ஏற்கெனவே சொன்ன வாக்கைக் காப்பாற்றுவாரா?
- நித்தியானந்தா குற்றவாளி என்று கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு!
- முறைகேடாக வசூலித்த ரூ.8 கோடியைத் திருப்பித் தர உத்தரவு
நியூயார்க், ஜூலை 21- நித்தி யானந்தா பவுண்டேஷன் முறைகேடு களில் ஈடுபட்டது தெரியவந் துள்ளதால், அதற்கு நன்கொடை கொடுத்த அமெரிக்கா வாழ் இந்தி யருக்கு 8கோடியை திருப்பித்தர வேண்டும் என்று கலிபோர்னியா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறி யுள்ளது.
அமெரிக்க நீதிமன்றம் நித்யானந் தாமீதுள்ள குற்றம் உண்மை என்று தீர்ப்புக் கூறினால் நித்யானந்தாவை இளைய ஆதீனகர்த்தர் பதவியி லிருந்து நீக்கி விடுவேன் என்று செய்தியாளர் களுக்குப் பேட்டியாக அளித்தார் மதுரை ஆதீனகர்த்தர். இந்த நிலையில் நித்யானந்தா நீக்கப்படு வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நித்தியானந்தா பவுண்டேஷன் அங்கு வாழும் இந்தியர்கள் உள்ளிட்டோரிடம் நன்கொடை வசூலித்தது. ஆனால், நித்தியானந்தா பவுண்டேஷன் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவும், லாபமில்லா அமைப்பு என்று கூறி, நன்கொடைகளை தங்கள் இஷ்டத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றச் சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நித்தி யானந்தா பவுண்டேஷனுக்கு நிதியுதவி அளித்த, அமெரிக்கா வாழ் இந்தியரான பொபட்லால் சாவ்லா என்பவர் கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் கடந்த 26 முதல் 29ஆம் தேதி வரையில் விசாரணை நடைபெற்றது. நித்தியானந்தாவின் முதன்மை சீடரான மா நித்தியா சதானந்தா என்று அழைக்கப்படும் ஜமுனா ராணி, வழக்கு விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் கலிபோர்னியா நீதிமன்றம் வெளி யிட்டுள்ள தீர்ப்பு:
நித்தியானந்தா பவுண்டேஷன், பொபட்லால் சாவ்லாவை ஏமாற்றி நிதி பெற்றிருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
நித்தியானந்தா பவுண் டேஷனின் ஏஜன்டாக நித்தி யானந்தா செயல்பட்டுள்ளார். பவுண் டேஷனின் நடவடிக்கைகள் அனைத் திலும் அவர் முக்கிய பங்காற்றி யுள்ளார். பாதிக்கப்பட்ட பொபட் லால் சாவ்லாவுக்கு நித்தியானந்தா பவுண்டேஷன் ரூ.8 கோடியை திருப்பி தர வேண்டும். மேலும், அவருடைய வழக்குச் செலவு அனைத்தை யும் பவுண்டேஷன் தரவேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நித்தி யானந்தா பவுண்டேஷனுக்கு நிதியுதவி அளித்த மேலும் பலர், இதேபோல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தங்களுடைய நிதியை திரும்ப பெற லாம் என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- பாகிஸ்தானில் பின்லேடன் வாழ்ந்த வீடு அரசுடமை ஆகிறது
- நைஜீரியாவில் டேங்கர் லாரிகளில் தீ பிடித்து 30 பேர் கருகி பலி
- அலாஸ்கா: விமான விபத்தில் 2 ஆஸ்திரேலியர்கள் பலி
- அமெரிக்க திரையரங்கில் துப்பாக்கிச் சூடு: 14 பேர் பலி
- ஸ்பெயின் அரசுத்துறை இரும்புத் தொழிற்சாலையில்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- அமெரிக்க ராணுவத்துக்கு ரூ.33 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
- 48 டன் எடை கொண்ட வெள்ளிக்கட்டிகளை கர்சோபா பகுதியிலிருந்து
- சிரியா விவகாரம் ரஷியா அதிபர் புதினுடன் ஒபாமா பேச்சு
- சீனாவின் அன்கூய் மாகாணத்தில் உள்ள சிய்சு நகரத்தில்
- துனிசியா முன்னாள் அமைச்சருக்கு 20 ஆண்டு சிறை
No comments:
Post a Comment