Wednesday, August 8, 2012

ஆசிரியர்களா இவர்கள்?


ஆசிரியர்கள் இனத்துக்கே தலைகுனியும் ஒரு வேலையில் நாமக்கல் மாவட்டத்தில் 77 தலைமை ஆசிரியர்கள் ஆதித் திராவிடர் நலத்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியில் பெரும் ஊழல் செய்துள் ளனர். முறைப்படி அவர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மிக உயர்ந்த கல்வித் தொண்டு செய்யக் கடமைப்பட்டுள்ள ஆசிரியர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த மாணவர்களுக்கு அரசு அளிக்கும் உதவித் தொகையில் கை  வைக்க எப்படித்தான் மனம் வந்ததோ! அதுவும் சாதாரண ஆசிரியர்கள் அல்லர்; தலைமை ஆசிரியர்கள்.

நேர்மையும், கடமை உணர்வும் இல்லாத வர்கள் ஆசிரியர் பணியில் ஈடுபட்டால் அவர்களால் உருவாக்கப்படும் மாணவர்கள் எந்தத் தகுதியில் இருப்பார்கள் என்பதற்கு ஆராய்ச்சிகள் தேவைப்படாது. மாணவர்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் சீரழிவுக் கலாச்சாரம் வகுப்பறையிலிருந்தே தொடங்கி விடுகிறதோ என்று கவலைப்பட வேண்டி யுள்ளது.

ஒரு வகையில் பக்குவப்படாத பகுத்தறிவுக் குச் சம்பந்தமே இல்லாத பாடத் திட்டங்கள்; சொல்லிக் கொடுப்பதற்கு நேர்மையும், ஒழுக்கமும் அற்ற ஆசிரியர்கள் என்று அமைந்து விட்டால் அந்தச் சமூகமே ஒரு சிறைக் கூடம் என்ற நிலைக்கு அல்லவா தள்ளப்படும்?

ஒடுக்கப்பட்ட, ஏழை - எளிய மாணவர் களின் தலைகளில் கை வைத்த ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்தக் கையாடல் வெறும் ஆசிரியர்கள் மட்டத்தில் மட்டும்தான் நடத்துள்ளதா? தலைமை ஆசிரியர்களுக்கு மேற்பட்ட அதி காரிகள், அலுவலக அலுவலர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதை உரிய முறையில் விசாரிக்க வேண்டும். அப்படி அவர்களும் சம்பந்தப்பட்டு இருந்தால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆதி திராவிடர் வளர்ச்சிக்கு என்று ஒதுக்கப்படும் நிதி அத்துறைக்கு முழுமை யாகச் செலவு செய்யப்படுவதில்லை; வேறு துறைகளுக்கு அது திருப்பி விடப்படுகிறது என்கிற ஆழமான குற்றச்சாற்று ஒரு புறத்தில் இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் அவர் களுக்காகச் செலவு செய்யப்படும் நிதியிலும் கையாடல் என்றால் - இது என்ன கொடுமை!

ஒடுக்கப்பட்ட மக்கள் என்று வருகிறபோது என்னென்ன வகைகளில் எல்லாம் சுரண்டப் படுகின்றனர்! பாரபட்சமாக நடத்தப்படுகின் றனர் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

இது ஏதோ நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் தான் நடந்துள்ளதா? வேறு மாவட்டங்களிலும் இதன் நிலை என்ன என்பது துருவி ஆராயப்பட வேண்டும்.

பொதுவாக இது போன்ற நிதி உதவி ஆதி திராவிடர் மாணவர்களுக்கு சட்டப்படியாக அளிக்கப்படுவதை அரசு நல்ல வகையில் விளம்பரப்படுத்தவும் வேண்டும்.

எது எதற்கோ விளம்பரங்களைத் தந்து அரசு பணத்தை வீணடிக்கும் அரசாங்கம், இது போன்ற பொது மக்களுக்குத் தெரிய வேண்டிய தகவல்களையும் விளம்பரமாக வெளியிட வேண்டும். பொது மக்களும், பெற்றோர்களும், மாணவர்களும் இவற்றைப் பற்றி தெரிந் திருக்கும்பட்சத்தில், இதுபோன்ற தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கும்.

கல்வி வளர வேண்டும்; அதே நேரத்தில் ஒழக்கழும், பகுத்தறிவும் வளர வேண்டும்.

குறிப்பாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் இவை இரண்டும் பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். மாணவர்களைப் பயிற்று விக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கம் - நேர்மை உள்ளவர்களாக இருக்க வேண்டாமா?


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>



ஆகஸ்ட் 01-15

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...