Friday, June 21, 2013

நாட்டில் வறட்சி நிரந்தரத் தீர்வு:நதிகள் இணைப்பே!

ஒருபுறம் வெள்ளம் - மறுபகுதியில் நாட்டில் வறட்சி
நிரந்தரத் தீர்வு:நதிகள் இணைப்பே!
மத்திய - மாநில அரசுகள் உடனே ஆவன செய்ய வேண்டும்

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை


வடமாநிலங்களான உத்தர காண்ட்/இமாச்சல பிரதேசங் களில் பெரும் மழை காரண மாக நிலச்சரிவு ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ள நிலையில், மேலும் அங்குள்ள மக்களின் பாது காப்புக்கு போர்க்கால அடிப் படையில் நிவாரணம் அளிக்க மத்திய - மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும் என தமிழர் தலைவர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வட மாநிலங்களான உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த வாரம் பெய்த பெரு மழை காரணமாகவும், அதன் விளைவாக அங்கே ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கியும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை பல ஆயிரத்தைத் தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாம்!
என்னே கொடுமை!
பலியானோர்பற்றிய தகவல்கள் இன்னும் சரியானவை கிடைக்கவில்லை; உயிருடன் இருப்பவர்களை மீட்க மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் மிகவும் கடுமையான முயற்சிகளை மேற் கொண்டுள்ளன.
பக்தி யாத்திரை என்ற பெயரால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்லும் பக்தர்களைப் பரவசப்படுத்திட, சுற்றுலாத் துறையினர் அமோக விளம்பரம் செய்து ஈர்க்கின்றனர்!
ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் போதிய அளவு கவனம் செலுத்துவதில்லை!
புண்ணியம் கிட்டும் என மூடநம்பிக்கை!
கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வந்தால் புண்ணியம் கிட்டும் என்ற மூடநம்பிக்கையால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்லுகின்றனர்; சுற்றுலா வணிகர்களும் இதைப் பெரிதாக விளம்பரப்படுத்துகின்றனர்.
ஆனால் அந்த மாநிலங்களில் (மலைப் பிரதேசங்கள் ஆனபடியால்) மழை வெள்ளம் எதிர்பார்க்க வேண்டிய வைகளே என்ற நிலையில், அங்கே போதிய பாது காப்புடன் கூடிய பாதைகளும், பாலங்களும், தடுப்புச் சுவர்களும் கட்டப்பட்டு, நிரந்தரப் பாதுகாப்பு வசதி செய்யப்படாமலேயே ஆண்டுதோறும் இந்த பக்தி வியாபாரம் நடைபெறுகிறது.
நிரந்தரப் பாதுகாப்பு வசதி தேவை!
கடவுள் கருணையே வடிவானவர் என்ற புரட்டு இந்த  சோகப் படலம் மூலம் அம்பலமாகி விட்டது. அதற்காக இத்தனை உயிர்கள் ஆயிரக்கணக்கில் பலியானது கண்டு, நாத்திகர்களாகிய நாம் தான் அதிக வேதனை அடைகிறோம்; காரணம் மனித உயிர்கள் - அவர்கள் எப்படிப்பட்ட கருத்துடையவர்கள் ஆனாலும், காப்பாற்றப்பட வேண்டியவைகள் என்ற மனிதநேயக் கொள்கை உடையவர்கள் பகுத்தறிவாளர்களாகிய நாம்!
எனவே இந்த எஞ்சியோர் போதிய பாதுகாப்புடன் அவரவர் வீடு திரும்ப அனைத்து முயற்சிகளும் அவசர கதியில் - போர்க் கால அடிப்படையில் - மேற்கொள்ளப் பட்டு, மக்களின் பாதுகாப்பு உறுதி  செய்யப்படல் வேண்டும்.  இப்படி வடக்கே கங்கோத்ரி, யமுனோத்திரி, யமுனை நதி டெல்லிப் பட்டணத்திலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது என்ற நிலை ஒருபுறம்; தென் மாநிலங் களில் விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்கவில்லை. மாநிலங்களிடையே மிகப் பெரிய சண்டைகளும், ஏன் யுத்தமும்கூட!
குடிநீருக்கும்கூடப் பஞ்சமோ பஞ்சம்!!
இனி எதிர் காலத்தில் வரும் யுத்தங்கள் நீர் உரிமைக்கானவையாகத்தான் இருக்கப் போகிறது என்று நீரியல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்!
நிரந்தரத் தீர்வு நதிநீர் இணைப்பு
இதற்கு ஒரே நிரந்தரத் தீர்வு, நதிநீர் இணைப்பு அல்லவா?
அதுபற்றி மத்திய -மாநில அரசுகள் சிந்தித்து உடனடியாகச் செயல்பட வேண்டாமா?
எத்தனையோ விளம்பரத் திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடி  ரூபாய்களைச் செலவழிக்கும் மத்திய மாநில அரசுகளும் இந்தியாவின் நதிகளை இணைத்து, வெள்ள நீர் வறட்சி மாநிலங்களுக்குக் கிடைத்தால், எல்லா மக்களும் சுகவாழ்வு வாழ்வார்களே, இந்த அறிவியல் யுகத்தில் இது என்ன சாத்தியப்படாத ஒன்றா, இல்லையே!
உச்சநீதிமன்றம் இதுபற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்து தீர்ப்பு தந்தும்கூட, இதுவரை தீவிர முயற்சிகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுக்கவில்லையே!
இதுபற்றி உடனடியாக நிபுணர்களை அழைத்து, ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, உலக வங்கி போன்றவை மூலம் நிதி ஆதாரங்களைத் திரட்டி - ஏன் கோயில்களில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கூட எடுத்து - கடன் பத்திரங்களை அரசு அக்கோயில்களுக்கு வழங்கி விட்டுக் கூட - செலவழித்து, இந்தியா முழுவதும் தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலைகளைப் போட்டு, அவை இப்போது ஆறு வழித் தடங்களாக அகலமாகும் நிலையில், இப்படி நதிகளை இணைக்கும்பணி உடனடியாகத் துவக்கப்படல் வேண்டும். இதனை அனைத்து அரசியல் கட்சிகளும், பொது நல அமைப்புகளும் ஒருமித்த குரலில் ஓங்கிக் கூற வேண்டும். தற்காலிக நிவாரணங்களைவிட நிரந்தரத் தீர்வுகளே நாட்டு மக்களை நிரந்தரமாகப் பாதுகாக்கும்.
கடும் மழை வெள்ளம் ஒரு பகுதியில் - கடும் வறட்சி மறுபகுதியில் ஒரே நாட்டில் என்பது முரண்பாடு அல்லவா? அது களையப்படல் அவசர - அவசியமாகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை   
21.6.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

1 comment:

அசட்டு அம்மாஞ்சி பக்கங்கள் said...

நீங்கள் எதிர்க்கும் "ஹிந்துத்வா" பாசிச மத வெறிக்கூட்டம் பாரதீய ஜனதாவும் உங்களால் மதிக்கப்படாத அப்துல் கலாமும் இதனை முன்வைத்து நகர்த்தினர்.
நீங்கள் ஆதரிக்கும் காங்கிரசு இளைய திலகம் ராகுல் நதிகள் இணைப்பு சாத்தியம் இல்லை என்று பகர்ந்தாரே. அப்போது தமிழர் தலைவர் எங்கே போயிருந்தார்? பகுத்தரிவுப்பூன்காவுக்குப் பூப் பறிக்கவா?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...