Sunday, October 28, 2012

நாகசாமியும் நாட்டிய சாஸ்திராவும்


- பொறியாளர் ப. கோவிந்தராசன்

முன்னுரை
நாடகம் மற்றும் நாட்டியம் என்றாலே கொஞ்சம் கற்பனை; கொஞ்சம் ஒப்பனை; கொஞ்சம் நடிப்பு; கொஞ்சம் கவர்ச்சி ;சேர்ந்தது என்று தமிழ் நாட்டில் உள்ள பள்ளிச் சிறுவனுக்குக் கூடத் தெரியும். இந்த ஒபபனைக் காவியம், மற்றும் கற்பனை கலந்த புராணக் கதைகள் மூலம் ஆரியர் களின் மதத்தையும், தெய்வங்களையும் பரப்ப எழுதப்பட்ட அய்ந்தாவது வேதமாம், நாட்டிய சாஸ்திரா எனும் நூல். கற்பனைகளுக்கு உண்மை வடிவம் தர எழுதப்பட்ட நாட்டிய சாஸ்திராவின் அடிப்படையில் சங்க கால இலக்கியங்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம் மற்றும் இதர நூல்கள் எழுதப்பட்டன என்று டாக்டர் நாகசாமி தனது Mirror of Tamil and Sanskrit  என்ற நூலில் தெரிவித்துள்ளார். இதன் மையக் கருத்துக்கள் கீழே உள்ளவாறு விவாதிக்கப்படுகிறது.
நாட்டிய சாஸ்திராவின் நோக்கம்
ஆரியர்களின் மத வேதங்களான ரிக், யஜூர், சாம  அதர்வண ஆகியவற்றைப் பெண்கள் (மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினர்), சூத்திரர்கள் (மக்கள் தொகையில் 97 விழுக்காட்டினர்) ஆகியோர் படிக்கத் தகுதி இல்லாத வர்கள் என ஆரியர்கள் தெரிவித்து வந் தனர். இந்த நிலை உலகம் தோன்றியது முதல் வேத கால இறுதிக் கட்டம் வரை நடைமுறையில் இருந்து வந்தது. சூத்திரர்கள் அனைவரும் உல்லாச மாகப் பொழுதைப் போக்க நாட்டிய சாஸ்திராவைப் படைத்து இந்திரனிடம் தந்தனர். இந்திரன் பரதமுனிவரிடமும், அவரது 100 மகன்களுக்கும் தந்தார். நாட்டிய சாஸ்திரம் கிடைத்த பின் பெண்களும், சூத்திரர்களும் வேதங் களைப் படிப்பதை மறந்து விட்டு உல் லாசமாகப் பொழுதைப் போக் கினார்கள்.
வட இந்திய நாட்டியக் கலை
வட இந்தியாவில் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாய், அரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீஹார், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில், நாட்டியக்கலை பல்வேறு படை யெடுப்புகளால் பாதிக்கப் பட்டது. நாட்டியக் கலையில் மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருந்த மன்னர் களில் முதன்மையானவர்கள் மவுரி யர்கள், குப்தர்கள், முகலாயர்கள், இறுதியில் ஆங்கிலேயர்கள் ஆவர். இந்தப் பேரரசுகள் ஆதரவினால் வளர்ந்த நாட்டியக் கலை பன்முகத் தன்மை உடையதாக இருந்தது. நாட்டிய சாஸ்திரா வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட போதிலும், அது மவுரியர் மற்றும் குப்தர்கள் காலத்தில் தான் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. வட இந்திய நாட்டியக் கலையின் சிறப்புக்கள் கீழே தரப் பட்டுள்ளன.
  • வட இந்திய நாட்டியக் கலையில் சிறந்து விளங்குவது கதக் நடனம் ஆகும். இந்தப் பெயர் கதைகள் சொல்லப்படும் நாட்டியங்களுக்குப் பெயராக அமைந்தது. முகலாயர் ஆட் சிக்கு முன்னர் கதைகளை நாட்டியம் மூலம் சொல்லும் இனத்தவர்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் கதக்கார் என்று அழைக்கப் பட்டார்கள். ஆரம்ப காலத்தில் இராமாயண, மகாபாரதக் கதைகள் சொல்லப்பட்டன. எனவே கதக் நடனம், மதம் சம்பந்தப்பட்ட விழாக்களிலும், அரசர் சம்பந்தப்பட்ட தர்பார் நிகழ்ச்சிகளிலும், பெரிதும் நடத்தப்பட்டன. முகலாயர் ஆட்சிக் காலத்தில இந்து-வேத மதக் கதைகளுக்கு வரவேற்பு மங்கியது.
  • முகலாய காலத்தில் புராணக் கதைகளுக்கு முக்கியத்துவம் குறைந்து, மகிழ்ச்சி தரக்கூடிய நாட்டிய வகைகள் தோன்றின.
    நாட்டியம், சங்கீதம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பெண்கள் பாய் என்று அழைக்கப்பட் டனர். உதாரணம் மீராபாய், பன்னிபாய்.
  • முகலாயர் காலத்தில் பர்தா அணியும் முறை பின்பற்றப்பட்டதால் பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்வது குறைந்தது.
  • நாட்டிய சாஸ்திராவில் பெண் கள்தான் பாடலுக்குச் சிறந்தவர்கள் என்று கூறியபோதும், பாடுவதற்குப் பெண்கள் முன்வரவில்லை.
  • ஆரம்ப காலங்களில் கதக் நாட்டியம், கிராமங்களில், நாட்டுப்புறக் கதைகள் சொல்லுவதற்குப் பயன்பட் டது. இதன் தோற்றம் 2000 ஆண்டு களுக்கு முந்தையது ஆகும்.
  • இந்தியாவில், வட இந்தியா கி.பி. 1300-1600 காலக் கட்டங்களில் வைணவ மதம் வளர ஆரம்பித்தது. பக்தி இயக்கம் வளரத் தொடங்கியது. ராதாகிருஷ்ண லீலைகள் சொல்லும் கதக் நாட்டியங்கள் பரவின.
  • முகலாயர் காலத்தில் நாட்டியம் ஆடும் முறை மாற்றம் அடைந்தது. வேக மாக ஆடுதல், சுழன்று ஆடுதல் பெரிய அளவில் சேர்க்கப்பட்டன.
  • முகலாயர் காலத்தில் நாட்டியத் தில் Ada and Nazaket’ (காதல், அழகு, வெட்கம்) போன்ற பகுதிகள் அதிகரித் தன. கதக் நிகழ்ச்சிகளில், துமரி,  கஜல்,  தத்ரா வகைகள் முக்கியத்துவம் பெற்றன. இந்திய உடைகளான சோளி மற்றும் பாவாடை நீக்கப்பட்டு, பிஸ்வாஸ் மற்றும் சுரிதார் சேர்க்கப்பட்டன.
  • கதக் நாட்டியத்தின் பெரும்பகுதி நாட்டிய சாஸ்திராவில் சொல்லப்பட்ட விதிகளைக் கடைப் பிடிக்கப்படவில்லை.
தென் இந்தியாவில் நாட்டியக் கலை
  • தென்னிந்தியாவில் கோவில்கள் கட்டும் பணிகள் குப்தர் காலம் முதல் தொடங்கின. இந்தக் கோவில் திருவிழாக் களில் ஆடும் நடனத்திற்கு ஆகம நடனம் என்று பெயர். இது கோவிலின் உட்பகுதியில் நடைபெறும். இத்தகைய நடனத்தை நாட்டிய சாஸ்திரா மார்சி நடனம் அல்லது ஆன்ம விடுதலைக் கான நடனம் எனக் குறிப்பிடுகின்றது. உல்லாசப் பொழுது போக்கிற்காகச் செய்யப்படும் மற்ற நடன வகைகள் தேசி நடனங்கள் என்று அழைக்கப்பட்டன.
  • அரசர் அவைகளில், சாஸ்திரிய சங்கீதத்துடன் நடத்தப்படும் நடனங்கள் கர்நாடகம் என அழைக்கப் பட்டன. இந்தப் பெயர் வட இந்திய - அன்னிய இசையில் இருந்து வேறுபடுத்திக் காட்ட உதவியது.
  • தென்னிந்தியாவில் நாட்டிய சாஸ்திராவில் சொல்லப்பட்ட விதி களுக்கு உட்பட்ட நடன வகைகளை சாஸ்திரிய நடனங்களாக சங்கீத நாடக அகடமி அங்கீகரித்துள்ளது. அவை (1) பரதநாட்டியம் (தமிழ்நாடு) (2) கதக்களி (கேரளா) (3) குச்சிப்புடி (ஆந்திரா) (4) மோகினியாட்டம் (கேரளா). இதைத் தவிர கதக், மணிப்புரி (மணிப்பூர்), சத்திரியா (அஸ்ஸாம்), ஒடிசி (ஒரிஸ்ஸா) அகில இந்திய அளவில் அங்கீகரிக் கப்பட்ட 8 நடன வகைகளில் 4 நடன வகை தென்னாட்டில் (திராவிட நாட்டில்) அமைந்து சிறப்பானது.
  • மேற்கண்ட 8 வகைகளில் தென்னாட்டில் கோவில் நடனங்கள் என நாட்டிய சாஸ்திராவில் குறிப் பிடப்பட்டுள்ள நடனம் பரதநாட்டியம் மட்டும்தான். மற்றது ஒடிசி ஆகும்.
  • பழங்கால சதிராட்டம்தான் 20 ஆம் நூற்றாண்டில் திருத்தியமைக் கப்பட்டு பரதநாட்டியம் என அழைக்கப்பட்டது.
பரத நாட்டியத்தின் வரலாறு:
  • பரதநாட்டியத்தின் வளர்ச்சியில் முக்கிய கட்டங்கள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன.
  • நாட்டிய சாஸ்திரா தோன்றிய காலத்தில் கோவில்கள் இல்லை. குப்தர்கள் காலத்தில் (கிபி 320-620) கோவில் கட்டும் கலை தோன்றியது. எனவே கோவில்களில் நடத்தப்படும் நடன வகைகள் கிபி 620 வரை தோன்றவில்லை.
  • தென்னிந்தியாவில் கடைப்பிடிக்கப் பட்ட தேவதாசி முறை பரதநாட்டியக் கலையை வளர்க்கப் பெரிதும் உதவியது.
  • குப்தர்கள் காலத்தில் கோவில் களில் நடனமாடும் பெண்கள் இருந்த தாகக் காளிதாசனின் மேகதூதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கிபி 600 ல் தேவதாசி முறை தொடங்கியதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த முறையில் பெண்கள் கோவில் தெய் வத்திற்கு தேவன்-தேவிக்கு திருமண மாகவோ, அர்ப்பணிப்பாகவோ கொடுக்கப்படுவார்கள். சோழர்கள் காலத்தில் தஞ்சைப் பெரிய கோவிலில் 400 பேர் (ஆண்கள் உள்பட) இறை வனுக்கு அர்ப்பணிக்கப் பட்டார்கள். ஒரிஸ்ஸாவில் மஹரி தேவதாசி முறை, பூரி ஜகந்நாதர் கோவிலில் நடை முறைக்கு வந்தது. இந்த தேவதாசி முறை திருவாங்கூர் மன்னராட்சியில் இருந்தது.
  • 20_ஆம் நூற்றாண்டில் கோவில்கள் வட இந்தியாவில் உடைக்கப்பட்டன. இந்து அரசர்கள் ஆட்சியை இழந்தார்கள். இதனால் தேவதாசி முறை வீழ்ந்தது. தேவதாசி முறையை ஒழிக்க, பம்பாய் மாநிலத்தில் 1934 இல் சட்டம் இயற்றப்பட்டது. இறுதியில்தேவதாசி முறை 1988 இல் ஒழிக்கப்பட்டது.

    தேவதாசிகள், விபச்சாரம், வறுமை, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதுதான் காரணம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...