புதுடில்லி, ஆக.1- 16 வயதிற்கு மேற்பட்ட பெண்ணை அவளது விருப்பத்தின்பேரில் திரு மணம் செய்து கொள்வது சட்டப்பூர்வமானது. அத்தகைய திருமணம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டிருந்தால் நீதிமன்றங்கள் ரத்து செய்யலாம். அதே சமயம், 15 வயதிற்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்து அவளது விருப் பத்தின்பேரில் தாம்பத்திய உறவு கொள்வது பாலியல் வன்முறையே என்று டில்லி உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம், இந்து திருமண சட்டம் ஆகிய பல்வேறு சட்டங்களில் பெண்ணின் திரு மண வயது குறித்து மாறுபட்ட விதிகள் இருப்ப தாகவும், அந்த சட்டங்களின் அடிப்படையில், பெண்ணின் விருப்ப உறவு குறித்தும் மாறுபட்ட கருத்துகள் இருப்பது குறித்து டில்லி உயர்நீதி மன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டன. அந்த மனுக்களின் மீது டில்லி உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஏ.கே.சிக்ரி மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் பி.கே.ஷாலி ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணையை நடத்தியது.
வாதங்கள் முடிந்த பிறகு இந்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனது தீர்ப்பை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- 15 வயதிற்குட்பட்ட பெண்ணுடன் அவளது சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதும், அவளது விருப்பத்தோடு உடலுறவு வைத்துக் கொள்வதும் பாலியல் வன்முறைக்குச் சம மானதே. அந்தப் பெண்ணின் கணவனை அவனது மதத்தின் பாதுகாப்புச் சட்டம் பாதுகாப்பு அளிக்க முடியாது.
15 வயதிற்குட்பட்ட மனைவியுடன் உடல் உறவு வைத்துக் கொள்வது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த பிரிவுக்கு எந்த விதி விலக் கும் கிடையாது. அந்த சட்டப்பிரிவை கடுமையாகவும், பாகுபாடின்றியும் நிறைவேற்ற வேண்டும். அந்த மாதிரி தாம்பத்திய நிலவரத்தில் பெண்ணின் விருப்பம் ஏற்றுக் கொள்ளத்தக்க தல்ல.
ஏனென்றால், 15 வயதுக்குட் பட்ட இளம் பெண் உடலுறவை ஏற்றுக் கொள்வதிலும், கர்ப்பம் தரிப்பதிலும் இடர்ப்பாடுகள் உள்ளன. 15 வயதிற்குட்பட்ட பெண் திருமணம் ஆனவளா- ஆகாதவளா என்ற வேறுபாடு பார்க்க முடியாது. அப்படிப்பட்ட பெண்ணோடு உடலுறவு கொள்ளும் ஆணுக்கு அவனுடைய மத தனியார் சட்டம் பொருந்தாது. மேலும், 15 வயதுக்கு குறைந்த பெண்ணுடன் நடந்த திருமணம் மற்றும் உடலுறவு ஆகியவை அவளுடைய விருப்பத்தோடு நடந் தாலும், காவல்துறையினர் இந்தியத் தண்டனைச் சட்ட பிரிவு 363 மற்றும் 376 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது.
ஆனால், 16 வயதிற்கு மேற்பட்ட பெண்ணுடன் நடந்த திருமணத்திற்கும், அவர்களுடன் கொண்ட உடலுற வுக்கும் எதிராக அவளது கணவன் மீது பதிவு செய் யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சட்டத்துக்குட்பட்டு ரத்து செய்யலாம்.
16 வயதிற்கு மேற்பட்ட ஒரு பெண் தனது சுதந்திரமான விருப்பத்துடனும், எந்தவித வற்புறுத்தல் இல்லாமலும் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தால் அவளது அறிவிப்பு சட்டபூர்வமானது என்று ஏற்றுக் கொண்டு அவரது கணவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 363 (கடத்தல்) அல்லது 376 (பாலியல் வன்முறை) ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றங்கள் ரத்து செய்யலாம். மேற் கண்டவாறு டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- தீயணைப்பு துறைக்கு...
- மனிதனைவிட மும்மடங்கு வேகமாக நீந்தும் ரோபோ
- கவுதமலாவில் எரிமலை வெடித்தது:
- அமைதி பேச்சுவார்த்தைக் குழுவில் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க உத்தரவு
- திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment