மத்திய அமைச்சரான சிறீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கவிஞர்கள் கூட்டம் ஒன் றில் பேசும்போது, கிரிக் கெட் வெற்றி படிப்படியாக அலுத்துப் போய்விடும்; இது நாளாக, நாளாக மனைவியின் வசீகரம் குறைந்துவிடுவதைப் போன்றதாகும் என்று வக்கிரப் புத்தியோடு உளறியது - பெரும் புயலைக் கிளப்பிவிட்டது.
பொதுவாகவே இது ஓர் இந்து மதச் சிந்தனை யாகும். இந்து மதத்தில் எந்த இடத்தில் கைவைத் தாலும் இந்த வக்ரம்தான் படம் எடுத்தாடும். இந்து மதக் கடவுள்கள்பற்றிய புராணங்களும், இதி கா சங்களும்கூட இவற்றைத் தான் தூக்கிப் பிடிக்கும். ஓம் என்று சொன்னால் ஆண் - பெண் சேர்க்கை என்று கூறி, அதற்கு ஏகப்பட்ட தத்துவார்த்த வண்ணங்களைப் பூசுவார் கள். அதே பாணியில் தான் மத்திய அமைச்சர் பேசி இருக்கிறார்.
இதனை அரசியல் படுத்த விரும்பிய யோக் கியப் பொறுப்பு(?) மிக்க பா.ஜ.க. என்ன செய்தது தெரியுமா? அவனை அனுப்பாதே - அவன் கலகம் செய்துவிடுவான் - என்னை அனுப்பு செருப்பால் அடித்து வரு கிறேன்! என்று சொன்ன வன்போல நடந்துகொண் டுள்ளது பி.ஜே.பி.
அமைச்சரைக் கேலி செய்வது என்ற பெயரால் இந்தி திரைப்பட நடிகை ராக்கி சவந்து என்ப வரும், அமைச்சர் ஜெய்ஸ் வாலும் கல்யாண கோலத் தில் இருப்பதுபோன்ற காட்சியைக் கணினி மூலம் கிராபிக்ஸ் செய்த படத்தை சுவரொட்டி களாக அச்சிட்டு, கான் பூர் நகரம் முழுவதும் பி.ஜே.பி.யினர் ஒட்டி தங்களின் வக்கிர வழி சலை வெளிப்படுத்திக் கொண்டுவிட்டனர்.
தன்னை அவமானப் படுத்திய, அலங்கோல மாக சுவரொட்டி அடித்து ஒட்டியவர்கள்மீது கடு மையான விமர்சனங் களை முன்வைத்துள்ளார் நடிகை ராக்கி சவந்து..
எந்த அரசியலிலும் ஈடுபடாத என்னை ஏன் இப்படி அவமானப்படுத்து கிறீர்கள்? என்பதோடு நில்லாமல், பி.ஜே.பி.யில் அதிகாரபூர்வ உறுப்பினர் களாக ஏராளமான நடி கைகள் இருக்கிறார்களே - ஹேமாமாலினி இல் லையா? ஸ்மிருதி ராணி இல்லையா? அவர்கள் படத்தை இணைத்துப் போடவேண்டியதுதானே என்று வெடித்துக் கிளம்பிவிட்டார்.
அரசியலின் தகுதி எந்த அளவுக்குச் சாக் கடையாகி விட்டது; அதுவும் தார்மீகப் பண்பு கள் பற்றி வக்கணை பேசும் பி.ஜே.பி. எந்த அளவுக்கு வக்கிர மலக் குட்டையாகி இருக்கிறது பார்த்தீர்களா? - மயிலாடன்
No comments:
Post a Comment