கனடாவிலுமா?
கனடா - பர்ன்பையில் துர்க் காதேவி கோவிலில் அய்யப்பனுக்கு மகரஜோதி பூஜை நடைபெற்றது. அய்யப்பனுக்கு நெய், தயிர், விபூதி, சந்தனம் முதலிய பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
மகரஜோதி என்பது மோசடி - கேரள மாநிலம் மின்வாரிய ஊழியர் களால் பொன்னம்பல மேட்டிலிருந்து செயற்கையாகக் (சூடம் கொளுத்தி) காட்டப்படுகிறது என்பது நிரூபிக்கப் பட்டு விட்டது. கேரளப் பகுத்தறி வாளர்கள் நேரில் சென்று கையும், களவுமாகப் பிடித்து, நிழற்படங்கள் எடுத்து அம்பலப்படுத்தி விட்டனர்.
கேரள மாநில முதல் அமைச்சர் ஈ.கே. நயினர், தேவசம் போர்டு, இந்து அறநிலையத்துறை அமைச்சர், அறக் கட்டளைக்காரர்கள் ஆகிய அத் தனைப் பேரும் மகரஜோதி என்பது உண்மையல்ல என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ள நிலையில், கனடா வரை குடியேறிய பார்ப்பனீயம் தன் பித்தலாட்டக் கடையை விரித்துப் போனி செய்கிறது - இதுதான் பார்ப்பனர்களின் பச்சையான - அம்மணமான யோக்கியதை!
பொதுவாக வெளிநாடுகளில் தமிழ்ச் சங்கம், பாரதி சங்கம் - என் றாலே தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் - அவை பெரும்பாலும் பார்ப்பனர்களின் முகமூடிகளே!
காம -க் கே(கோ)டி!
டில்லியில் நடப்பது போன்ற பெண் கள்மீதான பாலியல் வன்முறை சம்ப வங்கள் திடீரென நிகழ்ந்து விடுவ தில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஏற் பட்ட கலாச்சார மாற்றமும், பண்பாட்டுச் சீரழிவும், நாம் பின்பற்றிவரும் மேற் கத்திய கலாச்சாரமும்தான் இத்தகைய பாலியல் பலாத்கார வன்முறை சம்பவங்களுக்கு முக்கிய காரணம்.
- பூரி சங்கராச்சாரியார் நிஸ்சலானந்தா
- பூரி சங்கராச்சாரியார் நிஸ்சலானந்தா
மேற்கத்திய கலாச்சாரம் தான் காரணமா? இந்து மதக்கலாச்சாரத் தில் என்ன வாழ்கிறது? இந்து மதத் தில் கற்பழிக்காத கடவுள் உண்டா? தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளின் கற்பைச் சூறையாடியவன்தானே அவர் களின் சிவன்? இந்த யோக்கியதையில் மேல் நாட்டுக் கலாச்சாரம்தான் பாலி யல் வன்முறைக்குக் காரணம் என்று சொல்லித் தப்பிக்கப் பார்க்கலாமா?
பெற்ற மகளையே பெண்டாட்டி ஆக்கியவன்தானே இந்து மதத்தின் படைத்தல் கடவுளான பிர்மா?
புராணக் குகைகளுக்குள் நுழை வானேன்? காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் காமம் (கோடி) ஊர் சிரிக்கிறதே! பார்ப் பனக்குல அம்மையாரான - எழுத் தாளர் அனுராதா ரமணன் என் கையைப் பிடித்து இழுத்தார் காஞ்சி சங்கராச்சாரியார்! என்று தொலைக் காட்சியிலேயே கண்ணீரும் கம்பலை யுமாக அழுது புலம்பவில்லையா! என் எதிரிலேயே ஒரு பெண்ணைப் புணர்ந்தார் என்று புட்டுப் புட்டு வைக்க வில்லையா?
பெண்கள் ஒன்லி
ஏற்காட்டில் வெள்ளக் கடை கிராமம். ஒவ்வொரு ஆண்டும் பொங் கல் விழா முடிந்தவுடன் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் ஊர் மக்கள் ஒன்றுகூடி, பூஜை நடத்துவார்கள். அப்பொழுது ஆண்கள் எல்லாம் ஊரை விட்டு வெளியேறிட வேண்டும், கார ணம் - பெண்கள் எல்லாம் நிர்வாண மாகப் பூஜை செய்வதுதான்.
கடவுளை வணங்கு கிறவன் காட்டு மிராண்டி என்றால் கத்தோ கத்தோ என்று கதறும் பக்த சிகாமணிகள் இந்தக் கேவலத்துக்கு, ஆபாசத்துக்கு எந்த செல்லப் பெயரைச் சூட்டப் போகிறார்களாம்.
கடவுளை வணங்கு கிறவன் காட்டு மிராண்டி என்றால் கத்தோ கத்தோ என்று கதறும் பக்த சிகாமணிகள் இந்தக் கேவலத்துக்கு, ஆபாசத்துக்கு எந்த செல்லப் பெயரைச் சூட்டப் போகிறார்களாம்.
சென்னையையடுத்து பெரிய பாளையத்தம்மன் கோயிலிலும் பெண்கள் வேப்பிலை ஆடையை அணிந்து கொண்டு வழிபட்டு வரு கின்றனரே (வேப்பிலை என்ன உறுப் புகளை மறைக்கும் அளவுக்கு பெரிய இலையா - ஆடையா?)
உருவமற்றவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இப்படி பெரியபாளையத்தம்மன் என்றும், மாரியம்மன் என்றும், காளியம்மன் என்றும், கபாலீஸ்வரன் என்றும் (பிச்சைக்காரன் போல கையில் கபால ஓட்டை ஏந்திக் கொண்டுள்ளான்) கூறி அந்தந்த கோயில்களுக்கும் ஆபாச மான தலப் புராணங்களை அள்ளி விட்டு, மக்களிடத்தில் மறைந்திருக்கும் பாலியல் உணர்வுகளைத் தூண்டுவது தான் பக்தியாம்! வாயாலா சிரிக்க முடிகிறது?
அம்மா பேசுகிறார்...
இப்பொழுது ஆண்கள் எல்லாம் அம்மாவாகி விட்டார்கள்; மேல் மரு வத்தூரில் ஓர் அம்மா - இப்பொழுது வேலூர் - அரியூரில் இன்னொரு அம்மா! அம்மாவா? - சும்மாவா! எல்லாம் போட்டிக் கடைதான்!
54 புரோகிதர்களுக்குக் கோதா னம் செய்து புரோகிதர்கள் பற்றி உச்சிமோந்து பேசித் தள்ளியுள்ளார்.
தெய்வ அருள் இருந்தால்தான் புரோகிதர் ஸ்தானம்; மனிதருக்கும், தெய்வத்திற்கும் பாலமாக இருப்ப வர் கள் தான் புரோகிதர்கள் என்று அம்மா, சும்மா பொரிந்து தள்ளி யுள்ளார். அதெல்லாம் சரிதான்; இந்த அம்மா பார்ப்பனர் அல்லவே - அப்படி இருக்கும் பொழுது எப்படி புரோகிதர் அர்ச்சகர் ஆனார்? ஆகமத்தில் இடம் இல்லாதபோது எப்படி தனியே தங்கத்தால் கோயில் கட்டி சூத்திரர் ஒருவர் அர்ச்சகர் ஆக முடியும்? - அது ஒரு முக்கிய கேள்விதான் - முடிந் தால் அவர் பதில் சொல்ல முயலட்டும்.
தெய்வ அருள் இருந்தால்தான் புரோகிதர் ஆக முடியும் என்று சிலாகித்துள்ளாரே - காஞ்சிபுரத்தில் மச்சேஸ்வரர் மச்சேஸ்வரர் என்று ஒரு கோயில் இருப்பது வேலூர் அம்மா வுக்குத் தெரியுமா?
அங்கே தேவநாதன், தேவநாதன் என்று ஒரு அர்ச்சகப் பார்ப்பான் இருந்தானே தெரியுமா? அவன் கதை நாடு முழுவதும் நாறியதே நினைவு இருக்கிறதா?
அவன் என்ன செயதானாம்? கோயிலுக்குச் சாமி கும்பிட வந்த பக்தைகளை மயக்கி கோயில் கரு வறைக்குள்ளேயே அய்யய்ய... எழுதக் கை கூசுகிறதே!
கர்ப்பக் கிரகம் என்ற பெயரும் பொருத்தம் தானோ! கர்ப்பத்தை உண்டாக்கும் வேலையை அல்லவா செய்தான்! அந்தக் கேவலத்தைக் கைப்பேசி மூலம் நிழற்படம் எடுத்து குறுந் தகடாக்கி (சிடி) விலைபேசி இருக்கிறானே - அதனை அந்தப் பாதிக் கப்பட்ட பெண்களிடம் காட்டிக் காட்டி அச்சுறுத்தி, மீண்டும் மீண்டும் அந்தப் பக்தைகளைக் கோயில் கர்ப் பக்கிரகத்தில் காமவேட்டை நடத் திடவில் லையா? அதன்பின் சிறைக் கம்பிகளை எண்ணவில்லையா?
தெய்வ அருள் பெற்றிருந்தால்தான் புரோகிதன், அர்ச்சகன் ஆக முடியும் என்பது இதுதானோ!
ஜனவரி 16-31 - 2013
அடுத்த புளுகு .... ஆரம்பம்
அன்னக்கி செஞ்சாங்களோ...?
அன்னையாரின் தலைமைத்துவம் - கி.வீரமணி
அவுஸ் ஒய்ப்
ஆசிரியர் பதில்கள்
இந்தியா முழுதும் பேசப்பட்ட மொழி எது?
இனம் : திராவிடம்
இலக்கியங்கள் போற்றும் "தை'யில் தமிழ்ப் புத்தாண்டு - கி.தளபதிராஜ்
ஈரோட்டுச் சூரியன்
உருப்படியான பழமொழி
உலகிலுயர் தமிழர்ப் பண்பாடும்! ஒழித்தழித்த ஆரியர் செயல்பாடும்!
கடவுளைக் கற்பழியுங்கள்!
களப்பிரர் ஆட்சி இருண்ட காலமா?
களவாடப்பட்ட தமிழிசையே கர்நாடக சங்கீதம்!
சங்க இலக்கியத்தில் நாட்டியக்கலை
சிறப்புச் சிறுகதை - தலைமுறைக் கிளிகள்
நால்வருணம் பேணும் நான்காம் தூண்
பலமொழிகளை அழித்த வடமொழி
புத்தர் ஆசை நிறைவேறும்
பெயர்க் காரணம்
பெரியார் பார்வையில் காதல்
பொங்கல் ஒன்றுதான்
பொங்கல் கொண்டாடவேண்டும் ஏன்?
மதக்கல்வி கூடாது!
மனுதர்ம நீதியும் - கரிகாலன் நீதியும்
மாற்றம்
யோசிச்சுப் பேசுங்கோண்ணா.....
லோகாயதமும் புத்தமும்
No comments:
Post a Comment