நமது
பொருளாதாரத்தின் அடிப்படைக் கலாச்சாரம் என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ்.
ஆலோசகரும் கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை என்று பொதுவாக அறியப்பட்ட வருமான
திருவாளர் எஸ். குருமூர்த்தி பேசி இருக்கிறார். அவர் பேசிய இடமோ
டில்லியில் உள்ள பி.ஜே.பி. யின் தலைமை அலுவலகம் (20.10.2012).
பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரான எல்.கே. அத்வானி, பி.ஜே.பி.யின் தேசியத்
தலைவர் நிதின் கட்காரி முதலியோரும் பங்கு கொண்டுள்ளனர். 1) இந்தியாவுக்கு
வருகை தராத இந்தியாவைப்பற்றி குறைவாக அறிந்த அறிஞர்களான காரல்மார்க்ஸ்,
மாக்ஸ் வெப்பர், ஜான் கால்பிரைத் போன்ற அறிஞர்களால் உருவாக்கப்பட்டவை
என்பது குருமூர்த்தி அய்யரின் குற்றப் பத்திரிகையின் முதல் அம்சமாகும்.
ஒரு
நாட்டைப் பற்றி அறிய வேண்டுமானால் அந்த நாட்டுக்கு நேரில் வருகை தந்திருக்க
வேண்டும் என்றால் பல நாடுகளின் பொருளா தாரம், சமூகச் சூழல் ஆகியவைபற்றி
எழுதுபவர்கள், விமர்சனம் செய்ப வர்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட நாடு
களுக்குச் சென்று வந்தவர்கள்தானா?
இந்தியாவின்
இந்துமதம்பற்றி காரல் மார்க்ஸ் விமர்சித்ததுண்டு. இப்படி இந்து மதத்தின்
அடி மடியில் கை வைத்து விட்டால் போதும்; இந்தப் பூதேவர்களுக்கு வெட
வெடப்பும், ஆத்திரமும் பொங்கி எழுந்து விடும்.
மார்க்சும், எங்கல்சும் இந்தியாவைப் பற்றி 28 கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
மார்க்சின் காலனியாதிக்கம் எனும் நூலில் மார்க்சு குறிப்பிடுவது முக்கிய மானது.
சமூக
நோக்கில் பார்த்தால் இந்துஸ்தானம் கிழக்கிந்திய அயர் லாந்தை
ஒத்திருக்கிறது. இத்தாலி சிற்றின்ப வேட்கை நிறைந்ததாக இருக்கிறது.
இத்தாலியும் அயர் லாந்தும் கலந்த ஒரு வினோதமான கலப்பாகவே இந்துஸ்தானம்
தோன்றுகிறது. சிற்றின்ப வேட்கை யும், துன்பமும் நிறைந்துள்ள ஒரு உலகமாக அது
இருக்கிறது. இங்குள்ள மதமும் சிற்றின்பத்தின் சிறப்பை சிலாகிக்கும் போதே
திடீரென்று தன்னையே சித்திர வதை செய்துகொள்ளும் சன்னி யாசத்தையும்
ஆதரிப்பதாக இருக்கிறது என்று படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
குடியானவர்களின்
வாழ்க் கையைச் சித்திரிக்கும் இந்தச் சிறு கிராம அமைப்புகள் சிறியவை களாக
இருந்தாலும் அவர்கள் கீழை நாட்டுச் சர்வாதிகாரத்தின் அடித்தளங்களாக
இருந்தன. அவை மனித அறிவை மூடநம் பிக்கை என்ற சிறு போர்வைக் குள்ளேயே
முடக்கி வைத்தன. இதனால் அவர்களது சரித்திர கால வீர உணர்வும், சிறப்புகளும்
அழிந்து போயின. இந்த அமைப் புகள் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும், தங்களைத்
தாங்களே பெருமையோடு பார்த்துக் கொண்டன. சாம்ராஜ்ஜியங்கள் அழிந்தாலும்
நகரங்களில் பயங்கரப் படுகொலை நடந்தாலும், எவ்வளவு கொடுமையான நிகழ்ச்சிகள்
நடந்தாலும், அவற்றைப் பற்றி இந்தக் கிராமங்கள் கவலைப்படவே யில்லை. எனவே
ஆதிக்கவாதி களின் பிடியில் இக்கிராமங்கள் எளிதில் விழுந்தன. கண்ணிய மில்லாத
தேக்கமடைந்து சோம்ப லாகிக் கிடந்த இந்தக் கிராமங் கள்தான் கொலைகளை மதச்
சடங் குகள் என்ற பேரில் ஆதரித்தன என்பதை நாம் மறக்கக் கூடாது.
இந்தக்
கிராம சமூகங்களில் சாதி வேற்றுமையும், அடிமைத்தனமும் வளர்ந்து கெட்டு
விட்டன. அவை மனிதனை சூழ்நிலைகளின் அதிபதியாக மாற்றுவதற்குப் பதிலாக
சூழ்நிலைகளின் அடிமைகளாக மாற்றிவிட்டன. கண் மூடித்தனமாக இயற்கையைத்
துதித்தன. இயற்கை யான தன் சக்தியால் வென்று அதைப் பயன்படுத்திக் கொள்ளும்
மனிதன் இங்கே தாழ்ந்து போய் இயற்கைக்கு முன்னால் குரங்குக் கும்,
பசுவுக்கும் மண்டியிட்டு வணங்கினான் என்பதை நாம் பார்க்க வேண்டும். (நூல்
பக்கம் 40-_41)
இப்படி மார்க்ஸ் இந்தியாவை - அதன் இந்துத்துவப் பிற்போக்குத் தன்மைகளைக்
கூர்மையாக அம் பலப்படுத்தினால் குருமூர்த்திகளால் எப்படி சீரணித்துக் கொள்ள
முடியும்?
மார்க்சு
சொன்னது சரியா? தவறா? என்று சர்ச்சை செய்வதற்குப் பதிலாக ஒரேயடியாக - அவர்
வெளிநாட்டுக் காரர் என்பதும், இந்தியாவை நேரில் பார்த்திராதவர் என்றும்
புறந் தள்ளப் பார்ப்பது ஒரு வகையான தப்பிக்கும் தந்திரமாகும் _ இயலாமையும்
ஆகும்.
இந்தியாவுக்கு
வந்து இந்தியாவின் வருண தர்மத்தையும் பிற்போக்குத் தனங்களையும் பார்ப்பன
ஆதிக் கத்தையும் நேரில் எழுதியவர்களின் கருத்துக்களையாவது இவர்கள் ஏற்றுக்
கொண்டவர்களா என்றால் அதுவும் இல்லை. அப்படி எழுதியவர்கள் கிறித்தவர்கள்
என்று மத முத்திரை குத்தி அப்பொழுதும் தப்பிக்கும் வழியைத்தான்
பார்க்கிறார்கள்; இது பார்ப்பனர்களுக்கே உரித்தான தந்திர உபாயம் என்பதை
உணர்க!
2. மேலை
நாடுகளில் சொல்லப் படும் சிவில் சொசைட்டி என்பது கேளிக்கை நிலையம் (கிளப்)
போன்றது. ஆனால், நமது சமூகம் என்பது வேறானது இந்த சமூக முறைதான் ஒரு
காலத்தில் கழிவு நிறைந்த இடமான சூரத் நகரத்தை வைரம் வெட்டும் தொழில் நகரமாக
உருவாக்கியது. உலகம் முழுவதும் உள்ள
10 வகையான வைரங்களில் 9 வகையான
வைரங்கள் சவுராஷ் டிராவில் வெட்டப்படுகின்றன.
சிவில்
சொசைட்டியில் உறவுகள் என்பது ஒப்பந்தம் ஆகும். அந்த சொசைட்டி ஒப்பந்தத்தின்
அடிப் படையில் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் நமது அரசியல்
சட்டமும் உருவாக்கப்பட்டது. எங்கெல்லாம் குடும்ப உறவுகளும், சமூக உறவுகளும்
பரம்பரியமாகக் காக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் அரசுகள் செய்ய வேண்டியதை
சமூகங்களே செய்கின்றன. நம் நாட்டிலுள்ள சேமிக்கும் பழக்கம் பண்பாட்டுடன்
நெருங்கிய தொடர்புடையது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் கணவன் மனைவி,
குழந்தைகள் பராமரிப்பு என அனைத்தும் ஒப்பந்தங்களின் அடிப்படையிலானவை. அது
போன்ற நாடுகளில் செயல்படுத்தப்படும் பொருளாதார கொள்கைகளை நம் நாட்டில்
இறக்குமதி செய்வது எப்படி பொருத்தமாக இருக்கும்? என்ற வினாவையும்
தொடுத்துள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி.
இது அப்பட்டமான பார்ப்பனீய ஆர்.எஸ்.எஸ். சிந்தனையின் பிரசவ மாகும்.
சூரத் நகரம் வைரத் தொழிற் சாலையாக ஒளிர்வதற்குக் காரணம் இந்து சமூக அமைப்பின் பாரம்பரியக் கலாச்சாரமாம்.
அப்படியானால் இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ந்து வரும் தொழிற்சாலைகள் எந்த வகைக் கலாச்சாரத்துக்குச் சொந்தமானவை?
கோலார் தங்கச் சுரங்கத்துக்கு எந்தக் கலாச்சாரம் உத்தரவாதம் கொடுத்ததாம்?
அரசுகள் செய்ய வேண்டியதை இங்கு சமூகங்கள் செய்கிறதாமே! இங்குள்ள சமுதாயம் என்பது என்ன? ஜாதீய கட்டுமானம்தானே!
ஜாதீயக்
கட்டுமானத்தில் சமுதாய உறவுகள் உண்டா? சமுதாய உறவு களைத் தகர்ப்பதுதானே
இந்துத் துவாவின் ஜாதீய அமைப்பு? தீண்டாமை நிலவும் ஒரு சமூக அமைப்புகள்
சமூக உறவு எங்கிருந்து குதிக்கும்? நகர சுத்தித் தொழில் எந்தச் சமூக
உறவுகளின் அடிப்படையில் நடைபெறுகிறது? இந்த அடிப்படைப் பணியைச் செய்வதற்கு
குறிப்பிட்ட ஜாதியினருடன் சமூக உறவுகளின் அடிப்படையில் இணைந்து பணி
செய்வோர் உண்டா?
இங்குள்ள சமூக உறவுகள் எப்படி இருக்கின்றன? வறுமைக் கோட்டுக் கும் கீழ் உழலுவோர் எந்த ஜாதியினர்?
தாழ்த்தப்பட்ட
மக்களில் 86.25 விழுக்காட்டினர் நிலமற்றவர்களாக இருப்பது எந்த
அடிப்படையில்? விவசாயக் கூலிகளாகப் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களாக
இருப்பது ஏன்? இதில் 48 விழுக்காட்டினர் கடனாளிகளாக இருப்பதும்தான். சமுக
உறவுகள் பாரம்பரியமாகப் பாதுகாக்கப் பட்டதன் இலட்சணமா?
பாரம்பரிய உறவுக் கலாச்சாரம் என்று திருவாளர் குருமூர்த்தி சொல்லுவது மறைமுகமான ஜாதீய கட்டுமானத்தைத் தானே?
உண்மையைச்
சொல்லப் போனால் தாழ்த்தப்பட்டவர்கள் வறுமையின் பிடியில் சிக்கிக்
கிடப்பதற்கே காரணமே ஜாதியின் அடிப்படையில் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டதுதானே
ஒதுக்கப்பட்டதுதானே!
முதல்
பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையத்தின் தலைவராக இருந்த காகாகலேல்கர் மத்திய
அரசிடம் அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கருத்து - குருமூர்த்தியின்
கருத்தினைக் கருச் சிதைவு செய்யக் கூடியதாகும்.
ஜாதி
அமைப்பானது உலகில் எங்கும் கிடையாது. இங்குதான் இருக் கிறது. பொருளாதார
முன்னேற்றம் அடைந்தால் சமுதாய அமைப்பு மாற்றம் அடையும் -_ ஜாதி ஒழிந்து
விடும் என்கின்றனர் சிலர்.
அந்த
வாதம் தவறானதாகும். ஜாதி காரணமாகத்தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக்
கல்வி இல்லை உணவு இல்லை; உடை இல்லை, இது பொருளாதார, அமைப்பினால் வந்தது
என்பது தவறு. ஜாதி அமைப்பினால் தான் பொருளாதார வேறுபாடு இருந்து வருவது
உண்மையாகும்.
பொருளாதாரத்தினால் பின்னடைந்து நிற்பது ஜாதியினால் ஏற்பட்ட விளைவே தவிர ஜாதி தோன்றுவ தற்குரிய காரணம் அல்ல என்றாரே காகாகலேல்கர்
குருமூர்த்தி
பெருமைப்படும் ஜாதியின் அடிப்படையிலான பாரம்பரிய சமூக உறவு எவ்வளவுப்
பெரிய ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது இன்னொரு பார்ப் பனரான
காகாகலேல்கரே மறுக் கிறாரே!
இந்தியா
ஒரு விவசாய நாடு என்று சொல்லப்படுகிறது. அந்த விவசாயத்தைப் பாவ தொழில்
என்று சொல்லுவது திரு. குருமூர்த்தி தூக்கிப் பிடிக்கும் இந்து சமூக
சாஸ்திர மான மனுதர்மம் (அத்தியாயம் - 10; சுலோகம் 84)
பார்ப்பனீய
இந்துக் கலாச்சாரம் என்பது இந்தக் கதியில் இருக்கும் பொழுது அதனைத்
தலைகீழாகப் புரட்டிச் சொல்ல குருமூர்த்தி போன்ற பார்ப்பனர்களால்தான்
முடியும்.
- மின்சாரம்-
No comments:
Post a Comment