கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த துக்ளக் சோ ராமசாமி அய்யர்,
சென்னை உயர்நீதிமன்றத்தில் 1962 இல் ஊழல் நீதிபதி கிடையாது. இப்போது? ஊழல் இல்லா நீதிபதிகள் உண்டா என்று தெரியாது; இதுதான் திராவிடர் கழகம் ஏற்படுத்திய மகத்தான மாற்றம்.(துக்ளக், 18.4.2012 - பக்கம் 29 என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போதுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊழலற்றவர்களா, இல்லையா என்கிற அய்யப்பாட்டை இதன்மூலம் உருவாக்கியிருக்கிறார் சோ.
இதன்மீது சென்னை உயர்நீதிமன்றம் என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.
1962 இல் ஊழல் நீதிபதிகள் கிடையாது என்று நற்சான்று கொடுத்திருக்கிறார் திருவாளர் சோ.
அப்படியா....?
தலைமை நீதிபதியாக இருந்த பார்ப்பனர் ஒருவர், தன் பிறந்த தேதியை மாற்றியது ஊழலுக்கு அப்பன் அல்லவா?
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இராமச் சந்திர அய்யர் பிறந்து 11 மாதம் கழித்து அவரது தம்பி பிறந் திருக்கிறாரே - இந்த அதிசயம் எப்பொழுது நடந்ததாம்?
பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள் அல்லவா - (இ)எப்படியும் பிறந்திருக்கலாம் - ஆமென்க!
இதுபற்றி கோயங்கா வீட்டுக் கணக்குப்பிள்ளை எஸ். குருமூர்த்தி அய்யர் என்ன எழுதினார் தெரியுமா?
20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்தில் பிறப்புச் சான்றுகள் என்பது அதிகாரபூர்வமாக இல்லையாம். அதனால் இந்தத் தவறு நேர்ந்துவிட்டதாம்! உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு போடப்பட்ட நிலையில், பதிவாளர் சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதி இராமச்சந்திர அய்யருக்கு முறைப்படி தெரிவித்த அடுத்த சில விநாடியே பதவி விலகி விட்டாராம். பதவி விலகவில்லை என்றால் என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியுமே - சங்கராச்சாரியார்களே கம்பி எண்ணியிருக்கிறார்களே! தலைமை நீதிபதியும் கம்பி எண்ணினார் என்ற பார்ப்பனர்களின் சாதனை வீண் போயிற்று!
அவர் பதவி விலகி இருந்தாலும், தேதியைத் திருத் தியதற்கான மோசடிக்கான தண்டனை எப்படி தப்பியது? குடியரசுத் தலைவர் ஒரு பார்ப்பனர் (டாக்டர் ராதாகிருஷ்ணன்) இவர் ஒரு பார்ப்பனர் என்ற பாசக்கயிறுதானே!
டில்லி தலைமைச் செயலகத்தில் இந்த இராமச்சந்திர அய்யர்வாளின் உடன் பிறப்பு பெரும் பொறுப்பில் இருந் தார். அந்த சாய்காலோடுதான் அய்யர்வாள் இப்படித் திமிர் முறித்தார்.
இதுபோன்ற குற்றம் பார்ப்பனர் அல்லாத பிரதம நீதிபதியான ராஜமன்னார் அவர்கள் மீதோ, அல்லது ஓய்வு பெற்றுள்ள தமிழர் நீதிபதிகளான சோமசுந்தரம், கணபதியாபிள்ளை போன்றவர்கள்மீதோ அவர்களது பதவிக் காலத்தில் வந்திருக்குமாயின் இந்நேரம் அக்ரகார ஏட்டினர் இதை அகில உலகத்திற் கும் தெரியும் வண் ணம் தம்பட்டம் அடித்திருக்க மாட்டார்களா? கூப் பாடு போட்டிருக்க மாட்டார்களா? என்று அன்று விடுதலையில் எழுதியவர் அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் (20.4.1964). சென்னை - கடற்கரை பொதுக்கூட்டத்தில் அம்பலப்படுத்தினார், சமூகநீதியின் தந்தையான பெரியார் (19.4.1964).
பார்ப்பனர்கள் நீதிபதியாக இருந்தால் ஊழல் நடக் காது என்ற பொருளில் எழுதியுள்ள சோவைப் புரிந்து கொள்வீர்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- ராமன் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க திட்டமில்லை
- பாலியல் வழக்கில் சாமியாருக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை: டில்லி நீதிமன்றம் தீர்ப்பு
- வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது அக்னி-5 ஏவுகணை
- பள்ளி சேர்க்கையில் மத்திய அரசின் சட்டமும் பார்ப்பனத்தனப் பார்வையும்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- தமிழ்நாட்டில்சட்டம்ஒழுங்குஎப்படி? கலைஞர் பட்டியலிடுகிறார்
- வாரத்திற்கு 30 நிமிடங்கள் மாடிப்படி ஏறி இறங்கினால் இதய நோய் தாக்காதாம்
- கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம்: அரசு ஆணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
- ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை அறிவிப்பு
- தந்தை பெரியாரின் அயராத உழைப்பால்தான் தமிழ்நாட்டில் ஜாதிப் பாகுபாடு ஒழிக்கப்பட்டது
No comments:
Post a Comment