிறைச்சி வதந்தி தொடர் பாக முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கண்டன அறிக்கை ஒன்றை அவரது உதவியாளர் லிண்டா சமூக வலைதளத்தில் வெளியிட் டுள்ளார். அதில் ஒபாமா குறிப்பிட்டுள்ளதாவது:
தனி மனித உணவுவிவகாரம் தொடர்பாக இந்தியாவில் உள்ள தாதரி என்ற ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தில் முதியவர் கொலை செய்யபட்டது எனது மனதை மிகவும் பாதித்து விட்டது. தீவிரவாதச் செயலுக்கு ஒப்பான இந்தக் கொடூர சம்பவத்திற்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- கோவில் திருவிழாக்களின் பெயரால் ஜாதிக் கலவரங்கள்:தமிழக அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்
- ஈழத் தமிழர் பிரச்சினையில் பிஜேபி அரசும் காங்கிரஸ் அரசும் தமிழர்களுக்கு விரோதமானவைகளே!
- ஒட்டு மொத்த தமிழர்களுக்கு ஏமாற்றம்! அதிர்ச்சி!!
- பசுவைக் கொன்று சாப்பிட்டதாகப் புரளி கிளப்பி முசுலிம் ஒருவர் படுகொலை, இன்னொருவர் கண்கள் குருடாக்கப்பட்டன
- பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போர் என்பது குற்றமா?
No comments:
Post a Comment