கார் போன்ற வாகனங்களின் கதவுகளில் கறுப்பு ஃபிலிமை ஒட்டுவதை தடை செய்து நீதிமன்றம் ஆணையிட்டது. ராம்லீலா மைதானத்திலிருந்து பாபா ராம்தேவை டில்லி நிருவாகம் கட்டாயப் படுத்தி வெளியேற்றியது பற்றி நீதிமன்றம் தானாகவே கவனத்தில் எடுத்துக் கொண்டு அதனைக் கண்டித்தது. புலி சரணாலயங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்வதைத் தடைசெய்து நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அரசமைப்பு சட்டத் தின் 32 ஆவது பிரிவில் நீதிமன்றங் களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவது அல்லது இத்தகைய வழக்குகளில் தொடர்புடைய சட்டப் பிரச்சினைகள் பற்றி விளக்கம் அளிப்பது என்ற அளவு கொண்டதுதான். நிருவாகம் பற்றி நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ள மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆணைகள் எல்லாமே இந்த அதிகாரத்துடன் தொடர்பு உடையவை அல்ல.
என்றாலும், இந்த அரசமைப்பு சட்டப் பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற ஆணைகள் அவற்றின் அதிகார வரம்பு எல்லைக்கு உட்பட்டவை என்று தவறாகக் கருதிக் கொண்டு பிறப்பிக்கப் பட்டவையேயாகும். மேலும் சிறப்பான ஆட்சி, நிருவாகம் அமைய வேண்டும் என்ற நோக்கத் திலேயே நீதிமன்றம் இவ்வாறு செயல் பட்டுள்ளது; ஆனால் இவ்வாறு செய்வது எந்த ஒரு முறையான நீதித்துறையின் செயல்பாட்டையும் செய்ததாக ஆகாது.
நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை நீதிபதிகள் தாங்களே எடுத்துக் கொண்டது
இவ்வாறுதான் அரசமைப்புச் சட்டத் தில் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப் பட்டுள்ள உயர்நீதித்துறை நீதிபதிகளை நியமனம் செய்யும் அதிகாரத்தை உச்ச நீதி மன்றமே எடுத்துக் கொள்ளும் வகை யில் முரண்பாடான ஒரு விளக்கத்தை அளித்து, குடியரசுத் தலைவரின் அதிகாரத்தைப் பறித்து, அதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நான்கு நீதிபதிகள் கொண்ட நியமனக் குழுவிற்கு (Collegium) அளித்துள்ளது;
அதாவது தங்களுக்குத் தாங்களே இந்த அதிகாரத்தை அவர்கள் அளித்துக் கொண்டனர். (அரசமைப்பு சட்டப்படியான ஒரு நடைமுறையை மாற்றுவதற்கு நாடாளுமன்றம் அரசமைப்புச் சட்டத் திற்குத் திருத்தம் அளிக்காமலேயே, நீதித்துறையே இந்த நடைமுறையை மாற்றியுள்ளது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதை எவருமே உணர வில்லை.) உலகின் வேறு எந்த ஒரு நாட்டின் அரசமைப்புச் சட்டத்திலும், நீதிபதிகளைத் தேர்வு செய்து நியமிக்கும் அதிகாரம் நீதிபதிகளிடமே அளிக்கப் பட்டிருக்கவில்லை.
புலனாய்வுத் துறை அமைப்புகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பையும் நீதிமன்றம் ஏற்றது
அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மீது கூறப்படும் குற்றச்சாற்றுகளை விசாரணை செய்து வழக்கு தொடர தவறிவிட்ட அல்லது அலட்சியமாக இருந்த இந்த மத்தியப் புலனாய்வுத் துறை போன்ற விசாரணை அமைப்புகளின் நடத்தை பற்றி கண்காணிக்கும் பொறுப்பையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அமைச்சர்களும், அதிகாரிகளும் சம்பந்தப் பட்டிருப்பதாக நம்பப்படும் ஜெயின் ஹவாலா வழக்கு, பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான மாட்டுத் தீவன ஊழல் வழக்கு, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி மீதான தாஜ்மகால் வணிக வளாக ஊழல் வழக்கு, அண்மையில் தொலைபேசி 2ஜி ஒலிக்கற்றை வழக்கில் குற்றம் சாற்றப் பட்டுள்ள அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீதான உச்சநீதிமன்ற வழக்கு ஆகி யவை இத்தகைய வழக்குகளில் அடங்கும்.
ராணுவ நடவடிக்கையிலும் தலையிட்ட உச்சநீதிமன்றம்
ராணுவ நடவடிக்கையிலும் கூட உச்ச நீதிமன்றம் ஓர் ஆணை பிறப்பித்துள்ளது. 1993 இல் காஷ்மீர் மாநிலம் ஹசார்த் பாலில் இருந்த பிணைக் கைதிகளுக்கு அனுப்பப் படும் உணவுப் பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்திய ராணு வத்தின் கொள்கை நிலைப்பாட்டையும் கண்டனம் செய்து நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 1,200 கலோரி மதிப்புடைய உணவு பிணைக் கைதி களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. இந்த ஆணையை விமர்சித்து, நடந்து கொண் டிருக்கும் ஒரு ராணுவ நடவடிக்கையின் நடத்தை பற்றி ஒரு நீதிமன்றம் வரலாற் றிலேயே முதன்முறையாக தீர்ப்பு வழங்கி யுள்ளது என்று ராணுவத் தலைவர் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment