திருச்சி, ஜூலை 26- பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம் 22.7.2012 அன்று கல்லூரி அரங்கத்தில் நடை பெற்றது.
1994ஆம் ஆண்டு முடித்த 24 பேர் கொண்ட இளநிலை மருந்தியல் பட்டப்படிப்பு மாணவிகள் 10 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
தங்களுடைய முன்னேற்றத்தில் இக்கல்லூரியின் பங்கு சாலச் சிறந்தது என்று அவர்கள் உரையாற்றினர். அவர்களின் உரையிலிருந்து சில பகுதிகள்....
தங்களுடைய முன்னேற்றத்தில் இக்கல்லூரியின் பங்கு சாலச் சிறந்தது என்று அவர்கள் உரையாற்றினர். அவர்களின் உரையிலிருந்து சில பகுதிகள்....
ஜீனா ஸ்டீஃபன், உயர் கல்வித் துறை, துபாய்:
இன்று நான் என்னவாக இருக்கிறேனோ, அவ்வாறு நான் உருவாவதற்கு உதவியாக இருந்தது திருச்சி பெரியார் நூற்றாண்டு மருந்தியல் கல்லூரிதான்; எனது வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்த வளாக இன்று நான் விளங்கு வதற்கும் இந்த இடம்தான் காரணம்.
பி.சுபா, இல்லத்தரசி, போலந்து:
எங்களது திருச்சி பெரியார் நூற்றாண்டு மருந்தியல் கல்லூரி யின் முன்னாள் மாணவி என்று கூறிக்கொள்வதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். கல்லூரியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் அசாதாரண மானவை; இங்குள்ள பரிசோதனைக் கூடங்களும், நூலகமும் நவீன மயமாக்கப்பட்டுள்ளதால், இப்போது இங்கு பயிலும் மாணவர்கள் நல்வாய்ப்பு பெற்றவர்களாக விளங் குகின்றனர். அயல்நாட்டில் வாழும் ஓர் இந்தியராக விளங்கும் நான் தந்தை பெரியார் அவர்கள் சிந்தனைகள் இந்நாட்களில் உண்மையானவையாகவும், வியப் பளிப்பவையாகவும் ஆனதை நன்று உணர்கிறேன்.
நர்மதா, இல்லத்தரசி, மஸ்கட் :
பெரியார் நூற்றாண்டு மருந் தியல் கல்லூரியில் பயின்ற காலத் திய எங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அக்காலத்தில் முழுமையான மகிழ்ச்சியை நான் அனுபவித்த இடமாக விளங்கியது அது. இக்கல்லூரி இன்று பல வழிகளிலும் வியக்கத்தக்க முறையில் பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்று அங்கு பயிலும் மாணவர்கள் உண்மை யிலேயே மகிழ்ச்சியுடன் கற்கலாம். இன்று வரை எங்களது பெரியார் கல்லூரி மிகச் சிறந்த கல்வியை அளித்து வருவதைப் பற்றி நான் மிகுந்த பெருமை அடைகிறேன்.
ஷர்மிளி, தரக்கட்டுப்பாட்டு மேலாளர், கருநாடகா
நுண்ணுயிர்க் கொல்லிகள் மற்றும் மருந்தியல் நிறுவனம், பெங்களூரு: எங்களது திருச்சி பெரியார் நூற்றாண்டு மருந்தியல் கல் லூரியின் முன்னாள் மாணவி என்று கூறிக் கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இக்கல்லூரியின் நான் பயின்ற கல்வியின் காரணத்தினால்தான் இந்த நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு மேலாளராக மிகச் சிறந்த முறையில் பணியாற்ற என்னால் முடிகிறது. நமது கல்லூரியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உண்மையில் எங் களை வியப்படையச் செய்கின்றன. என்றும் நினைவில் நிற்கும் வகையிலான முன்னாள் மாணவர்களின் சந்திப்பை ஏற்பாடு செய்த கல்லூரியின் முதல்வர் மற்றும் பணியாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பீனா சுராஜ், மருத்துவ சோதனை மற்றும் மருந்துகள் பரிந்துரையை எடுத்தெழுதுபவர், புதுச்சேரி:
எங்களது திருச்சி பெரியார் நூற்றாண்டு மருந்தியல் கல்லூரி ஒரு அறிவூற்றினை ஒத்தது. இக் கல்லூரியின் அற்புதமான நூலகத் தில் மாணவர்கள் தங்களின் அறிவுத் தாகத்தைத் தணித்துக் கொள்ளத் தேவையான நூல்கள் நிரம்பப் பெற்றுள்ளது. இக் கல்லூரியில் ஒவ்வொரு சுவரும் எங்களது மகிழ்ச்சி யையும், ஒவ்வொரு வகுப்பறையும் எங்களது சிரிப் பையும் எதிரொலிப்பதாகவும், ஒவ்வொரு ஜன்னலும் ஒரு மாபெரும் வாய்ப்புக்கான திறவுகோலாகவும் விளங்குகின்றன. எங்களது சாதனைகளைப் பட்டிய லிடுவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது. எங்களது கடந்தகால வெற்றிகளைத் திரும்பிப் பார்க்கும் போது, எங்களுக்குப் பின்னால் நமது பெரியார் கல்லூரி என்ற ஒரு பாரம்பரியப் பெருமை இருப்பதை நாங்கள் உணர்கிறோம்.
கே.ஜெயந்தி, இல்லத்தரசி, சென்னை:
தந்தை பெரியார் இல்லையென் றால் பெண் சுதந்திரம் என்பது கிடைத்திருக்காது பெண்களுக் காக உருவாக்கிய எங்கள் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி என்பது பெருமையாக உள்ளது. என் எதிர் கால கனவுகளை நிஜ மாக்க எனக்கு கிடைத்த முதல் படிக்கட்டு என் கல்லூரி.
சி.கோகிலா, மருந்தாளுநர், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை:
எனது தாயின் கருவறையும் என் பெரியார் மருந்தியல் கல்லூரியின் வகுப்பறையும் தான் எனது வாழ்வின் அர்த்தங்கள்.
எஸ்.வாசுகி, இல்லத்தரசி, திருப்பூர்:
நான் இந்த கல்லூரியில் படித் தமைக்காக மிகவும் மகிழ்ச்சியடை கிறேன். கல்லூரியின் வளர்ச்சி மிக பிரம்மிப்பாக உள்ளது. கல்லூரி மென்மேலும் ஆராய்ச்சியில் சிறந்துவிளங்க எனது வாழ்த் துக்களை உரித்தாக்குகிறேன். நமது பெரியார் கல்லூரியில் மருந்தியல் பட்ட தாரிகளை மட்டும் உருவாக்கவில்லை. சமு தாயத்தை எதிர்கொள்ளும் தைரியமும் தன்னம் பிக்கையும் மிக்க மருந்தாளுநர்களை உருவாக்கியுள் ளனர். நான் இக்கல்லூரியில் பயின்ற மாணவர் என்பதே என் முதல் பெருமையாகும்.
கரோலின் கிரேஸ், உதவிப் பேராசிரியர், நந்தா மருந்தியல் கல்லூரி, ஈரோடு:
மருந்தியல் பட்டப் படிப்பின் மூலம் எனக்கு மாபெரும் வாய்ப் பினை அளித்த திருச்சி பெரியார் நூற்றாண்டு மருந்தியல் கல்லூரிக்கு நான் பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். 22-07-2012 அன்று நடைபெற்ற கல்லூரியின் முன் னாள் மாணவர்களின் சந்திப்பின்போது எங்களை அன்பாக வரவேற்று உபசரித்த கல்லூரியின் முதலவர் மற்றும் இதர பணியாளர்களுக்கும் நன்றி கூற நான் விரும்புகிறேன். மருந்தியல்துறையில் உலக அளவில் ஆராய்ச்சி மேற் கொள்வதற்கான இடமாக என்றா வது ஒரு நாள் நமது கல்வி நிறுவனம் விளங்கும் என்று நான் நம்புகிறேன். இக்கல்லூரியின் முன்னாள் மாணவி என்று கூறிக் கொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
எம்.தமிழ்மொழி, முதல்வர், ஆதி பகவன் மருந்தியல் கல்லூரி, செய்யாறு:
நமது பெரியார் கல்லூரியில் மருந்தியல் பட்டதாரிகளை மட் டும் உருவாக்கவில்லை. சமுதா யத்தை எதிர்கொள்ளும் தைரி யமும் தன்னம்பிக் கையும் மிக்க மருந்தாளுநர்களை உருவாக்கியுள்ளனர். நான் இக்கல்லூரியில் பயின்ற மாணவர் என்பதே என் முதல் பெருமையாகும்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- மெட்ரோ ரயில் பணியால் எல்.அய்.சி.க்கு பாதிப்பு இல்லை
- பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புத்தக விழா
- மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- புதிய தலைமை செயலக வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு
- மாணவியை அடித்த ஆசிரியர் பணி நீக்கம்
- கொசு, எலிகளை ஒழிக்க கட்டண சேவை சென்னை மாநகராட்சி அதிரடி தீர்மானம்
- தங்க ஊழல் முறைகேடு: சி.பி.அய். தள்ளுபடி
- பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்ல தடை பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அடுத்து >>
JULY 16-31
அய்.நா.வில் தமிழீழக் கோரிக்கை
அய்யா பெரியார் வரலாற்று நாயகன்
உங்களுக்குத் தெரியுமா?
எண்ணம்
கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க... - 5
கனவுகளும் மூடத்தனமும்
கவிதை
காரணம் அவர்கள் ஜாதி...
சாமி குத்தம்...!
தடுமாறிய மனம்
தமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமைத் தன்மையும்
தூள்... தூளான கடவுள், கடவுளை அழிக்கும் துகள்
நிகழ்ந்தவை
பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - 7
புதுப்பாக்கள்
பெண் ஆணைக் கட்டிக் கொள்ளும் காலம் வரும் - தந்தை பெரியார்
பெரியாரின் தொண்டு வியந்த அமெரிக்கப் பேராசிரியை
பெரியாரை அறிவோமா?
பெரியார் அடிகளார் உறவு : புரட்டர்களின் பொய் மூட்டை
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
மக்கள் தங்களின் உண்மையான சக்தியை உணராமல் இருக்கிறார்கள்
மாற்றுப் பாதையில் சேதுக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முடியாது!
முகநூல் பேசுகிறது
முற்றம்
மூடநம்பிக்கையும், உணவுப் பொருளும்
ஹிக்ஸ் போசான் கண்டறிந்தது எப்படி?
No comments:
Post a Comment