அண்ணா திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடு டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., புராணம், ஆன்மீகம் பற்றி அரைகுறையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அந்தப் பத்திரிகையைப் படிக்கலாம் (வாழ்க அண்ணா நாமம்!)
திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் நாளை நடத்த விருக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தழுவிய அளவில் நடத்த உள்ளது. தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திரா விட இயக்கத் தமிழர் பேரவை மற்றும் பல்வேறு தமிழின உணர் வுள்ள அமைப்புகள் ஆர்வமுடன் பங்கேற்க இருக்கின்றனர்.
இதில் நமது எம்.ஜி.ஆருக்கு என்ன வந்ததாம்?
ஆலயங்களில் சமத்துவம் வேண்டும் என்று கோருவதற்கு முன் அறிவாலயத்திலும், பெரியார் திடலிலும் அதனை நிறை வேற்றுங்கள் என்று அக்கிரகார (அ) திமுக எழுதுகிறது? (இந்த இடங்களில் சமத்துவத்துக்கு என்ன குறைவாம்? விளக்குவார்களா?). மொட்டைத் தலைக்கும் விளக்கெண் ணெய்த் தடவிய முழங்காலுக்கும் முடிச்சு போடப் பார்க் கிறார்களே! முதலில் இந்தப் பிரச்சினையில் எம்.ஜி.ஆர். அவர்களின் நிலைப்பாடு என்ன என்று தெரியுமா? முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் செயல்பாடு என்ன என்று தெரியுமா?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையைச் செயல்படுத்த வேண்டி நீதியரசர்கள் மகாராஜன், கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் குழுக்களை அமைத்துப் பரிந்துரை களைப் பெற்றவர் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். என்பது தெரியுமா? 69 சதவீத அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர் உட்பட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப் படும்; அதற்கு திருச்சியையடுத்த கம்பரசம்பேடடையில் பயிற்சி நடப்பதற்கு இடம் தேர்வு செய்யப்படுவது என்று அறிவித்தவர் அந்நாளைய முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெய லலிதா என்ற தகவலாவது புரியுமா?
திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை கொச்சைப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மட்டம் தட்டும், இழிவுபடுத்தும் வேளையில் அண்ணா தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர். ஏடு ஈடுபடலாமா?
அடிப்படைகளையே அறிந்திராதவர்கள் தான் அந்த ஏட்டின் எழுத்தாளர்களா? அல்லது முதல் அமைச்சர் ஜெய லலிதாவை வம்புக்கு இழுக்க வேண்டும் என்ற குழிபறிப்பு வேலையில் ஈடு படுவோர் அந்த ஏட்டில் ஊடுருவி இருக்கிறார்களா? முதல் அமைச்சர் ஜெயலலிதா எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
No comments:
Post a Comment