மோடியைக் கிண்டலடிக்கும் அமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடியை அதே பிஜேபியைச் சேர்ந்த ஓர் அமைச்சர் கிண்டலடிக்கிறார் என் றால் யாரும் எளிதில் நம்ப முடியாததுதான் ஆனாலும் நடத்திருக்கிறது. கிண்டல் அடித்தவர் மத்திய அமைச்சர் அல்ல என்பது ஓர் ஆறுதல் செய்தி அவர் அரியானா மாநில சமூக நீதித்துறை அமைச்சர், பெயர் கிருஷ்ணகுமார் அப்படி என்னதான் சொல்லி விட்டார்?
பிரதமர் மோடி இன்னும் என்னவெல்லாம் செய்யச் சொல்லப் போகிறாரோ தெரியவில்லை? என்று தன் கையிலிருந்த துடைப்பத்தைத் தூக்கிக் காட்டிக் கிண்டல் அடித்தார். பத்திரிகையாளர்கள் பக்கத்தில் இருப்பதைப் பார்த்து சுதாரித்து தயவு செய்து இதனை செய்தியாகப் போட்டுவிட வேண்டாம்! என்று கேட்டுக் கொண்டார் பத்திரிகையாளர்களா விடுவார்கள்? அல்வா துண்டு போன்ற சேதி ஆயிற்றே! விளைவு எல்லா வலைதளங்களிலும் நிரம்பி வழிகிறது.
குரங்குச் சண்டை
நாட்டில் எது எதற் கெல்லாமோ சச்சரவு நடப் பதுண்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக் கும், மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கும் ஏற் பட்டுள்ளது குரங்குச் சண்டையாம்.
அது என்ன குரங்கு சண்டை? இவர்கள் இரு வரின் அலுவலகமும் இருக் கும் இடம் டில்லி - நார்த் பிளாக்! அந்தப் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லையாம்.
இந்தக் குரங்குகளைப் பிடித்துச் செல்வதில் இந்த இரு அமைச்சர்களுக்கி டையே சேட்டையாம். அந்தச் செலவை யார் ஏற்றுக் கொள்வது என்பது தான் சர்ச்சைக்குக் காரண மாம்; குரங்கிலிருந்து பிறந் தவன் மனிதன் என்பது இதுதானோ!
விடுமுறை! விடுமுறை!!
இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் வங்கி களுக்கு 10 நாட்கள் விடு முறையாம். வரும் 21 முதல் 25 முடிய தொடர்ந்து 5 நாட்கள் தொடர் விடுமுறை.
உலகிலேயே விடு முறை அதிகம் அளிக்கப் படும் நாடு இந்தியா. மாதா மாதம் தான் மதப் பண்டிகைகள் வந்து கொண்டு இருக்கின்றனவே ஒரு கட்டத்தில் ஆவணி அவிட்டத் துக்குக்கூட விடுமுறை இருந்தது. அதை தொடர்ந்து நாம் கண்டித்து வந்ததால் விடுமுறைப் பட்டியலிலி ருந்து நீக்கப்பட்டது. மத விழா என்றால் சம்பந்தப் பட்டவர்கள் விரும்பி னால் அன்று விடுப்புப் போட வேண்டியது தானே!
சட்டம் ஒழுங்கு?
காஞ்சிபுரம் மாவட் டத்தில் கடந்த 3 மாதங் களில் மட்டும் நடத்தப் பட்ட படுகொலைகள் 23.
நேற்றுகூட நெல்லை யில் பட்டப் பகலில் நடுசாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூவரை மற்றொரு இரு சக்கர வா கனத்தில் வந்தவர்கள் வெட் டிக் கொலை செய்துள்ளனர்.
நெல்லை மாநகரம் கொலை மாநகரமாகி வருகிறதே.
No comments:
Post a Comment