விசாரிக்கிறது மகாராட்டிரா அரசு
புனே, ஜூலை 3- புனேயில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணி யில் இந்துத்துவா பயங்கர வாத அமைப்புகளுக்குத் தொடர் பிருக்கிறதா என்பது குறித் தும் மகாராட்டிரா அரசு விசாரணை நடத்தும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.
புனேயில் அடுத்தடுத்து 4 இடங்களில் நேற்றுமுன் தினம் இரவு குண்டு வெடித் தது. இவை சக்திவாய்ந்தவை இல்லை என்பதால் உயிரி ழப்பு ஏதும் ஏற்படவில்லை. இக்குண்டு வெடிப்பு சம்ப வத்தில் இருவர் படுகாயம டைந்திருந்தனர்.
புனே குண்டு வெடிப்பு பற்றி கருத்து தெரிவித்த மத்திய அரசு, தீவிரவாத செயல் இல்லை என்று கூறியிருந்தது.
இந்நிலையில் நேற்று குண்டுவெடித்த இடங் களை நேரில் பார்வையிட்ட ஆர்.ஆர்.பாட்டில், பயங்கர வாதிகளின் சதியா என்பது குறித்து பயங்கர வாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர் இந் துத்துவா பயங்கரவாதிக ளின் சதியாக இருக்குமா? என்று கேட்டதற்கு எல்லா வகையான கோணங்களி லும் இருந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.
தயானந்த பாட்டீல் யார்?
இதனிடையே குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது காயமடைந்தவர் களில் ஒருவ ரான தயானந்த பாட்டீல் என்பவர் புனே அருகில் உள்ள உருளி கஞ்சன் கிரா மத்தைச் சேர்ந்தவர். குண்டு வெடிப்பு சம்பவம் நடை பெற்ற இடங்களில் ஒன்றான பல்கான்தார்வா திரை யரங்கு முன்பாக அன்னா ஹசாரே குழுவினர் அண்மையில் போராட்டம் நடத்திய போது அப்பகுதியில் அவர் நடமாடியதாக கூறப்படு கிறது. நேற்று முன்தினம் அப்பகுதிக்கு சென்ற தயானந்த பாட்டீல் அங்கு தமது கைப்பையை இறக்கி வைத்து விட்டு சென்ற பிறகே குண்டு வெடித்தது என்று கூறப் படுகிறது. இந்த தயானந்த பாட்டீலின் பின்புலம் பற்றி இப்போது மகாராஷ்டிரா அரசு குடைந்தெடுத்து வருகிறது.
மலேகான் குண்டுவெடிப்பு
ஏற்கெனவே இதே மகா ராட்டிரா மாநிலம் மலே கானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இந் துத்துவ அமைப்பைச் சேர்ந்த சாத்வி பிரக்யா உள் ளிட்டோர் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
திட்டமிடப்பட்ட சதி
இந்நிலையில் டில்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை செய லாளர் ஆர்.கே.சிங் கூறுகை யில், 500 மீட்டர் தொலை வுக்குள் 45 நிமிட நேரத்தில் நன்கு ஒருங்கிணைக்கப் பட்டு இத்தாக்குதல் நடத்தப்பட் டது.
இத்தாக்குதல் திட்ட மிட்டு நிறைவேற்றப்பட்டுள் ளது என்றார்.
மேலும் வெடிக்காத இரண்டு குண்டுகள் கைப் பற்றப்பட்டு ஆய்வு செய் யப்பட்டு வருவதாகவும் தேசிய பாதுகாப்பு படை யினர் மற்றும் மத்திய தடயவியல் துறை யினர் புனே சென்று அது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் சிங் கூறினார்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நடத்திய முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை
- நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த 6 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம்
- நிவாரண முகாம்களில் இருந்து மக்கள் வீடு திரும்ப தொடங்கினர்
- உ.பி. அரசு சரியாக செயல்படவில்லை அகிலேஷ்க்கு முலாயம் கண்டிப்பு
- புனே நகரில் 5 இடங்களில் குண்டுவெடிப்பு
அடுத்து >>
ஆகஸ்ட் 01-15
"விடுதலை" நமக்கு ஓர் போர்வாள்
அந்நாளில்...
அய்யா - ஆசிரியர் உறவு
இணையத்தில் முதல் தமிழ் நாளிதழ்
இணையத்தில் விடுதலையின் போராட்டம்
கடவுள் கடத்தல் கலை
கருத்தாளர் பெரியாரின் கண்ணின்மணி வாழ்க!
கருத்தாளர்-எழுத்தாளர்-தொகுப்பாளர்
கவிதை - ஆசிரியரின் முகம் "விடுதலை"
சமூக நீதிப் பொரில் ஆசிரியரின் 'விடுதலை"
சிறைக் கைதிக்கு இருக்கும் விடுதலை படிக்கும் ஆர்வம்!
தன்னிகரற்ற பன்முக ஆற்றல்
திரிபுவாதிகளுக்கு பதிலடி
தோழர் வீரமணியின் சேவை!
நாளேட்டின் நாயகர்
நிகழ்ந்தவை
நினைவில் நிற்பவை
பெரியார் ஒப்படைத்த பெரும்பணி
முகநூல் பேசுகிறது
வரலாறு தவிர்க்க இயலாத நாளிதழ்
வரவேற்கிறேன் - தந்தை பெரியார்
விடுதலை "லை"
விடுதலை வளர்ச்சியில் ஆசிரியர்!
விடுதலை வாசித்தால் திருப்தி
No comments:
Post a Comment