Saturday, June 9, 2012

தாழ்த்தப்பட்டவர்களை தாங்கும் இயக்கம் எது?


கவிஞர் கலி. பூங்குன்றன்

தீண்டாதார்
பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமான தென்பதை நாம் கோபுரத்தின் மீதிருந் தும் சொல்லுவோம். ஏனெனில், அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ, உத்தியோகத் திலோ மற்றும் பல பொது வாழ்க்கை யிலேயோ, அவர்கள் முன்னேறவே யில்லை. இதன் காரணத்தினால் தேசத்தில் 5இல் ஒரு பாகம் ஜனங்கள் தேச நலத்தை மறந்து சர்க்காரின் தயவை நாடி, அன்னிய மதத்தில் போய் விழுந்து நமக்கு எதிரிகளாய் முளைத்துக் கொண்டு வருகிறார்கள். சுயகாரியப் புலிகளுக்கு இதைப்பற்றி கவலையிராதுதான். பொறுப்புள்ள பொது மக்கள் இதைக் கவனியாமல் விடுவது தேசத் துரோகமென்று மாத்திரம் சொல்லுவதற்கில்லை; இன்னும் எவ்வளவோ பெரிய பாவிக ளென்று தான் சொல்லவேண்டும். சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாகவாவது இச்சமூகங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்குமேயானால், இன்றைய தினம் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப்பிராய பேதங்களும், ஒற்றுமையின்மையும் பிரிட்டிஷ் கொடுங்கோன்மையும், பிராமணக் கொடுமையும், நமது நாட்டில் இருக்குமா? தெருவில் நடக்கக் கூடாத மனிதனும், கண்ணில் தென்படக் கூடாத மனிதனும் இந்தியாவில் இருக்கக் கூடுமாவென்பதை பொது நோக்குடைய ஒவ்வொரு வரும் யோசிக்க வேண்டுவதோடு, ராஜீய மகாநாட்டில் இதை வலியுறுத்தி அமலுக்குக் கொண்டு வரும்படி செய்ய வேண்டியது தேசபக்தர்களின் கடமையென் பதை வணக்கத் துடன் மீண்டும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். (குடிஅரசு, தலையங்கம் 8.11.1925)
தாழ்த்தப்பட்டோரை அடிமைப்படுத்தினால் திராவிடர் இயக்கம் போராடும்!
உங்கள் கிராமமாகிய இத்திருமங் கலத்திலுள்ள அக்கிரகாரம் வீதியில் (பார்ப்பனர் சேரி) தாழ்த்தப்பட்டோர் போக உரிமை கிடையாது என்பதாகக் கேள்விப்பட்டேன். இந்த 1947ஆம் ஆண்டிலும், அதுவும் அரசியலார் இவற்றை ஒழிக்கும் முறையில் சட்டம் செய்திருந்தும், இந்த ஊர் ஆரியர்கள் பகிரங்கமாக இவ்வளவு மனிதத் தன்மை யற்று நடந்து வருகிறார்களென்றால் இந்த ஜாதி ஆணவத்தை எதற்கு ஒப் பிடுவது?
சுயமரியாதை - திராவிடர் இயக்கக் கிளர்ச்சியால் இரயில்வே ஸ்டேஷன் களிலுள்ள ஜாதி வித்தியாசத் தடை களும், ஓட்டல்களிலுள்ள ஜாதி வேறுபாடு முறை வழக்கங்களும் அறவே ஒழிந்துவிட்டன.
ஆனால் இம்மாதிரியான கிராமங்களில் ஆரியர் - உயர் ஜாதிக்காரர்கள் என்று கூறப் படுவோர், தாழ்த்தப்பட்டோருக் குச் செய்யும் வஞ்சகத்தை உடனடியாக ஒழித்துத் தீர வேண்டுவது நாட்டின் நலன் கருதுவோர் அனைவரின் கடமையாகும்.
இவ்விதக் கொடுமைகளை எல்லாம் இனி எங்கிருந்தாலும் திராவிட இயக்கத்திற்குத் தெரி வியுங்கள். இவைகளை எல்லாம் முதலில் ஒரு மாநாட்டின் மூலம் அரசியலாருக்கு எடுத்துக் கூறுவோம். ஆவன செய்ய வேண்டி. அதற்கும் இன்றைய அரசியலாரின் அலட்சியமே நமக்குப் பதிலாயி ருக்குமானால், அரசியலாரின் 144 தடைகளையும் வேண்டுமானால் இந்த விஷயத்தில் மீறியாவது மனித உரிமையைப் பெறுவோம்.
சுருங்கக் கூறுகிறேன், தாழ்த்தப்பட் டோரை யார் அடிமைப்படுத்தினாலும் அதைத் திராவிடர் இயக்கம் எதிர்த்துப் போராடும் என்று. இம்மாதிரியான காரியங்களில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பஞ்சாயத்தாரும், மற்றவர்களும் அக்கறை எடுத்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.
(4.7.1947இல் திருமங்கலத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு, விடுதலை, 5.7.1947)
பெரியாரிடத்தில் நம்பிக்கை வைத்து நடந்துகொள்ளுங்கள்!
பார்ப்பனரல்லாதோருக்கு நான் சொல்வது என்னவென்றால் - தலைமைத்துவம், மக்கள் ஒற்றுமை, தலைவரிடம் மரியாதை ஆகியவற்றை மாற்றார்களிடமிருந்து பார்த்துப் படித்துக் கொள்ளுங்கள். காலம் கடவா முன்னர் கற்றுக் கொள்ளுங்கள். ஆதலால் உங்கள் தலைவரைக் குறைகூறுவது புத்திசாலித்தனமான காரியமாகாது. எனவே, தலைவர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து மதித்து நடந்து கொள்ளுங்கள். - அண்ணல் அம்பேத்கர், (குடிஅரசு, 30.9.1944)
(குறிப்பு: தந்தை பெரியாருக்கு விரோதமாக நாங்கள் தான் நீதிக்கட்சி என்று சொல்லிக் கொண்ட சிலர் அண்ணல் அம்பேத்கரிடம் முறையிட்ட போது அம்பேத்கர் கூறிய அறிவுரை இது)
பெரியார் ஒருவர்தான் இருக்கிறார்!
இந்திய உபகண்டத்திலேயே சாதி ஒழிப்புக்காகவும், சாதி ஆணவ ஆதிக்கங்களை ஒழிப்பதற்காகவும் உண்மையிலேயே பாடுபட்டு உழைத்து வருபவர் பெரியார். இந்த இருபதாம் நூற்றாண்டிலேயே பெரியார் ஒருவர்தான் இருக்கிறார். ஆகவே, சாதி ஒழிப்பில் ஆர்வமிக்க அனைவரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் பெரியார் அவர்களுடன் ஒத்துழைப்பதுடன், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மேடைகளில் அவரது அறிவுரைகளைக் கேட்கும்படி வசதி ஏற்படுத்திக் கொள்வது நல்லது  -பாபு. ஜெகஜீவன்ராம், (விடுதலை, 18.10.1960)
நோயைத் நீக்கும் மருந்து
தமிழ்நாட்டில் உணர்ச்சியற்று உறங்கிக் கிடந்த தாழ்த்தப்பட்டோரைத் தட்டி எழுப்பிய தகைமிகு தனிப் பெருமை - பெரியாரையே சாரும். இதன் காரணமாகவே, தாழ்த்தப்பட்டோர் பெரியார்பால் அசைக்க முடியாத உரிமை பூண்டு வருகின்றனர். சாதி, மதம், பழக்க வழக்கம் இவற்றையே மூலவேருடன் முனைந்து களையும் போது, கிளைபோல் நிலைத்த தீண்டா மையும், தாழ்த்தப்பட்ட தீயசதியும் அடியற்று வீழ ஏதுவாகிறது. இதை யறியாத பலர், போலித் தலைவர்களின் பேச்சில் ஏமாற்றமுற்று மோசம் போகின்றனர்.
பெரியாரின் மருந்து கசப்புள்ளது; ஆனால், உறுதியாக நோயை அண்டிப் போக்கக்கூடியது. கசப்பு என்று ஒதுக்கின், கவலைக்கிடமாகிக் குணம் உண்டாகாதாகிவிடும். வேறுபல, ஏனை யோரின் விடங்கலந்த மருந்தை இனிதென்று அருந்தி, இறுதியில் இன்னுயிரிழக்க வகைகோலாதவாறு, பெரியாரின் உதாரண செயல் உணர்த்தி விட்டது. எதிர் நீச்சு நீந்தி பெரும் காரியத்தில் வெற்றி கண்டு நமக்களிக்க முன் வந்திருக்கும் நம் பெரியார், ஓர் ஒப்பற்ற கர்ம வீரர் என்பதில் அய்ய மில்லை.- -- வீராங்கனை சத்தியவாணிமுத்து
பகுத்தறிவுச் சமதர்ம வீராங்கனை சத்தியவாணிமுத்து
மேயர் வேலூர் நாராயணனுக்கும், அமைச்சர் சத்தியவாணிமுத்து அம்மை யாருக்கும் இடையே தந்தை பெரியார் செய்து வைத்த சமாதானம்!
வேலூர் நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்த சமயம்; வேலூர் நாராயணன் அவர்கள் மகனுக்கும் அமைச்சர் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள் மகளுக்கும் இடையே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது. அதனை விரும்பாமல் ஜாதி பெயரைச் சொல்லி மேயர் திட்டியதாக ஒரு பிரச்சினை வெடித்தது.
