நீதிமன்றம் செல்லுவதை வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!!
கிருஷ்ண ஜெயந்தி அன்று (27.8.2013) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கிருஷ்ணன் என்ற கடவுளின் யோக்கியதை என்ன? (புராணங்களில் கூறியுள்ளபடி) பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கீதையில் கிருஷ்ணன் கூறியுள்ளானே - அதனை ஏற்றுக் கொள்ளலாமா?
பக்தர்களே சிந்தியுங்கள் என்று அறிவார்ந்த முறையிலும் ஒழுக்கத்தைப் பேணும் வகையிலும் அறிக்கை ஒன்றினை விடுதலையில் வெளியிட்டதைத் தொடர்ந்து, யாரோ ஒருவர் தனிப்பட்ட தொலைக்காட்சியில் கர்ச்சித்தாராம்!
பெரியார் திடலைச் சூறையாடுவோம் - வீரமணியை விட்டு வைக்க மாட்டோம் என்று வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசி இருக்கிறார் (அது பதிவு செய்யப்பட்டு நம் கைவசம் உள்ளது - தேவைப்பட்டால் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளப்படும்)
நீதிமன்றத்திற்குச் செல்லப் போகிறாராம் - அதைத்தான் நாமும் எதிர்பார்க்கிறோம் - வீதிமன்றங்களில் இதுவரை நாம் சொல்லி வந்த கருத்துக்களையும், தகவல்களையும் ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றங்களில் வண்டி வண்டியாக நமது தலைவர் புட்டுப் புட்டு வைப்பதற்கான அரிய வாய்ப்பு அல்லவா இது!
அந்தப் பொன்னான நாளை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறோம்.
விளம்பரம் பெறுவதற்காக, விளம்பரமாகியுள்ள தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது என்பது, ஒரு மலிவான - கீழ்த்தரமான யுக்தி!
கழகத் தோழர்கள் அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு, முன்னிலும் தீவிரமாக நமது பகுத்தறிவுப் பிரச்சாரத்தை, மேற்கொள்வதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- கலி. பூங்குன்றன்
சென்னை துணைத் தலைவர்
3.9.2013 திராவிடர் கழகம்
சென்னை துணைத் தலைவர்
3.9.2013 திராவிடர் கழகம்
குறிப்பு: பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையிலே எங்கே சொல்லப்பட்டுள்ளது என்று சில அரை குறைகள் உளறுகின்றன. எதைச் சொன்னாலும், எழுதினாலும் ஆதாரத்துடன் செய்வதுதான் திராவிடர் கழகத்துக்காரர்களின் அணுகுமுறை. இதுவரை தெரிந்திராதவர் களுக்கு, அறிந்திராதவர்களுக்கு இதோ ஆதாரம் கீதை (அத்தியாயம் 9 - சுலோகம் 32).
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள்
மாம் ஹி பார்த்த வ்யாபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு: பாப - யோனய:
ஸத்ரியோ வைச்யாஸ் - ததா சூத்ராஸ் - தேளு பி யாந்தி பராங்கதிம்
ஸத்ரியோ வைச்யாஸ் - ததா சூத்ராஸ் - தேளு பி யாந்தி பராங்கதிம்
No comments:
Post a Comment