Friday, July 20, 2012

அய்ஏஎஸ், வங்கி, அரசு பணிகளுக்கான தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன


நெல்லை, ஜூலை 19-அய்ஏஎஸ், அய்பிஎஸ், வங்கி, அரசுப் பணிகளில் சேருவதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்காக 6 லட்சம் வினாக்களை தயாரிக்கும் பணியில் பேராசிரியர்கள் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர்.
அய்ஏஎஸ், அய்பிஎஸ், அய்எஃப்எஸ், வங்கிப் பணிகள், மாநில அரசு பணிகளில் திறமை யானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக நடத்தப்படும் தேர்வுகளின் தரம் உயர்த்தப் படுகின்றது. இதற்காக மத்திய அரசின் மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் கண்காணிப்பில் மைசூரை தலைமையிடமாகக் கொண்டு இந்திய தேசிய தேர்வுப்பணி மற்றும் மதிப்பீட்டு மய்யம் செயல் படுகிறது. இந்த மய்யத்தின்கீழ் நாடு முழுவதும் 250 மண்டல களப்பணி மய்யங்கள் உள்ளன. தமிழகத்தில் 8 களப்பணி மய்யங்கள் உள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள 300 பல்கலைக் கழகங்கள், 17 ஆயிரம் கல்லூரிகள், 20 லட்சம் பள்ளி களில் ஒரு மொழிக்குள்ளேயும் பல மொழிகளுக்கு இடையேயான மொழி பாடத்திட்டத்தை உரு வாக்குவது, வினாக் களை உருவாக்குவது போன் றவை இதன் முக்கிய பணிகளாகும்.
இந்த மய்யங்கள் மூலம் கல்லூரி பேரா சிரியர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலமாக மிகத்தரமான போட்டி தேர்வு வினாக்களை தயாரிக்கும் பணி நடக்கிறது. பாட வாரியாக சுமார் 6 லட்சம் வினாக்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த வினாக்கள் மைசூரில் மதிப்பீட்டு மய்ய வினா வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேர்வு நடத்தும் துறைகளுக்கு அல்லது மாநிலங்களுக்கு தேவைப்படும் போது தேவைப்படும் வினாக்களை வழங்கும்.
தனித் திறமைசாலிகளை உருவாக்குவது எப்படி என அய்க்கிய நாடுகளுடன் இணைந்து இந்த மய்யத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
தரமான கடினமான வினாக்களை தயாரித்து வழங்குவதால் வரும் காலங்களில் அரசுப் பணிகளில் மிகவும் திறமையானவர்கள் பணியாற்றும் வாய்ப்பு உருவாகும் என்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும். இதன் பலன் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக கிடைக்கும் என அதன் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் சேவியர் தெரிவித்தார்.
நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய மய்யம் நெல்லை சேவியர்ஸ் கல்லூரியில் செயல்படுகிறது. இங்கு தமிழ், ஆங்கில வினாக்கள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்த 20 கல்லூரிகளின் தமிழ், ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் பங்கேற்ற பயிற்சி முகாம் மற்றும் வினாக்கள் தயாரிப்பு பணி நடந்தது.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...