டில்லி, ஆக.3-ஊழ லுக்கு எதிராகவும், வலு வான லோக்பால் மசோதா வேண்டியும் நேற்றோடு 9 நாட்களாக தொடர் பட்டினி போராட்டம் இருந்து வரும் அன்னா குழுவினர் இன்று மாலை 5 மணி யுடன் தங்களது பட் டினிப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
ஊழலுக்கு எதிராக வும், வலுவான லோக் பால் மசோதா வேண்டும் என்று கூறி அன்னா அசாரே, குழுவினர் கடந்த 25ஆம் தேதி முதல் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கால வரையற்ற பட்டினிப் போராட்டம் இருந்து வருகின்றனர். அன்னா ஹசாரேவும் கடந்த 29ஆம் தேதி முதல் கால வரையற்ற பட்டினிப் போராட்டம் இருந்து வருகிறார். 9 நாட்களாக தொடர்ந்து பட்டினிப் போராட்டம் இருந்து வரும் அன்னா குழு உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
அவர்களை பட்டி னிப் போராட்டத்தை கைவிட்டுவிட்டு மருத் துவமனையில் சேரு மாறு டில்லி காவல் துறை வலியுறுத்தியும் அவர்கள் அதை கேட்க வில்லை. லோக்பால் மசோதா நிறைவேறும் வரை பட்டினிப் போராட்டத்தை கை விடும் பேச்சுக்கே இட மில்லை என்று அடம் பிடித்தனர். அவர்கள் என்ன தான் அடம் பிடித்தாலும் மத்திய அரசு அவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை.
இதையடுத்து மத்திய அரசுடன் போராடு வதை விட தாங்களே கட்சி துவங்கலாம் என்று அன்னா குழு வினர் திட்டமிட்டுள்ள னர். அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ள அவர் கள் தங்களின் கால வரையற்ற பட்டினிப் போராட்டத்தை இன்று மாலை 5 மணியுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
பட்டினி போராட் டம் இருந்து நம் முடைய மூச்சும், ஆவி யும்தான் போகின்றதே தவிர கோரிக்கையை மத்திய அரசு கேட்கக் கூடத் தயாராக இல்லை என்பதை உணர்ந்த அன்னா குழு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலுக்கு வரலாமா? மக்களிடம் கருத்து கேட்கிறது அன்னா குழு
இந் நிலையில் அன்னா அசாரே குழு வினர் சமூக வலைத்தளமான டிவிட் டரில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றி மக்களிடம் பொது கருத்து கேட்டு வருகின் றனர்.
"நாட்டின் மாற்று அரசியல் சக்தியாக அசாரே களம் இறங்க வேண்டிய தருணம் இது தானா? என்று அன்னா குழு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல் மற்றொரு இணையதளப் பக்கத் தில்,
- தற்போதைய அரசி யல் கட்சிகள் மீது உங் களுக்கு நம்பிக்கை இருக் கிறதா?
- நாட்டின் மாற்று அரசியல் சக்தியை அன்னா அசாரே முன்னெடுக்க வேண்டுமா?
என்று இரு கேள்வி கள் கேட்கப்பட்டிருக் கின்றன.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
- கப்பல் பணியின்போது உயிரிழந்தவரின் பெற்றோருக்கு ரூ.48லட்சம் நஷ்டஈடு
- தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்ட மோட்டர் சைக்கிள் அறிமுகம்
- கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நடத்திய முழு அடைப்பு, போராட்டத்தில் வன்முறை
- செய்தியும் சிந்தனையும்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- இந்நாள்... இந்நாள்....
- மன் மோகன்சிங்குக்கு உடல்நலக்குறைவு மத்திய அமைச்சரவை கூட்டம் ரத்து
- மின் தொகுப்பு முடக்கம் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்
- `இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பானியர்கள் ஆர்வம்': மத்திய அமைச்சர் மு.க.அழகிரி
- இதோ இன்னொரு தேவநாதன் கோயிலுக்கு வந்த இளம்பெண்ணை ஏமாற்றிக் கெடுத்த குருக்கள் பார்ப்பான் சிறையில் அடைப்பு
<< முன்புஅடுத்து >>
ஆகஸ்ட் 01-15
"விடுதலை" நமக்கு ஓர் போர்வாள்
அந்நாளில்...
அய்யா - ஆசிரியர் உறவு
இணையத்தில் முதல் தமிழ் நாளிதழ்
இணையத்தில் விடுதலையின் போராட்டம்
கடவுள் கடத்தல் கலை
கருத்தாளர் பெரியாரின் கண்ணின்மணி வாழ்க!
கருத்தாளர்-எழுத்தாளர்-தொகுப்பாளர்
கவிதை - ஆசிரியரின் முகம் "விடுதலை"
சமூக நீதிப் பொரில் ஆசிரியரின் 'விடுதலை"
சிறைக் கைதிக்கு இருக்கும் விடுதலை படிக்கும் ஆர்வம்!
தன்னிகரற்ற பன்முக ஆற்றல்
திரிபுவாதிகளுக்கு பதிலடி
தோழர் வீரமணியின் சேவை!
நாளேட்டின் நாயகர்
நிகழ்ந்தவை
நினைவில் நிற்பவை
பெரியார் ஒப்படைத்த பெரும்பணி
முகநூல் பேசுகிறது
வரலாறு தவிர்க்க இயலாத நாளிதழ்
வரவேற்கிறேன் - தந்தை பெரியார்
விடுதலை "லை"
விடுதலை வளர்ச்சியில் ஆசிரியர்!
விடுதலை வாசித்தால் திருப்தி
No comments:
Post a Comment