பாசிஸ்டுகள் தங்கள் எதிரிகளின் பண்பாட்டுத் தளத்தைத் தவிடு பொடியாக்கித் தாகம் தீர்த்துக் கொள்வார்கள்.
பவுத்தர்களின் நாலாந்தா பல்கலைக் கழகத்தை தீயிட்டுத் தீர்த்தம் ஆடியது ஆரியவர்த்தனம் தானே? யாழ் நூலகத்தை பாழ்படுத்தியது சிங்களப் பாசிசம்தானே!
ஆகஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களைக் குறி பார்த்துக் குண்டு வீசியதே ஜெர்மன் அந்தப் புத்திக்கு என்ன பெயர்?
ஆகஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களைக் குறி பார்த்துக் குண்டு வீசியதே ஜெர்மன் அந்தப் புத்திக்கு என்ன பெயர்?
தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெயர்களைச் சிங்கள மொழியில் மாற்றியதெல்லாம் பாசிஸ்டுகளின் பரவலான கீழ்மைப் புத்தியே!
தமிழ்நாட்டில் இப்பொழுது என்ன நடக்கிறது? தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு எனும் பண்பாட்டுத் தளம், சித்திரையை முதன்மைப் படுத்தும் ஆரிய ஆண்டு; பெயர் களைப் பிறைசூடியிருக்கும் ஆரியத் தனத்தோடு தகர்க்கப்படவில்லையா!
தந்தை பெரியார் போன்ற மக்கள் தலைவர்கள் மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்கள் கூடி முடிவெடுத்த தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது மானமிகு கலைஞர் அவர்களால் சட்டமாக்கப்பட்டதை சட்டை செய்யாமல் சல்லடைக் கண்களாக பொத்தல் போட்டு வெளியே தள்ளியது ஆரியப் பாசிசம் அல்லாமல் வேறு என்னவாம்?
அண்ணா பெயரால் அவர்தம் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில் நிமிர்ந்து நிற்கும் நூலகத்தை நோய் கொண்ட பார்வையில் பார்த்தற்கு என்ன பெயர் சூட்டலாம்?
நீதிமன்றத்தின் நெருப்புக் கண்கள் அல்லவா அதனை நிலை பெற வைத்துள்ளது. ஆனாலும் அந்த எழிலார்ந்த நூலகம் இன்று எந்த நிலையில் நிலை குலைந்து நிற்கிறது? கண்ணுள்ளோர் காணட்டும் - -_ கண்ட பின் கருத்துக் கூறட்டும்!
சென்னை அண்ணாசாலையில் காண்போர் கண்களைக் கைது செய்யும் பல கோடி ரூபாயில் திட்ட மிட்டுக் கட்டப்பட்டதும், ஒரு நாட்டின் பிரதமரால் திறக்கப்பட்டதுமான சட்டப் பேரவையை பாழடைந்த மண்டபமாக ஆக்கி ஆனந்திப் பதில் உள்ள அழுக்காறு என்னவென்று புரியாதா?
பாவேந்தர் செம்மொழித் தமிழ் ஆய்வு நூலகம் எங்கே? எங்கே? அதனை அணி செய்த நூல்களும், சுவடிகளும், ஆவணங்களும், ஆரியக் கரையான்களால் அரிக்கப் பட்ட கொடுமையை சீரணித்துக் கொள்ள முடியுமா?
அண்ணா மேம்பாலம் அருகே எட்டு ஏக்கர் பரப்பில் 20 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட செம்மொழி பூங்காவில் உள்ள செம்மொழி மறைக்கப்பட்டது எந்த நோக்கத்தில்?
செந்தமிழர் மொழிக்கும், ஆரியப் பார்ப்பனர்களின் சமஸ்கிருதத்துக்கும் நடைபெற்ற நெடு நாள் பகையின் நெடுமூச்சு நீறு பூத்ததாக இருக்கிறதே!
செம்மொழி மாநாட்டையொட்டி கோவையில் அறிவிக்கப்பட்ட செம் மொழிப் பூங்கா திட்டம் கருச் சிதைவு ஆகிவிட்டதே!
தொல் காப்பியப் பூங்கா போய் அடையாறு பூங்கா என்று ஆனதில் உள்ள அர்த்தம் என்ன?
சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் இடம் பெற்ற திருவள்ளுவர் மறைக் கப்பட்டதும் மறையவர் சிந்தனையின் புழுக்கம்தானே?
கீதையிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதுதான் குறள் என்று சொல்லும் சிறுமதியினர் இன்னும் அக்ரகாரத்தில்தானே திரிகிறார்கள்.
