இதற்கெல்லாம் விடிவு காணவே டெசோ மாநாடு கலைஞர் விளக்கம்
சென்னை, ஜூலை 12- இலங்கைச் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் இறந்த தமிழ் கைதி கணேசன் நிமலரூபனை வவுனியாவில் தீ மூட்ட இலங்கை பாது காப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர். மண்ணின் மைத்தனுக்கு மரணத்தில்கூட மண் உரிமை மறுக்கப் பட்டதற்கு ஒரு விடிவு காணவே டெசோ மாநாடு நடைபெறுகிறது என கலைஞர் தெரிவித்துள்ளார்.
கலைஞர் பதில்கள் (11.7.2012) வருமாறு:
கேள்வி:- 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் இலங்கை வடக்குப் பகுதியில் தேர்தல் நடத்தப் போவதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே சொல்லியிருக்கிறாரே?
கலைஞர் :- ஆனால் தேர்தல் நடை முறைகள் என்று வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டுமென்றெல்லாம் சொல்லியிருப்பதில் ஏதோ உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதாகத் தெரிகிறது. தேர்தல் நடத்துவதுகூட பிறகு இருக்கட்டும். இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப் பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் சிலர், கடந்த மாதம் பூசா முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதை எதிர்த்த மற்ற விடுதலைப்புலிகள்; பூசாமுகாமுக்கு மாற்றப்பட்டவர்களை மீண்டும் வவுனியா சிறைக்கே மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். இதை மறுத்த சிறை அதிகாரிகள், மூன்று விடுதலைப் புலிகளை ஒரே அறையில் தள்ளி பூட்டி விட்டனர். இதனால் வவுனியா சிறையில் கடந்த மாதம் 30ஆம் தேதி கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து வவுனியா சிறையில் இருந்த 201 கைதிகளும், அனுராதபுரத்தில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள் ளார்கள்.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில் தமிழ்க் கைதிகள் பலர் காயமடைந் துள்ளதோடு, கணேசன் நிமலரூபன் என்பவர் இறந்து விட்டார். ஆனால் அவர் மார டைப்பால் இறந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிமலரூபன் உடலைப் பெற்றுக் கொண்ட அவரது பெற்றோர், தங்கள் மகன் உடலை வவுனியாவில் தகனம் செய்யப் போவதாகக் கூறினர். ஆனால் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் அதற்குக் கூட அனுமதி மறுத்து கொழும்புக்கு அருகே உள்ள சுடுகாட்டில் நிமலரூபனின் உடலை தகனம் செய்துவிட்டார்களாம்.
நிமலரூபனின் உடல் முழுக்க ரத்தம் படிந் திருந்ததாகவும், அவருடன் காயம் அடைந்த மற்றொரு கைதி கோமா நிலையில் மருத் துவமனையிலே இருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில்கூட மண்ணுரிமை மறுக்கப்பட் டது, மாபாதகம் அல்லவா? இதற் கெல்லாம் ஓர் விடிவு காண வேண்டும் என்பதற் காகத்தான் டெசோ மாநாடு நடைபெறு கிறது.
கேள்வி:- தீண்டாமை அறவே ஒழிக் கப்பட்டு விட்டது என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் சத் துணவு அமைப்பாளர் பணியிலே தலித் களையே அனுமதிக்காத போக்கு இன்னமும் உள்ளதாகச் சொல்லப்படுகிறதே?
கலைஞர்:- அண்மையில் ஒரு செய்தி படித்தேன். திருவில்லிப்புத்தூர், கம்மா பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஒன்றில் தலித் பெண்கள் சத்துணவு சமைத்த காரணத் தால், வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு மாணவர்களை பள்ளிக்கே அனுப்ப மாட்டோம் என்று தடுத்து விட்டார்களாம்.
அதைவிடக் கொடுமை, வேற்றுச் சாதியினரின் எதிர்ப் புக்கு அரசு பணிந்து, சத்துணவுக் கூடத்தில் பணிபுரிந்து வந்த தலித் ஊழியர் களான மரகதவல்லி, வீரலட்சுமி ஆகியோரை அங்கிருந்து பணி மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டிருக் கிறார்களாம். தீண்டாமைக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை கடும் கண்டனத் திற்குரியது.இந்த அலுவலர்களை மாற்றம் செய்திருக்கின்ற இடத்திலும் இது போலவே வேறு சாதியினர் தங்கள் பிள்ளைகளை சாப்பிட விட மறுத்தால் அப்போது அரசு என்ன செய்யும்?
கேள்வி :- அ.தி.மு.க. அரசின் விலை இல்லா ஆடுகள் திட்டப்படி வழங்கப்படும் ஆடுகள் எல்லாம் கசாப்புக் கடைகளிலே விற்கப்படுகின்ற செய்தியைத் தொடர்ந்து இன்று டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில இதழில் விலை இல்லா மாடுகள் திட்டத் தைப் பற்றியும் செய்தி வந்திருக்கிறதே?
கலைஞர் :- Blow to Scheme as More Cows Die - 16 Deaths Reported Trichy; Beneficaries Say, They Got Poor Quality Animals என்ற தலைப்பில் பெரிய செய்தியாக வெளியிடப்பட்டி ருப்பதை நானும் படித்தேன். கால்நடைத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரியே டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில இதழ் செய்தி யாளரிடம் கூறும்போது, விலை இல்லா மாடுகள் வழங்கும் திட்டப்படி வாங்கப் பட்ட மாடுகளில் திருச்சியில் 14 மாடுகள் இறந்து விட்ட தாகவும், லால்குடியிலும், முசிறியிலும் ஒவ்வொரு மாடு இறந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 18 கன்றுக்குட்டிகள் இதுவரை இறந்து விட்டதாகவும் சொல்லி யிருக்கிறார்கள். அதுமாத்திரமல்ல, நேற்று முன்தினம் வேளச்சேரியில் கசாப்புக் கடைக்கு ஏழைகளுக்கு இலவசமாக வழங் கிய பசுமாடு விற்பனைக்காக வந்தபோது, பிடிபட்டுள்ளது.
அந்த மாட்டின் காதில் இலவசமாக வழங்கிய மாடு என்பதற்கான தகடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விலை இல்லா மாடுகள் வழங்கும் திட்டம் என்பதற்குப் பதிலாக நிலை இல்லா மாடுகள் வழங்கும் திட்டம் என்று பெயரை மாற்றிக் கொள்ளலாம்.
கேள்வி:- ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வைச் சேர்ந்த மகளிர் அணி செயலாளர் ஒருவரையே கொலை செய்திருக்கிறார் களே?
கலைஞர்:- அ.தி.மு.க. ஆட்சியில் சமத் துவம் கொடி கட்டிப் பறக்கிறது! ஆளுங் கட்சி, எதிர்க் கட்சி, தோழமைக் கட்சி என்றெல்லாம் பாரபட்சம் இல்லாமல் கொலைகள் நடக்கின்றன; கொள்ளைகள் பெருகுகின்றன; வழிப்பறிகள் நடக்கின்றன.
நேற்றையதினம் வெளிவந்த ஆங்கில நாளிதழில்,TamilNadu ranks Third in Child Murders என்ற தலைப்பில் தேசிய குற்ற ஆவண தொகுப்பு மய்யம் அண்மையில் வெளியிட்ட பட்டியல்படி; குழந்தைகள் கொலையில் தமிழ்நாடு அகில இந்திய அளவில் மூன்றாவது மாநிலமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச் சர் நேருவின் இளவல் கே.என்.ராமஜெயம் காலையில் நடைப்பயிற்சிக்காகச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
மூன்று மாதம் ஆகிறது.வேறு ஒரு ஆட்சி நடைபெற்று, இதுபோல் குற்றவாளிகளைப் பிடிக்கவில்லை என்றால் அம்மையார் ஜெயலலிதா; மைனாரிட்டி அரசின் முதல் அமைச்சர் கருணாநிதி, காவல் துறைக்குப் பொறுப்பேற்று இன்றே பதவி விலக வேண்டும் என்று எத்தனை அறிக்கைகளை விட்டிருப்பார்? இன்று எங்கே முதல் அமைச்சர்? எந்த மாநிலத் திலாவது முதல் அமைச்சர் பதவியிலே இருப்பவர் ஒரு மாதம் கோடை வாசஸ்தலம் சென்று ஓய் வெடுக்கும் கொடுமை நடைபெறுவதுண்டா?
இந்த நாட்டிலே எத்தனை பத்திரிகைகள்? யாராவது இதைப் பற்றி ஏதாவது எழுதியிருக்கிறார்களா? எழுதினால் முழுப் பக்க விளம்பரங்கள் கிடைக்காது என்ற ஒன்றே தவிர வேறென்ன? தினமணி என்று ஒரு நாளேடு! இந்த நாட்டின் பிரதமரைப் பற்றி உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றால் அங்கீ காரம் செய்யப்பட்ட பொருளாதார நிபுணரைப் பற்றி எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து,
கேலியும் கிண்டலும் கலந்து எழுத முடியுமோ அந்த அள விற்கு எழுதியிருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது, அந்த நாட்டின் பிரதமரைப் பற்றி அந்த நாட்டிலே நடைபெறும் நாளேடு ஒன்று அந்த அளவிற்கு இழிவாக எழுதிட முன்வருமா? ஆனாலும் ஆதித்தனாரால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை என்ற காரணத்தாலோ என்னவோ, தினத்தந்தி நாளேடு இன்று எழுதிய தலையங்கத்தில் மன்மோகன் சிங் நாடு முழுவதற்கும் பிரதமர்.
