Wednesday, July 11, 2012

யாழில் தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாடும் பவுத்த பிக்குகள்!


சிறீலங்கா, ஜூலை 11- யாழ்,நகர் பகுதியில், பௌத்த பிக்குகள் சிலர்  வீடுகளுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும் சென்று நிதி சேமிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதன்படி நேற்றையதினம், யாழ். கஸ்தூரி யார் வீதி பகுதியில் முச்சக்கரவண்டி மூலம் நிதி சேமிப்பில் ஈடுபட்டு வந்த பிக்குகள் பார்ப்பதற்கு சந்தேகத்துக் கிடமான விதத்தில் காணப்பட்டதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
மேலும், விகாரைகளில்  பௌத்த மத குருமார்களின் கண்காணிப்பில் தங்கி யுள்ள ஏழைச் சிறுவர்களின் நலனுக்காக இவ்வாறு நிதி சேமிப்பில் தாம் ஈடுபடுவதாக குறித்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
னினும், தமிழர் வாழும் பிரதேசங்களில் காணப்படுகின்ற இந்துக்கோவில்கள் சிதைக் கப்பட்டு, பவுத்த விகார்கள் அமைக்கப்பட்டு வருவதற்கு பெரும்பாலும் பவுத்த பிக்குகளே ஆதரவளித்து வருவ தாகவும், இந்த வகையில் இவ்வாறு நிதி உதவி கோருவது, அவ்வாறு விகார்கள் அமைக்கப்படுவதற்கோ என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும், அண்மை காலமாக, தென்னிலங் கையிலிருந்து, பெருமளவிலான பவுத்த பிக் குகள் யாழிற்கு வருகை தருவது சந்தேகிக்கக் கூடியதாக உள்ளது. இதேவேளை, நாடளா விய ரீதியில் பவுத்த பிக்குகளின் சீருடை தரித்த சிலர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் காவல் துறையின ரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...