அந்தச் சூழலில் வேலூர் நாராயணன் அவர்கள் தம் பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் அவர்களை உரையாற்றிட அழைத்திருந்தார்.
இந்தக் கூட்டத்தின் பின்னணியை அறிந்த தந்தை பெரியார் அவர்கள் பொதுக் கூட்டத்திலேயே விவரங் களைப் போட்டு உடைத்து விட்டார்.
வேலூர் நாராயணன் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர், அப்படி சொல்லியிருக்க மாட்டார். ஒருக்கால் அப்படிச் சொல்லியிருந்தால் அவரை மன்னிப்புக் கேட்கச் சொல்லுகிறேன்.
தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்தி ஏதாவது சொல்லியிருந்தால் அவர் தி.மு.கவில் இருப்பதற்கே லாயக்கற்றவர் என்று கடுமையாக பேசினார் தந்தை பெரியார்.
அக்கூட்டத்தில் பேசிய தந்தை பெரியார் அவர்கள் ஜாதியைப் பற்றிப் பேசுகிறவர் அத்தனைப் பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனே என்று கூறினார். என்னைப் பொறுத்தவரை நான் பறையனாக இருப்பதைக் கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதைக் கேவலமாகக் கருதுகிறேன். எனக்குப் பிள்ளை இல்லை; ஒரு சமயம் பிள்ளையிருந்தால் அதுவும் பெண்ணாக இருந்தால் மாண்புமிகு சத்தியவாணி முத்து அம்மையார் மகனுக்குக் கொடுத் திருப்பேன். அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன்.
காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படிச் சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்படும் முன்பே சொல்லிவிடுவேன். இதேபோல் தாழ்ந்த ஜாதிப் பையன்களாகப் பார்த்து காதல் செய் என்று சொல்லி விடுவேன் என்று சென்னை அயன்புரத்தில் நடைபெற்ற அந்தப் பொதுக்கூட்டத்தில் (11.12.1968) பேசினார்.
******
இந்தியாவில் இரண்டாயிரம் வருடத்தில் மகத்தான ஒரு சமுதாயப் புரட்சி தமிழ்நாட்டில்தான் நடந்திருக் கிறது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார்தான் அந்தப்  புரட்சியைச் செய்தவர் என்பது அமெரிக்காவிலுள்ள மூத்த பேராசிரியர்களின் கருத்தாகும். - அமெரிக்கப் பேராசிரியர் ஜான்ரைலி (ஆனந்தவிகடன், 16.7.1972)
உண்மைகளும், நடப்புகளும் இவ்வாறு இருக்க, இவற்றிற்கு மாறாக திராவிடர் இயக்கத்தின் மீதும் தந்தை பெரியார் அவர்களின்மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி வீசிட மனம் எப்படித்தான் இடம் கொடுத்ததோ? கைகளும் இத்தகைய ஏறுமாறான எழுத்துக்களை வரைந்திட எப்படித் தான் முன்வந்ததோ!
தோழர்களே! பார்ப்பனர்களுக்குப் பால் வார்க்காதீர்! நம் கை நம் கண்களைக் குத்தலாமா? தனிமையில் தீர்க்கமாகச் சிந்தித்து தகுதியானவற்றை மட்டுமே எழுதுக!

அபாண்டம் ஏன்?
தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதிகள் நகராட்சியிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் இடம் பெறுவதை நீதிக்கட்சியினர் அனுமதிக்கவில்லை என்ற ஓர் அபாண்டத்தைச் சுமத்துகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் ரவிக்குமார்.
உண்மை என்னவென்றால் தாலுக்கா போர்டுகளில் தாழ்த்தப்பட்டவர்களை உறுப்பினர்களாக நியமித்தது நீதிக் கட்சிதான். இதனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தோர்க்கு எதிராகச் சுயமரியாதை இயக்கத்தினர் கண்டனக் கூட்டங் களை ஏற்பாடு செய்தனர் (திராவிட இயக்கம் தமிழர்களுக்கு எதிரானதா? - -_ க. திருநாவுக்கரசு பக்கம் 23).


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...