குமரி முனையில் நிற்கும் வள்ளுவர் சிலையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகூட போராட்ட அறி விப்புக்குப்பின் தானே அசைந்தது? வள்ளுவர் கோட்டம் எந்தக் கதியில் உள்ளது? பூம்புகார் போன இடம் எங்கே? பெரியார் நினைவு சமத்துவ புரத்தை தனித்தன்மையான சிந்தனை யோடு நாடெங்கும் உருவாக்கி, ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் தந்தை பெரியார் சிலையை நிறுவிய கலைஞரின் அந்தச் சீலம் எங்கே? ஆட்சிக்கு வந்தபின் அதனை விரிவாக்க மனமில்லா ஆரியத்தனம் எங்கே?
உழவர் சந்தை எங்கே போனது? உழவர்கள் பஞ்சமர்கள், சூத்திரர்களும் தானே?
அவாள் கணிப்புப்படி ஏர் உழுதல் பாவத் தொழிலாயிற்றே -_ மனு தர்மம் அப்படித்தானே சொல்லுகிறது!
உழவர் சந்தை முடக்கப்பட்டதன் உள்ளர்த்தம் இதற்குள் உறைந்து கிடக்கவில்லையா?
எம்.ஜி.ஆர். நினைவிடத்தை சீரமைக்கத் தெரிந்தவர்களுக்கு அண்ணா சதுக்கம் நினைவிற்கு வரவில்லையே - ஏன்? அண்ணா ஆரிய மாயை எழுதியவர் ஆயிற்றே! ஆத்திரம் இருக்காதா?
இந்த ஆட்சி வந்து, தந்தை பெரியார் அவர்களுக்காக செய்தது என்ன? அய்யா பிறந்த நாள், நினைவு நாள் என்பதாவது தெரியுமா?
வெளியில் வந்து திராவிடர் இயக்கத்தின் அந்த சிற்பியின் சிலைக்கு மாலை அணிவித்ததுண்டா? நினைவிடத்தில் மலர் வளையம் வைத்ததுண்டா?
அதே நேரத்தில் விவேகானந்தர் இல்லத்துக்கு 99 ஆண்டுகள் குத் தகையை நீட்டி ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளதே!
செம்மொழி அலுவலகம் அங்கு வரும் என்ற வதந்தி கிளப்பிய நேரத்தில் அடேயப்பா இந்த ஆரியம் எப்படி எல்லாம் எகிறிக் குதித்தது?
விவேகானந்தர் பெயரில், ஒன்பது பல்கலைக் கழகங்களில் உயர் ஆய்வு மய்யமாம்; - அதற்கு அஇஅதிமுக அரசு சார்பில் ரூ.25 லட்சம் தாரை வார்ப்பாம்.
அய்யா பெரியாருக்கோ, அண் ணாவுக்கோ எத்தனை பல்கலைக் கழகங்களில் இந்த உயராய்வு மய்யம் உண்டு?
இராம கிருஷ்ண மடத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூபாய் இரண்டு கோடி தூக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதே!
இராமன் கோயிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு போய் கட்டு வது என்ற வினாவை எழுப்பியவர் அல்லவா தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்?
அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பரப்பியவருக்குத்தான் அண்ணா பெயரையும், திராவிட பெயரையும் தாங்கியுள்ள கட்சியின் ஆட்சியில் முதல் மரியாதை என்றால் இதன் பொருள் என்ன?
அன்று புத்த மார்க்கத்தில் ஆரிய நுழைவு என்றால் இன்று திராவிடர் இயக்கத்தில் திரிநூல் தத்துவம் நுழைந்து விட்டதன் விபரீத விளைவு கள்தான் இவை.
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டு வதில் மட்டுமல்ல புலிக்குட்டிகளுக் குப் பெயர் சூட்டினாலும் சமஸ்கிருத மழைதான்.
எந்த காலத்திலாவது தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வு ஆணை யத்திற்குப் பார்ப்பனரை தலைவராக நியமித்ததுண்டா?
நண்டைச் சுட்டு, நரியைக் காவல் வைத்ததுபோல, நட்ராஜ் அய்யர் தம் பங்குக்கு பொதுத் தமிழ்த் தேர்வைத் தானே தூக்கி வெளியில் எறிந்தார்?
பாசிசம் சீறுகிறது - பாசிசப் பட்டம் பறக்கிறது - பார்ப்பனர் அல்லாதாரே எச்சரிக்கை! எச்சரிக்கை!!!
திராவிட இயக்கத்தின் வேரை வெட்டி வீழ்த்த திராவிட இயக்கத்தின் வேடம் அணிந்தே வெட்டரிவாள்கள் எச்சரிக்கை! எச்சரிக்கை!!
-மின்சாரம்
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment