நடிகர் ரஜினிகாந்துக்கும், அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவுக்கும் மிகவும் அக்கறையான பிரச்சினை என்ன தெரியுமா?
ஜெயா தொலைக்காட்சியில் திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாள் நடத்தி வந்த எங்கே பிராமணன்? என்ற தொடர் இடையில் நின்று போய் விட்டதே என்ற மிகப் பெரிய கவலைதான்.
மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி ஆகியோருக்குப் பாராட்டு விழா மற்றும் ஜெயா தொலைக்காட்சி 14ஆம் ஆண்டு விழா கடந்த 29ஆம் தேதி சென்னையில் நடந்தது.
முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா, கமலகாசன், கே. பாலசந்தர், ஏ.வி.எம். சரவணன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
திருவாளர் சோ. ராமசாமி பார்வையாளர் பகுதியில் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் பேச ஆரம்பித்தார். ஜெயா டி.வி.யில், சோ எழுதிய எங்கே பிரா மணன்? நிகழ்ச்சியை ரொம்ப ரசித்துப் பார்த்தேன் திடீரென்று அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விட்டது. என்ன காரணம் என்று விசாரித்தபோது சோ அதனைத் தொடராமல் இருப்பது தெரிய வர... அவரிடமே கேட்டேன். முதல்வர் ஜெயலலிதாவும் இதையே என்னிடம் கேட்டார். தொடர முடியாத காரணத்தை அவரிடம் சொல்லி விட்டேன் என்றார்.
இதில் இருந்து தெரிவது என்னவென்றால் முதல்வர் சொல்லியும் கேட்காத ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் சோ மட்டும்தான் என்று ரஜினி சொன்னபோது எதிரே உட்கார்ந்திருந்தார் சோ. ரஜினியைப் பார்த்து கையை நீட்டிவிட்டு அப்படியே சீரியஸாக தலையில் கை வைத்துக் கொண்டார் சோ. இதை அங்கே இருந்த திரையில் காட்ட... கூட்டத்தினர் ரசித்துத் சிரித்தனர்.
- ஜூனியர் விகடன் 5.9.2012 பக்கம் 6,7
இதில் இரண்டு மூன்று விடயங்கள் உள்ளன. நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் இருக்க ரஜினிக்கும், முதல் அமைச்சருக்கும் கவலை எதைப் பற்றியது என்பது முதல் கேள்வி.
எங்கே பிராமணன்? இப்பொழுது எங்கே இருக்கிறான்? என்று சோ கேட்கிறாரா? அந்தக் கேள்வியில் பிரா மணன் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவது தொக்கி நிற்கவில்லையா?
இதில் சோவுக்கே குழப்பம் உண்டு பிராமணன் என்பவன் பிறப்பால் வருவதல்ல. அவனின் குணம் வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்கள் இப்படி வகைப்படுத்தப்பட் டனர் என்று சோ எழுதியதுண்டு.
பிறப்பின் அடிப்படையில் பிரா மணன் பிறந்தான் என்கிறபோது அதனை நோக்கி வீசப்படும் அம்பு களின் சுணையைத் தாங்க முடியாமல் இப்படி விளக்கம் சொல்ல வேண்டியா யிற்று என்பதுதான் உண்மை. சோ குறிப்பிடும் யஜூர் வேதமாக இருந்தாலும் சரி, மனுதர்மம் ஆனாலும் சரி அவர் கூறும் கூற்றுக்கு எதி ராகவே இருக்கின்றன.
யஜூர் அத்தியாயம் 31 சுலோகம் 11 என்ன கூறுகிறது? ஃப்ராஹ் மணோஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய க்ருத:1 ஊருததஸ்மா யத்வைஸ்ய பத்யாம் சூத்ரோ அஜாயத் - 11.
பிரம்மனின் முகத்திலிருந்து பிராம ணன் பிறந்தான்; தோள்களினின்றும் சத்திரியன் பிறந்தான்; துடைகளி னின்றும் வைசியன் பிறந்தான்; பாதங்களினின்று சூத்திரன் பிறந்தான் என்பது இதன் பொருள்.
மனுதர்மத்திற்கு வரிந்து வரிந்து வக்காலத்து வாங்கி எழுதிக் கொண்டி ருக்கிறாரே - சோ - அந்த மனுதர்மம் அத்தியாயம் ஒன்று சுலோகம் 87 என்ன கூறுகிறது?
அந்தப் பிர்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவை களினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத் தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித் தனியாகப் பகுத்தார் என்று தானே மனுதர்மமும் கூறுகிறது.
பிர்மாவின் முகத்திலிருந்து பிரா மணன் பிறந்தான் என்று சொல்லி விட்ட பிறகு குணத்தின் அடிப்படை யில் பிராமணன் என்பதெல்லாம் பித்தலாட்டப் பேச்சு தானே!
சோவின் நேர்மையற்ற முடக் குவாதத்தில் மயங்கி எங்கே பிரா மணன்? தொடரில் அப்பாவித்தன மாக ரஜினி மயங்கி இருக்கக் கூடும்.
செல்வி ஜெயலலிதாவை அப்படி எடுத்துக் கொள்ள முடியாது - காரணம் சோவும், ஜெயலலிதாவும் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள்.
