Thursday, January 10, 2013

இளையோரே, இதோ ஓர் ஆபத்து!


நம்முடைய பிள்ளைகள் - ஒவ்வொரு நடுத்தரக் குடும்பங்களிடம் கைப்பேசி இல்லாதவர்களே இல்லை. மின்னணுவியல் மூலம் தகவல் புரட்சியுகம் - மிகவும் பயனுள்ள பல செய்திகள் கேட்டவுடன் உடனே விரல் நுனியில் கிடைத்துவிடுகிறதே! அதில் இந்த கூகுள் (Google) ஆண்டவர் திருவிளையாடல் - இப்படி நவீன கடவுளாக இன்னுங் கொஞ்ச நாளில் ஆக்கி, 11ஆவது 12ஆவது அவதார மாக ஆக்குவதற்கும்கூட நம் மக்கள் பலர் தயாராக இருப்பார்களே!
இல்லையென்றால் டிசம்பர் 21ஆம் தேதியோடு உலகம் அழிந்து விடப் போகிறது என்று ஒரு வாரத்திற்கு முன் கப்சா விட்டு கதையளந்திருப் பார்களா?
கணினிப் புரட்சி, டிஜிட்டல் புரட்சி, கிராபிக்ஸ் மூலம் ஈரேழு பதினாலு லோகம் என்ற கற்பனை புராண உலகங்களையும் தாண்டி எத்தனை உலகத்தை உருவாக்கிட முடியுமோ அதனால் மனிதர்களின் ஆக்கத் திறன் - ஆற்றல் (Credibility) மிகவும் அற்புத மானது; ஆறாவது அறிவின் பயன் - அதையே சரியாகப் பயன்படுத்தி மனித குலத்தை மூடத்தனத்தின் முடை நாற்றத்திலிருந்து வெளியேற்றும் வாய்ப்பும் - இன்னோன்ன பிற நன்மை களும் ஏராளம் உண்டு -  உண்மை தான்.
ஆனால் எல்லாவற்றிலும் மறுபக்கம் உண்டே!
கணினியினால் ஏற்படும் நன்மை கள் அனைவரும் அறிந்ததே!
தீய விளைவுகளை பற்றிக் கொஞ் சம் இளைய தலைமுறைக்கும் உணர்த்திட வேண்டும்.
நம் வீட்டில் உள்ள இளசுகள் அனைவர் கையிலும் கைப்பேசி அதில் எல்லாவசதிகளும் ஏராளம் உண்டு. இதை முழுமையாக அறிந்தவர்கள் இளம் சிறார்களும் இளைஞர்களுமே!
எப்போதும் கையில் வைத்து சதா விரல்களில் வீணை வாசிப்பதைவிட வேகமாக அதனைத் தட்டிக் கொண்டே இருக்கிறார்களே, அப்படி என்ன தான் உள்ளது? வயதான நம்மைப் போன்றவர்களுக்குப் புரிவதில்லை - அது மட்டுமல்ல நம்மில் பலர் அழைப்புகள் வந்தால் மட்டுமே பேசுவோம். அல்லது அழைக்கத் தெரிந்தவர்களாகப் பயிற்சி பெற்றிருப்போம் - அதற்கு மேல் அதில் உள்ள Two in One 5,6,7 அம்சங்களை ஒரே அடியாக அடக்கியுள்ளவற்றைப் பயன்படுத்தும் வழிமுறை நுணுக்கத்தை நாம் பலரும் அறியோம்.
பொடிசுகள் தான் இதில் எக்ஸ்பர்ட் இதன் வேண்டாத விளைவு விபரீத விளைவு என்னதெரியுமா? நேற்று ஒரு செய்தி வல்லுநர்களால் சொல்லப்பட் டுள்ளது. இதனை சதா அதிகமாகப் பயன்படுத் துவோருக்கு மூளைச் சாவு (Brain Death) ஏற்படும் அபாயம் உள்ளது என்பதே அது!
பொதுவாக கேட்கும் தகவலை நொடிப் பொழுதில் ஜீபூம்பா போல் கூகுள் தந்து விடுகிறது என்பது - வியப்பும் சிறப்பும் என்றாலும், தனியே சிந்தித்து, முயற்சித்து, அகராதியோ, அது சம்பந்தப்பட்ட நூலை எடுத்து தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியோ இதன் மூலம் இல்லாமல் ஆக்கப்பட்டு விடுகிறது. இதன் மூலம் மூளைக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு வேக வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறதே!
எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் கணினித் துறையில் மிக நீண்ட அனுபவம் பெற்ற ஒருவரிடம் இச்செய்திபற்றி பேசிக் கொண்டிருந்தபோது அவர் மேலும் திடுக்கிடக் கூடிய விளக்கத்தைச் சொன்னார்!
முன்பு எல்லாம் நம் வகுப்புகளில் வாய்ப்பாடு படிப்போம் - 16 X 16 என்றால் உடனே 256 என்று பட் என்று வாய்ப்பாடு படித்ததினால் கூறுவோம். இப்போ வளர்ந்துள்ள அமெரிக்கா, அய்ரோப்பா மற்ற நாடுகளிலும் சரி சீனா, ஜப்பான், தைவான், கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் உள்ள மாணவர்களைக் கேட்டால்,  கால்குலேட்டர் இல்லாமல் கூற முடியாதே; எனவேதான் தேர்வின்போதே கால்குலேட்டர்கள் அனுமதிக்கப்படுகின்றன.
அதுவன்றி (கணக்கில்) இப்போது ஓரணுவும் அசையாதே! அது மட்டுமா அவர் சொன்னார்? எனக்கே பிரச்சினை களைப் பற்றி சிந்திக்கும் இயல்புத் திறன் நாளுக்கு நாள் குறைந்து வருகிறதே என்று கூறினார்!
எப்போதும் பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையை விரும்பாதீர்கள்; அது வாழைப் பழத்தை உரித்து வாயைத் திறக்கச் சொல்லி கனிவுடன் விழுங்க வைக்கும் வெட்கக்கேடானது.
மாறாக பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்று மனிதர்கள் தங்கள் பகுத்தறிவுக்கு வேலை கொடுத்து அறிவு, ஆராய்ச்சி, அனுபவங்களை சீர்தூக்கிப் பார்த்து, தீர்வு கண்டறிவதுதான் மனிதர்களை, இரும்பைக் காய்ச்சி பட்டறையில் பதப்படுத்துவதாகும்; பொன்னை உருக்கி அணிமணிகள் செய்யும் வியப்பாக ஆக்கிட முடியும்.
எனவே மூளையைப் பயன்படுத்த முந்த வேண்டும். எதையும் பயன்படுத் தாவிட்டால் துருப்பிடித்து விடும். பய னற்றுப் போகும். எனவே பயன்படுத்திட முனைப்பு காட்ட வேண்டும்.
ஆதி பருவத்தில் வேட்டையாடி, மிருகங்களின் தோலை எடுத்து, தோளில் இடுப்பில் கட்டிய மனிதன் -  நடந்தபோது வெப்பம் தாங்காதபோது திடீரென்று எடுத்து தரையில் போட்டு சுகங் கண்டதிலிருந்து கண்டுபிடித் ததுதானே செருப்பு- அந்த காலணி களில்தான் எத்தனை வளர்ச்சி! எனவே மூளைக்கு வேலை கொடுப்பீர்!
டி.வி. கணினி முன்பு அமர்ந்திருந்த குழந்தைகள் தங்கள் கற்பனை வளமை - படைப்பாற்றலை மிகவும் இழந்து வருகின்றனர் என்று - - wwdup radio வைக் கண்டுபிடித்த டிரிவோர் பேலிஸ் (Trevor Baglis) என்ற அறிஞர் கூறுகிறார்!
75 வயது ஆன டிக்வென்ஹாம் என்பவர் (லண்டனைச் சார்ந்தவர்) அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர் களை (Inventors) இழந்த தலை முறையாகி விடும் என்று அபாயமணி அடித்துள்ளார்!
மெக்கானோ போன்ற பொம்மை களை பள்ளிகளில் கொடுத்து விளையாடப் பழக்குங்கள்! கையால் செய்யப்படும்; மூளையில் சிந்திக்கும்  வாய்ப்பை ஏறபடுத்துங்கள்.
கணினி கைப்பேசி - இவைகளை அதிகமாகப் பள்ளிப் பிள்ளைகளைப் பயன்படுத்துவதை மாற்றி ஒரு சிந் தனை - கல்வி சிந்தனை காலத்தின் தேவையாகும்!
மூளை செத்துவிட்டால் பிறகு சமூக வளர்ச்சி முன்னேற்றம் தடைப்பட்டு விடாதா?
சிந்தியுங்கள், இளையோரே!
- கி.வீரமணி


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...