அவருக்கு ஒரு அவ மானம் என்றால், நாடு முழுவதுக்கும் அவ மானம் ஆகும். எனவே அனைவரும் இதைக் கண்டிக்க வேண் டும். இந்தியாவுக்கு சில தினங்களில் வரப்போகும் டைம் பத்திரிகையின் இந்த இதழை மட்டும் தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதியிருப் பது ஆறுதலைத் தருகிறது. ஆனால், டைம் பத்திரிகை யோடு சேர்ந்து தினமணி பிரத மரை தரம் தாழ்த்தி எழுதியிருக்கின்ற நேரத்தில், தமிழக முதல் அமைச் சரைப் பற்றியோ, தமிழக அரசைப் பற்றியோ எழுத அஞ்சுகிறது! இவர் அஞ்சாத பொருளில்லை இந்த அரசினிலே! வாழ்க பத்திரிகா தர்மம்!
கேள்வி:- பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் செய்துள்ள மாணவர் களில் 50 சதவிகிதத்தினர் கல்லூரிக்குச் செல்லும் முதல் தலைமுறையினர் என்று ஆங்கில நாளிதழ் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருக்கிறதே?
கலைஞர் :- ஆமாம், உண்மை. 2006-க்கு முன்னர் ஒரே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்த கல்வித் துறையை, கழக ஆட்சியிலே தான் பள்ளிக் கல்வித் துறை எனவும், உயர் கல்வித் துறை எனவும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு இரண்டு அமைச் சகங்கள் உருவாக்கப்பட்டன.
கிராமப்புற மற்றும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர் களுக்கு தேவையற்ற ஒரு சுமையாகவும், செலவு மிக்கதாகவும் இருந்த தொழிற்கல்வி படிப்புக ளுக்கான பொது நுழைவுத் தேர்வு 5-3-2007 அன்று பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் மூலம் ரத்து செய்யப் பட்டது.
நுழைவுத் தேர்வு இருந்தபோது, 2006இல் பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையின் மூலம் சேர்ந்த கிராமப்புற மாணவர் எண்ணிக்கை 24,670 மட்டுமே. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டபின், பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை 2007இல் 34 ஆயிரத்து 69 எனவும், 2008 இல் 50 ஆயிரத்து 589 எனவும், 2009 இல் 54 ஆயிரத்து 73 எனவும், 2010இல் 76 ஆயிரத்து 73 எனவும் அதி கரித்தது.
2006இல் நுழைவுத் தேர்வு இருந்தபோது, தமிழ்வழியில் +2 பயின்ற 11 ஆயிரத்து 799 மாணவர் கள் மட்டுமே ஒற்றைச் சாளர முறையின் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர்; நுழைவுத் தேர்வு ரத்து செய்த பிறகு, இந்த மாணவர்கள் எண்ணிக்கை 2007 இல் 19 ஆயிரத்து 966 எனவும், 2008 இல் 34 ஆயிரத்து 39 எனவும், 2009 இல் 35 ஆயிரத்து 434 எனவும், 2010 இல் 54 ஆயிரத்து 460 எனவும் அதிகரித்து;
தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் பயன் பெற்றனர். 2008-2009ஆம் கல்வியாண்டு முதல் பொறியியற் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர் மற்றும் உதவிக்காக வரும் ஒருவருக்கு 50 சதவீத இருவழிப் பயணக் கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது ; 2008-2009ஆம் ஆண்டு முதல் பொறியியற் கல்லூரிகளில் முன்னாள் இராணுவத் தினரின் பிள்ளைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 81 இடங்கள் என்பதை 150 இடங்கள் எனவும், விளை யாட்டு வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 42 இடங்கள் என்பதை 100 எனவும் உயர்த்தப்பட்டு உள்ளன.
2006ஆம் ஆண்டு வரையில் அரசு பொறி யியல் கல்லூரி மாணவ மாணவியர் செலுத்தி வந்த கல்விக் கட்டணம் 12,550 ரூபாய் 2006-2007ஆம் ஆண்டு முதல் 7,550 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக 2010-2011 ஆம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து கலந்தாய்வு முறையில் தொழிற் கல்வி பட்டப்படிப்புகளில் சேரும் முதல் தலை முறை மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டு;
அரசுக்கு 168 கோடி ரூபாய் கூடுதல் செலவில் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண் டில் சேர்ந்து பயிலும் 67,405 மாணவ மாணவியரும்; இரண்டாம் ஆண்டு நேரடிச் சேர்க்கையில்(Lateral Entry) சேர்ந்து பயிலும் 10,750 மாணவ மாணவியரும் பயனடைந்தனர்.
பொறியியல் கல்லூரிகளில் மேலும் அதிக மாணவர்கள் சேர்ந்து பயில்வதற்கு உதவும் வகையில் 2008-2009ஆம் ஆண்டு முதல், பொறியியற் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான குறைந்த பட்ச மதிப்பெண்களைக் கழக அரசு அனைத்துப் பிரிவினருக்கும் குறைத்தது. அதாவது, பொதுப்பிரி வினர்க்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண் கள் 55 விழுக்காடு என்பதை 50 விழுக்காடு எனவும்;
பிற்படுத்தப்பட்ட கிறித்துவ வகுப்பினர், பிற்படுத் தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர், இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்க்கு நிர்ண யிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 50 விழுக்காடு என்பதை 45 விழுக்காடு எனவும்; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்க்கு நிர்ணயிக்கப் பட்டிருந்த மதிப்பெண்கள் 45 விழுக்காடு என்பதை 40 விழுக்காடு எனவும்; பட்டியல் இனத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர்க்கு நிர்ணயிக்கப்பட் டிருந்த தேர்ச்சி இருந்தால் போதும் என்பதை 35 விழுக்காடு எனவும் இந்த அரசு குறைத்ததால் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்தது.
தி.மு.கழக ஆட்சியில் மேற்கொண்ட முன்னு தாரணமான முயற்சிகளின் பயனாகத்தான் இந்த ஆண்டு பொறியியல் கல்லுரிகளில் சேர 1,80,071 மாணவர்கள் விண்ணப்பித்ததில், 86,997 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்ற பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர் களாவர். தமிழ் மொழியில் படித்தவர்கள், பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப் பித்தவர்கள் என்று எடுத்துக் கொண்டால், 2006ஆம் ஆண்டு 15,000 பேர் என்ற அளவில் இந்த எண்ணிக்கை தற்போது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை என்ற அளவிற்கு உயரவும் தி.மு.கழக அரசுதான் காரணம் என்பதையும் அந்த ஆங்கில நாளேடு எழுதி யுள்ளது.
தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேருகின்ற மாணவர்களுக்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் கல்விக் கட்டணம் 32,500 ரூபாய் என்பதை ஒரு பைசாகூட உயர்த்த அனுமதிக்காமல், அய்ந்தாண்டுகளும் அதே கட்டணம்தான் நீடித்தது. ஆனால் ஜெயலலிதா அரசு பதவி யேற்ற முதல் ஆண்டிலேயே இந்தத் தொகையை 40,000 ரூபாயாக உயர்த்தினார்கள்.
மேலும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேருகின்ற மாணவர்களுக்கு கழக ஆட்சியில் 62,500 ரூபாயாக இருந்த கட்டணத்தை, தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் 70,000 ரூபாயாக உயர்த்தியிருக் கிறார்கள். பொறியியல் கல்லூரிகளில் தாய்மொழி யில், அதாவது தமிழ் மொழியிலேயே படிக்கும் வசதியும் கழக ஆட்சிக் காலத்தில்தான் செய்யப் பட்டது. உயர் கல்வித் துறையிலே தி.மு.கழக ஆட்சியில் எந்த அளவிற்கு முன்னேற்றங்கள் செய் யப்பட்டன என்பதை இந்த விவரங்கள் தெளி வாக்குமென்று நம்புகிறேன்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் மறுகூட்டல்: இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு
- வழக்கை திசை திருப்ப முயற்சி: கலைஞர் கண்டனம்
- கல்விக்கடனுக்காக மாணவர்கள் வங்கிகளில் தலை குனிய தேவை இல்லை: ப.சிதம்பரம் பேச்சு
- வேளாங்கண்ணி வரை நாகை ரயில்கள் நீட்டிக்க நடவடிக்கை - டி.ஆர்.பாலு பேட்டி
- உலகிலேயே குறைந்த செலவில் செல்போன் சேவை தருவது இந்தியா தான் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
No comments:
Post a Comment