கடைசியாக ரஜினிக்கு ஒன்று, பிறப்பின் அடிப்படையில் உருவாகின் றவன் பிராமணன் அல்ல என்று சொல்லும் திருவாளர் சோவும் சரி மற்றும் குருமூர்த்தி போன்ற பார்ப் பனர்களும் சரி மறக்காமல் ஆவணி அவிட்டத்தன்று முப்புரி நூலான பூணூலைத் தரிப்பது தாங்கள் இரு பிறவியாளரான பிராமணர்கள் என்பதை அறிவிக்கத்தான்; சோ வரிந்து எழுதும் பிராமணத் தன்மை அவரிடம் உள்ளதா என்பதை அவரே திறனாய்வு செய்து கொள்ளட்டும்!
சரி அவர்கள் பிராமணர் ஆகி விட்டனர்.
திருவாளர் ரஜினிகாந்த் அவர் களே, அவர்கள் கூறும் அந்த வருணா சிரம அடிப்படையில் நீங்கள் யார்? (உங்கள் குடும்பத்தை இதில் சேர்க்காதீர்கள்!)
நாம் யார்! சூத்திரர்கள் தானே!
சூத்திரர்கள் என்றால் யார்? அதே மனுதர்மம் இவ்வாறு கூறுகின்றது.
சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.
1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்
3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்
4) விபச்சாரி மகன்
5) விலைக்கு வாங்கப்பட்டவன்
6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415)
அவர்கள் பிராமணர்கள் என்றால், நாம் யார்? சூத்திரர்கள். சூத்திரர்கள் என்றால் இந்த ஏழு பொருளுக்குச் சொந்தக்காரர்கள்.
இவை எல்லாம் உள்ளபடியே ரஜினிக்குத் தெரிந்திருந்தால் எங்கே பிராமணன்? என்ற அந்தத் தொடரை ஏன் நிறுத்தினீர்கள் என்று சோவைக் கேட்டிருக்க மாட்டார்.
மாறாக - எங்களைச் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று கூறும் அந்தப் பிராமணன் எங்கே? என்று துப்பாக்கி யோடு புறப்பட்டு இருக்க மாட்டாரா?
ரஜினி ஒரு அப்பாவி - சோவின் சூது - வாது பேச்சில் மயங்கி இருப்பார்.
தந்தை பெரியாரைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாதபோது பெரியார் கொள்கை இந்தக் காலத் துக்கு ஒத்து வராது என்று சொன்ன ரஜினி, தந்தை பெரியாரைப் பற்றிப் புரிந்து கொண்ட பிறகு, அதுவும் பெரியார் திரைப்படத்தைப் பார்த்த பிறகு, தன் கருத்தை மாற்றிக் கொள்ள வில்லையா?
அதேபோல அந்தப் பிராமணா - சூத்திரா விடயத்தில் உண்மையைத் தெரிந்து கொண்டால் தோசையைப் புரட்டிப் போடக் கூடியவராகத்தான் ரஜினி இருப்பார் என்று நம்புவோம்! தொடர முடியாத காரணம், என்று சோ கூறினாராமே என்ன காரண மாம்? பார்ப்பனர்கள் எதிர்ப்பா? பார்ப்பனர் அல்லாதார் எதிர்ப்பா? அல்லது எடுத்துச் சொல்ல சரக்கு இல்லையா?
இதைத் தொடர முடியாத அள வுக்கு என்ன வெட்டி முறிக்கிறார்? இந்தத் தொடரின் மூலம் தேவை யில்லாமல் இந்தப் பிரச்சினையில் ஏன் சோ கை வைக்க வேண்டும் என்று அவாளின் அறிவு ஜீவிகள் சொல்லி விட்டாளா? முதல்வர் சொல்லியும் கேட்டகாத ஒருவர் சோ என்று ரஜினி சொன்னதும் சோ சீரியஸாக தலை யில் ஏன் கை வைத்துக் கொள்ள வேண்டும்! முதல் அமைச்சரின் அக்னிப் பார்வை சுட்டெரித்து விடுமே என்ற பயம்தான் காரணமாக இருக்க வேண்டும்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பெண்கள் அழகு பொருள்களா? வாய்க்கொழுப்பு மோடி மறுபடியும் சிக்கினார்!
- செய்திச் சிதறல்கள்!
- அரசுக்கு விரோதமாக அரசு விளம்பரமா?
- மெகந்தி, குங்குமம், திருநீறு மகாத்மியங்கள்!
- செய்திச் சிதறல்கள்!
அடுத்து >>
செப்டம்பர் 01-15-2012
அம்பேதகர் இந்துவா? பவுத்தரா?
அறிவியல் வளர்ச்சி :அயலார் - தமிழர் பங்களிப்பு - ஓர் ஒப்பிட்டு ஆய்வு
ஆசிரியர் பதில்கள்
இறைவனின் தலையெழுத்து மனிதனின் கையில்!
உங்களுக்குத் தெரியுமா?
ஊடக (மநு)தர்மம்
எரிமலை வெடிப்பா? எரிதழல் சிவனா?
கிரிக்கெட் சவக்குழி
சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்...
டெசோ : தாக்கமும் ஆக்கமும்
தமிழ் இலக்கியங்கள் : அறைகின்றார் அண்ணா
தளர்ந்துவரும் மத நம்பிக்கை
நம் கடவுள் மதம் எதற்கு? - தந்தை பெரியார்
நிலவு மனிதன் மறைந்தார்
நீலகேசி அம்மன்
பதவிப் பசியில் பா.ஜ.க அணுகுமுறையில் மாறவேண்டிய காங்கிரஸ்
புதுப்பாக்கள்
புரட்சி ஏட்டின் உலக சாதனை
பெரியாரை அறிவோமா?
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
புத்தக வடிவில் படிக்க
1 comment:
Post a Comment