Tuesday, September 4, 2012

அட, ரமணா!


வானிலை ஆராய்ச்சி மய்யம் ஒன்றை அறிவித் தால், அதற்கு நேர்மாறான பொருள் கொள்ள வேண் டும் என்ற உரையாடல் அனைத்து மய்யங்களிலும் நகைச்சுவை துக்கடா வாகச் சொல்லப்படுவ துண்டு. (சில நேரங்களில் அவர்கள் சொல்லுவது போல மழை பொழிவதும் உண்டு)
சென்னை வானிலை ஆராய்ச்சி மய்ய இயக்கு நராக இருக்கும் ரமணன் எல்லோருக்கும் அறிமுக மானவர் ஊடகங்களின் உதவியால்; அவருக்குப் பணிமாற்றம் என்பதெல் லாம் கிடையாது - சாசுவ தமான பதவி இடம்.
வானிலை மய்யம் ஓர் அறிவியல் கூடம் - அது ஒன்றும் பஜனை மடமில்லை. பஜகோவிந்தம் பாடுவதற்கு.
அவர் திருவாய் மலர்ந்த கதையைக் கேட் டால் ஒரு பக்கத்தில் சின மும், இன்னொரு பக்கத்தில் சிரிப்பும்தான் பொத்துக் கொண்டு கிளம்புகிறது.
அப்படி என்னதான் திருவாய் மலர்ந்தார் சொல்லிவிட்டார்?
மழை பொழிவதற்காக கடவுளையும், ரமண மகரிஷியையும் வேண்டிக் கொண்டுள்ளேன்! - என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைச் சொல்லுவ தற்கா ஆயிரக்கணக்கில் ரூபாய்  சம்பளம் கொடுத்து அந்த நாற்காலியில் அமர்த்தப்பட்டுள்ளார்?
மழை பொழிவது கடவுள் செயலா? அரு ளாலா? மழை பொழிய வில்லை என்றால் கடவு ளுக்குச் சக்தியில்லை. அருள் இல்லை என்று ஒப்புக் கொள்வார்களா?
கடவுள்தான், மக்களை யும், உலகத்தையும் படைத் தார் என்றால், அந்த அப் பனின் கடமை என்ன? மக்களுக்குத் தேவையான மழையைக் கொடுக்காவிட் டால் அவனைவிட பொறுப் பற்றவன் அயோக்கியன் வேறு யாராக இருக்க முடியும்?
மழை பொழிந்து வெள்ளக் காடாகி மக்களை, ஆடு, மாடுகளைப் பிண மாக மிதக்கச் செய்வது ஒருபுறம். மழை பொழி யாமல் வறட்சி நெருப்பில் வறுத்து எடுத்து மக்கள் பஞ்சம் பட்டினியில் சாவது இன்னொரு புறம்.
இவை எல்லாம் கடவுள் செயல் என்றால் பரந்து கெடுக உலகியற்றியான்! என்ற வள்ளுவரைத்தான் துணைக்கழைக்க வேண் டும்.
மக்கள் மத்தியில் விஞ் ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ் வொரு குடிமகனின் அடிப் படைக் கடமை என்று இந் திய அரசமைப்புச் சாசனம் (51A(h) கூறுகிறது.
இங்கு என்னடா என்றால், வானிலை மய்ய மான விஞ்ஞான கூடத்தில் உட்கார்ந்துகொண்டு அஞ்ஞான குப்பைகளைக் கொட்டிக் கொண்டு இருக் கிறார்கள். அதுவும்  ரமண ரிஷியைப் பிரார்த்திக்கிறா ராம். அந்த ரமண ரிஷியே புற்று நோய் வந்து செத்த ஆசாமி - அவருக்குச் சக்தி யிருந்தால் ஏன் அந்த நோய் அவருக்கு வர வேண்டும்?
படிப்பு வேறு - பகுத்தறிவு வேறு என்ற தந்தை பெரியார் அவர்களை இந்த இடத்தில் நினை யுங்கள்!.
- மயிலாடன்


.
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...