சென்னை சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்
சென்னை, நவ.4- ஈழத்தில் விடுதலைப்புலிகள நடத்தியது சுதந்திரப் போராட்டமே; அவர்கள ஒன்றும் பயரங்கவாதிகளல்ல என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
29.10.2012 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்த போர் நினைவுச் சின்னமா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
மிகப்பெரிய அளவிலே ஒரு சங்கடமான சூழல் இன்னமும் முள்வேலி முற்றாக அகற்றப்படவில்லை. ஈழத் தமிழர் தங்களுடைய வாழ்வுரிமையைப் பெற்று ஒரு புது வாழ்வை - போருக்குப் பின் என்ற நிலையிலே கூட அடையவில்லை. இன்னமும் அவர்கள் அடைபட்ட சிறைக் கைதிகளைப் போலத்தான் அவர்கள் முள்வேலிக்குள்ளே இருந் தாலும் சரி, முள்வேலிக்கு வெளியே இருந்தாலும் சரி, ஈழத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எப்படி யெல்லாம் அவதியுற்று இருக்கிறார்கள் என்பதை இன்றைக்கு உலகம் கண்டு, கண்ணீர் வடிக்கக் கூடிய கட்டத்திற்கு வந்திருக்கிறது.
நம்மைப் பொறுத்தவரையிலே இது ஒரு நல்ல திருப்பம் என்றுதான் கொள்ளவேண்டும்.
அய்.நா. மாமன்றத்திலே, அதனுடைய அமைப் பிலே, மனித உரிமை ஆணையத்தைப் பொறுத்த வரையிலே, பல நாடுகள் இந்தியா நீண்ட உறக்கத் திலே இன்னமும் இருந்துகொண்டு இருக்கிறது. அல்லது பார்வையாளராக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிற வேதனை ஒரு பக்கத் திலே நம்மை அரித்துக் கொண்டிருந்தாலும் கூட, பல்வேறு நாடுகள் இதன் தொடர்பாக, பல நியாயமான அந்த மனித உரிமைப் பேரவையிலே நவம்பர் முதல் நாள் அன்று நடைபெற உள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்திலே இலங்கை சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக, பல்வேறு நாடுகளும், நியாயமான சில கேள்விகளை எழுப்பி உள்ளன. இதனை இந்த அவை தெரிந்து கொள்ளவேண்டும்.
வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது!
நாம் கவலைப்படவேண்டியவர்கள். நேரிடை யான பாதிப்புக்குள்ளான மக்கள் தொப்புள்கொடி உறவுள்ள தமிழர்களை கொண்ட இந்தியா - ஆனால், இந்தியா மவுனத்தைக் கலைக்கவில்லை. அவர்கள் பார்வையாளர்களாக, வேடிக்கைப் பார்க்கக் கூடியவர்களாக - வெந்த புண்ணிலே வேல் ஒரு பக்கம் சொருகிக் கொண்டிருக்கிறது.
ரத்தம் ஒரு பக்கம் வழிந்துகொண்டிருக்கிறது. வழியும் ரத் தத்தைத் துடைப்பதற்கோ அல்லது மிகப்பெரிய அளவிற்கு கண்ணீர் கடலிலே மிதந்து கொண்டி ருக்கக் கூடியவர்களுக்கோ ஒரு ஆறுதல் கூறக் கூடிய வகையிலோ, தீவிரமான ஒரு முறையிலே இந்திய அரசு தன்னுடைய பங்களிப்பை இன்னும் செய்ய முன்வரவில்லை என்பது, வேதனைக்கும், கண்டனத் திற்கும் உரிய நிலையிலே, நமக்கு அப்பாற்பட்ட நாடுகள், நேரடியான பண்பாட்டு உறவு இல்லாத நாடுகள் என்று சொல்லக்கூடிய ஸ்பெயின், கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து, அமெரிக்கா, செக் குடியரசு, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகள் இலங்கை அறிக்கை தொடர்பாக ஏற்கெனவே கேள்விகளை எழுப்பியுள்ளன.
அதுமட்டுமல்ல, நண்பர்களே! வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் தாமதிக்கப்படுவது, உயர் பாதுகாப்பு வளையங்கள், ஊடகவியலாளர் களுக்கான அச்சுறுத்தல்கள் இலங்கையில், 2005 இல் திரிகோணமலையில், அய்ந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள், ரொம்பத் தெளிவான அப்பட்டமான மனித உரிமைகள் குறித்து விசாரணைகளிலே ஏன் இன்னும் முன்னேற்றம் இலங்கை அரசிலே ஏற்படவில்லை என்பதை இந்த நாடுகள் கேட்கின்றன - மனித உரிமை ஆணை யத்திலே!
கேலிச் சித்திர ஓவியர் பிரகிட் எக்னலி கோடா
மூதூரில் 17 தொண்டு நிறுவனப் பணியாளர் களின் படுகொலை, அதுமட்டுமல்ல, அங்கேயே இருக்கக் கூடிய ஏடுகளிலே கூட, ஊடங்களிலே கூட கேலிச் சித்திர ஓவியர் (கார்ட்டூனிஸ்ட்) பிரகிட் எக்னலி கோடா - சிங்களவர். சிங்களவர்களாக இருந்தாலும் அங்கே நடைபெறுவது ஒரு பாசிஸ்ட் ஆட்சி.
அங்கே நடைபெறுவது ஹிட்லரை ஹிட்ல ராலேயே பெருக்கினால் என்ன விடை கிடைக்குமோ அப்படிப்பட்ட ஒரு கொடுமையான சிங்கள சர்வாதிகாரியினுடைய ஆட்சி என்ற அந்த முறை யிலே, அங்கே நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், நியாய உணர்வு படைத்தவர்கள் சிங்கள வர்களிலே ஒரு சிலர் இருக்கிறார்கள் ஆனால், சிங்கள வெறியர்களைப் பொறுத்தவரையிலே இவர்கள் தங்களுடைய ஆதிக்கம்; அதுவும் தன்னு டைய வேகமான ஆதிக்கம்.
தங்களுடைய ஒரே குடும்பமே அந்த நாட்டையே வளைத்திருக்கிறது என்று சொல்லக் கூடிய அளவுக்கு - அங்கே இருக்கக் கூடிய ஆதிக்கம். இவை அத்தனையும் அங்கே தெளிவாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. அதிலே ஒருவராக இருக்கக்கூடிய ஒரு கேலிச் சித்திரம் தீட்டியவர் - கார்ட்டூனிஸ்ட். அவரைக் கூட பிடித்து வைத்திருக்கின்றனர். அவர் இன்று வரையிலே எங்கே இருக்கிறார் என்று தெரிய வில்லை.
இலங்கைப் போரும் விடுதலைப்புலிகளின் இறுதி நாள்களும்
அதுபோல ஒரு கட்டுரை எழுதியவர் வசந்த் என்பவர். அவரைக் கண்டுபிடிக்கவே முடிய வில்லை என்று வழக்குப் போட்டு, பிறகு நீதிமன் றத்தின் தயவோடு அவர் வெளியே வந்த பிறகு, தெரிந்தவர்கள் வீட்டில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவர் மனைவியோடு திரும்புகிற நேரத்தில், திடீரென்று சிங்கள ராணுவம் அல்லாதவர்கள் யாரோ வருகிறார்கள் என்று காரை நிறுத்தி, இவரை மட்டும் கடத்திக் கொண்டு செல்கிறார்கள்.
என்னாயிற்று தெரியாது என்று - இதோ அங்கே பல ஆண்டுகள் இருந்து, இப்படிப்பட்ட பல தகவல்களை கார்டன் வைஸ் என்பவர் எழுதிய இலங்கைப் போரும் விடுதலைப்புலிகளின் இறுதி நாள்களும் கூண்டு ஆங்கிலேத்திலே கேஜ் என்று எழுதக் கூடிய இந்தப் புத்தகத்திலே பல்வேறு செய்திகளை இப்படி உள்ளடக்கமாகத் தந்திருக் கிறார்கள்.
நாலாவது சானலின் காணொளி
இந்த நாடுகள் இப்போது இவைகளைப் பற்றியெல்லாம் விசாரிக்கின்றன. சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பதற்கான சட்ட மூலம், அதுபோலவே, சானல் 4 என்று சொல்லக் கூடிய நாலாவது சானலின் காணொளித் தொடர் பான விசாரணை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இருதரப்பிலும் ஏன் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதற்கான செய்திகள் குறித்து, தெளிவாக அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது. இதுதான் குறிப்பிடத்தகுந்தது.
ஒரு காலத்தில் அமெரிக்காவினுடைய பார்வை யிலே பழுதிருந்தது. ஆனால், அவர்களே கூட கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குத் தெளிவு ஏற்பட்டு வருகிறது. மனித உரிமைகள் எப்படி யெல்லாம் அங்கே பறிக்கப்படுகிறது என்பதையும், ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமை என்பது உலக மனித உரிமையினுடைய ஒரு பகுதி. அதை யாருமே மறுக்க முடியாது.
எனவே, அவர்களை நாம் தமிழர்களாகப் பார்க்கிறோம். அவர்களை மனிதர் களாகப் பார்த்து, அங்கே என்ன கொடுமைகள் நடந்திருக்கின்றன என்பதையெல்லாம் எடுத்து அவர்கள் இதையெல்லாம் ஆய்வு செய்கின்ற இந்த நேரத்திலே, எப்படிப்பட்ட ஒரு ஆணவத்தோடு, ஏதோ ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் போர் நடந்தால், அங்கே போர் நினைவுச் சின்னம் வைப்பதற்குப் பொருள் இருக்கிறது.
அமெரிக்காவின் பேட்டன் டேங்க்
நான், சில ஆண்டுகளுக்கு முன்னாலே, பிற் படுத்தப்பட்டோர் நலத் துறைக்கான - உரிமைக் கான மண்டல் கமிஷன் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்பதற்காக, இந்தியா முழுவதிலும் இருக்கக் கூடிய பல்வேறு மாநிலங்களிலேயே நாங்கள் மாநாட்டினை நடத்தி வலியுறுத்தினோம். அழுத்தம் கொடுத்தோம் மத்திய அரசுக்கு. அப் பொழுது ஒரு மாநாடு பஞ்சாப் மாநிலத்தினுடைய எல்லை.
குருதாஸ்பூர் என்று அந்த ஊருக்குப் பெயர். அந்த எல்லையிலே நாங்கள் சென்றிருந்தபோது, மாநாடு நடந்த திடலுக்கு எதிரே ஒரு காட்சியை நாங்கள் பார்த்தோம். என்ன அந்தக் காட்சி என்று சொன்னால், அது பாகிஸ்தான் எல்லை அது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடை பெற்ற நேரத்திலே, நம்முடைய இந்தியப் படைகள் வெற்றி பெற்று, அங்கிருந்த பாகிஸ்தான் ராணுவத் தினர் ஓடிப் போனார்கள்.
ஆனால், அப்போது அவர்களுக்கிருந்த தைரியம் என்னவென்றால், அமெரிக்கா தங்களுக்கு பேட்டன் டேங்க் கொடுத் திருக்கிறது என்ற ஒரு நம்பிக்கை; தவறான நம்பிக்கை. எனவே, அமெரிக்காவின் பேட்டன் டேங்க்கை வைத்து நம்மை வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்தார்கள்.
அன்றைய தற்காப்பு அமைச்சர் யார் என்றால், பாபுஜெகஜீவன்ராம்.
அன்றைய தற்காப்பு அமைச்சர் யார் என்றால், பாபுஜெகஜீவன்ராம்.
எனவே, பாபுஜெகஜீவன்ராம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அந்தப் போரிலே, இந்தியா வென்றது - மிகப்பெரிய அளவிலே - இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் பிரதமராக இருந்த காலகட்டம்.
அந்த பேட்டன் டாங்க்கை பாகிஸ்தான் ராணு வத்தினர் அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அதை அவர்கள் ஒரு நினைவுச் சின்னமாக வைத்தி ருக்கிறார்கள்.
எங்கள் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. அதன் எதிர்பக்கத்திலே பேட்டன் டாங்க்கில் சிறுவர்கள் எல்லாம் பூங்காவில் விளையாடுவது போல, அதன்மேல் ஏறி விளையாடிக் கொண்டிருக் கிறார்கள். அதனை ஒரு நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறார்கள் - அது நியாயம்!
காரணம் என்ன? பாகிஸ்தானோடு போர் நடந்தது, அதன் காரணமாக இந்தியா வென்றது. அவர்கள் விட்டுப் போன ஒரு சின்னம்; அவர்க ளுடைய ஆயுதங்களைக் கைப்பற்றி இருக்கிறார்கள். அதிலே வலிமை வாய்ந்த அமெரிக்காவின் பேட்டன் டாங்க்கை நாங்கள் ஒரு கைப் பார்ப்போம்; எங்களுக்கு அந்த சக்தி உண்டு; எங்கள் நாட்டிற்கு அந்த வலிமை உண்டு என்று காட்டுவதற்காக நினைவுச் சின்னம் வைத்திருக்கிறார்கள் அது நியாயம், அது இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற போர்!
சமாதானத்திற்கு வருகிறவர்களை சுட்டுக் கொல்கிறீர்களே இது நியாயமா?
ஆனால், நண்பர்களே, சிங்கள ராஜபக்சே, இப்போது முள்ளிவாய்க்கால் பக்கத்திலே, அங்கே கடைசி நேரத்திலே எப்படிப்பட்ட ஒரு கொடுமை நடந்ததெல்லாம் தெளிவாகத் தெரியும். சமாதான பேச்சுவார்த்தை என்று வெள்ளைக் கொடி பிடித்து வரும்பொழுதுகூட, இன்னும் கேட்டால், நடேச னுடைய மனைவிக்கு சிங்களம் தெரியும். அவர் சிங்கள மொழியிலே, சமாதானத்திற்கு வருகிறவர் களை நீங்கள் சுட்டுக் கொல்கிறீர்களே இது நியாயமா என்று கேட்டிருக்கிறார்கள் என்று இந்தப் புத்தகத்திலே நடுநிலையாளர்கள் எழுதியிருக் கிறார்கள்.
இதனைப் படிக்கின்றபொழுது, நம் நெஞ்சத்தில் ரத்தம் வடிகிறது. அப்படிப்பட்ட நேரத்திலே நடைபெற்ற அந்தக் கொடுமைகள் - அந்த நாட்டினுடைய குடிமக்கள் அல்லவா அவர்கள். எண்ணிப்பார்க்கவேண்டாமா?
சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள்
வடக்கு, கிழக்கு எந்தப் பகுதியாக வேண்டுமா னாலும் இருக்கலாம். அவர்கள் இலங்கையின் குடிமக்களா இல்லையா? அடிப்படையை சிந்திக்க வேண்டுமா இல்லையா? எனவே, உள்நாட்டுப் போர் என்று வைத்துக் கொள்ளலாம். வெளிநாட்டில் நடைபெற்றால்தான் அதற்குப் போர் என்று பெயர். சரி, உள்நாட்டுப் போர் என்று வைத்துக் கொள்ளலாம்.
அவர்கள் போர் போர் என்று சொன்னார்கள். நாம் அப்பொழுதே சொன்னோம், அது சுதந்திரப் போராட்டம்; தமிழர்களுடைய சுதந்திரப் போராட்டமாகத்தான் நடத்துகிறார்களே தவிர, அவர்களை பயங்கரவாதிகளாக அவர்களை ஒருபோதும் கருதக்கூடாது. They are Freedom Fighters சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் என்று சொன்னோம். அதனை இப்போது அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் ஒப்புக் கொண்டு, ஒரு நினைவுச் சின்னம் வைத்து தங்க ளுடைய அறியாமையைக் காட்டிக் கொள் கிறார்கள்.
அதன்மூலம் என்ன விளங்குகிறது? அங்கே ஒரு நினைவுச் சின்னத்தை ஏற்பாடு செய்து, வெற்றிச் சின்னம் என்று அதற்கு பெயர் சொல்லி, சிங்கள வெறிச்சின்னமாக அதை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், ஒவ்வொரு நாளும், 2 ஆயிரம், 3 ஆயிரம் பேரைக் கொண்டு போய் அங்கே வேடிக்கைக் காட்டிவிட்டு, சிங்களவர்களை திருப்பி அழைத்து வருகிறார்கள் என்று சொன்னால், இது தமிழனை அவமானப் படுத்துவது என்பது ஒரு பக்கத்தில் இருக்கட்டும். அருமை சகோதரர் சுப.வீ. அவர்கள் சொன்னதைப் போல, வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுவது என்பது ஒரு பக்கத்தில் இருக்கட்டும்,
சிங்களனும், தமிழனும் ஒருபோதும் ஒன்றாக அங்கே வாழ முடியாது
அதையெல்லாம் விட ஒரு பெரிய உண்மை அதன்மூலம் வரலாற்றின் வரிகளிலே எழுதப்படு கிறது. அந்த உண்மையிலே நாங்கள் ஏற்கிறோம்.
அது என்ன தெரியுமா? இனியுங்கூட எதிர்காலத் திலே சிங்களனும், தமிழனும் ஒருபோதும் ஒன்றாக அங்கே வாழ முடியாது என்பதை அவர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். அதனுடைய அடையாளம்தானே அந்தச் சின்னம்.
இரண்டு தேசங்கள், இரண்டு நாடுகள் நிர்பந்தத் தினாலே ஒன்றாக்கப்பட்டிருக்கிறது. அதனை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர்கள் வைத்திருக் கிறார்கள் என்று சொன்னால், உங்களை நாங்கள் வெற்றி கண்டோம் என்று சொன்னால், நீங்கள் எல்லாம் எங்கள் அடிமைகள் என்று சொன்னால், நீங்கள் எல்லாம் எங்கள் நாட்டிலே நாங்கள் போடுகின்ற உத்தரவுக்கு அடிபணிய வேண்டும் என்று சொன்னால், என்ன நிலை?
டெசோவினுடைய பணி என்ன?
உலக நாடுகள் இன்றைக்கு உற்று நோக்குகின்றன. இந்தக் காலகட்டத்திலேதான் சரியான நேரத்தில் டெசோ தன்னுடைய கடமையைச் செய்திருக் கிறது. பார்வையிலே பழுதுபட்டவர்களைத் தவிர, கருத்திலே தெளிவில்லாதவர்களைத் தவிர, மற்ற எல்லோருக்கும் இன்றைய காலகட்டத்தில் டெசோவினுடைய பணி என்ன என்பது புரியும். அருமை சகோதரர் அவர்கள் சொன்னதைப்போல, சுட்டிக்காட்டியதைப் போல, இதை கலைஞர் எதிர்ப்பு அரசியலுக்கு இதனை ஒரு காயாக நகர்த்த ஒரு வாய்ப்பு என்று கருதுகின்ற அந்தக் கோணல் புத்திக்காரர்களை தவிர, மற்ற அத்தனைப்பேரும் தெளிவுள்ளவர்கள், நியாய உணர்வு உள்ளவர்கள், பிரச்சினையின் பல பரிமாணங்கள் என்ன என்று பார்ப்பார்கள்.
ஒரு கட்டம் முடிந்தது. அடுத்த கட்டத்திலே ஏன் நடந்தது? எப்படி நடந்தது? இதை செய்திருந்தால் என்ன? அதை செய்திருந்தால் என்ன? என்று சொல்வது இருக்கிறதே, இவர் நினைத்திருந்தால் காப்பாற்றிவிடலாமா என்பதைப்பற்றியெல்லாம் நீண்ட நேரம் அவர்கள் விளக்கம் சொன்னார்கள்.
மிகப்பெரிய அளவிற்கு ஏமாற்றியிருக்கிறார்கள்
பொதுவாக ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. The Buts and the have a no stealing a history என்று பதில் சொல்வார்கள். எல்லாம் சொல்லிவிட்டு, ஆனால், என்று சிலர் முடிப்பார்கள். எல்லாம் பேசிவிட்டு, இப்படி நடவாதிருந்தால், என்ற போட்டிருப்பார்கள். கை என்று சொல்லி. அதுமாதிரி வரலாற்றிலே பேசினால், அது பேச்சுக்குப் பயன்படுமே தவிர, காரியசித்திக்கு, நடைமுறைக்கு ஒவ்வாது. ஏனென்றால், இப்படி நடந்திருந்தால் என்றால், யார் வேண்டுமானாலும், எதை வேண்டு மானாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆகவே, அந்தக் காலகட்டத்திலே அவர்கள் சொன்னதைப் போல, மிகப்பெரிய அளவிற்கு ஏமாற்றியிருக் கிறார்கள் என்று சொன்னார்கள்.
கன ரக ஆயுதத்தைப் பயன்படுத்தவில்லை. எழுதிக் கொடுத்து மத்திய அரசிலிருந்து வந்ததைக் காட்டுகிறார்கள். நாங்களே பார்க்கிறோம். பார்த்த பிறகு, சரி, இதற்குமேலே அங்கே சுமூகமாக இருக்கும் என்று நினைத்தோம்.
எங்களையே ஏமாற்றினார்கள். மத்திய அர சையே நம்ப வைத்தார்கள். நாங்கள் என்ன செய்வது என்றுதான், வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த ஒருவர், அண்மையிலே ஜூனியர் விகடன் பத்திரிகையிலேகூட ஒரு பேட்டியைக் கொடுத் திருக்கிறார் அந்த அம்மையார் அவர்கள்.
வந்திருக்கிறதா, இல்லையா? தயவு செய்து நினைத்துப் பார்க்கவேண்டும். அதற்குமேலே என்ன செய்ய முடியும் என்பது வேறு பிரச்சினை.
-(தொடரும்)
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தக்கோரி குமரி முதல் திருத்தணி வரை பிரச்சாரம்
- சேது சமுத்திரத் திட்டம் கூடாது என்பது எம்.ஜி.ஆருக்குக்கூட செய்யும் துரோகம் அல்லவா?
- இராமாயணம் நடந்த கதையா? இராமன் யோக்கியமானவன் தானா?
- திராவிடத்தால் யாரும் வீழ மாட்டார்கள்! திராவிடத்தால் எழுந்தார்கள் என்பதுதான் வரலாறு!
- மாண்புமிகு வரும், போகும் - ஆகவே மானமிகுவாக மாறுங்கள்!
No comments:
Post a Comment