மகுடிக்கு மயங்குமா பாம்பு?
உண்மையில் சொல்லப் போனால் பாம்புக்குச் சுத்தமாகக் காது கேட்காது. இது ஒரு செவிட்டுப் பிராணி என்பதே உண்மை. ஊர்வன வகையைச் சார்ந்த எந்த உயிரினத்திற்கும் பாலூட்டிகளைப் போல புறக்காது கிடையாது. ஆனால், மாண்டிபுளார் வழி எனப்படும் காதுத் துளை உண்டு. இத்துளைகள் மூலம் இவை ஓசையை நன்கு கேட்டு அறிய முடியும். ஆனால், பாம்புக்கு மாண்டிபுளார் செவியும் கிடையாது.
அதேசமயம் பாம்பு மிகவும் அருகில் ஏற்படும் அதிர்வு களை அறிந்துகொள்ளும் திறன் பெற்றது. இதைத்தான் பாம்புக்கு கூர்மையான செவி அமைப்பு உடையதாக தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். இருப்பினும் ஒரு கூடுதல் செய்தி என்னவென்றால், பாம்பாட்டிகள் மகுடி ஊதும்போது, மகுடி ஓசை மென்மையாக பூமியில் தவழ்ந்து ஓடுகிறது. அவ்வாறு தவழ்ந்தோடும் இசை பூமியின் தரை மீது இருக்கும் பாம்பின் உடலில் பட்டு அதிர்கிறது. அந்த அதிர்வுக்கு ஏற்பவே பாம்பு படமெடுத்து ஆடுகிறது.
கி.மு. 600 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய மம்மியின்
செயற்கை உறுப்பு கண்டுபிடிப்பு இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தை சேர்ந்த தலைமை ஆராய்ச்சியாளர் ஜாக்கி பின்ச் எகிப்து நாட்டின் புகழ் பெற்ற மம்மிகள் பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார். அதில் மனித உடலின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள மம்மி ஒன்றின் வலது கால் பெருவிரல் ஒன்று உறுப்பு மாற்று சிகிச்சையின்படி ஒன்றிணைக் கப்பட்டு உள்ளதாக கின்ச் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கார்பன் ரேட்டிங் அடிப்படையில் அதன் காலம் கி.மு. 600 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இது பற்றி பின்ச் கூறுகையில், 3 பங்கு மரத்தாலும் மற்றும் தோலாலும், ஒரு மனிதனின் 40 சதவீத உடல் எடையை தாங்க கூடிய அளவில் அந்த வலது கால் பெருவிரல் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது உலகின் மிக பழைமையான செயற்கை உறுப்பு என்ற பெருமையை பெறுகிறது என்றார். எனினும், இந்த செயற்கை உறுப்பு குறிப்பிட்ட அந்த மனிதனால் பயன்படுத்தப்பட்ட ஒன்றா அல்லது மம்மியாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டதா- என்ற அடிப்படையில் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். இதுவரையில், சில நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ரோமானிய செயற்கை கால் மிகப் பழைமையான செயற்கை உறுப்பு என்ற பெருமையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- எரிகற்களின் மோதலால் தான் தங்கம் வந்ததாம் : ஆராய்ச்சியில் தகவல்
- விண்வெளியில் சந்திரா
- விண்ணில் இருந்து விழும் விண்கற்கள்
- தலைக்கு மேலே இந்திய செயற்கைக்கோள்கள்
- தாயின் ரத்த மாதிரியில் சிசுவின் மரபணு விவரம் அறியலாம்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment