கேள்வி: புதுவையில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது; பொது மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள புதுவை அரசு துப்பாக்கி வழங்க வேண் டும் என்கிறாரே காங் கிரஸ் எம்.பி. கண்ணன்?
பதில்: கத்தி வைத்துக் கொள்ளுங் கள் என்று முன்னொரு நாள் ஒரு தமிழகத் தலைவர் சொன்னதற்கு ஒருபடி மேலே போய் விட்டார் கண்ணன். சட்டம், ஒழுங்கை நிலை நாட்ட யோசனை சொல் வதற்குப் பதில், அதை மேலும் கெடுக்க வழி சொல்லும் கண்ணன் ஒரு எம்.பி. என்று நினைத்துப் பார்க்க வெட்கமாயிருக் கிறது. - கல்கி (18.3.2012 பக்கம் 85)
பார்ப்பனர்கள் எங்கே சுற்றினாலும் பெரி யாரைச் சீண்டா விட்டால் அவர்களுக்கு நித்திரையே நிச்சயமாக வராது.
ஆம், பெரியார் கத்தியை வைத்துக் கொள்ளச் சொன்னார். சட்டத்துக்குட்பட்ட கத்தியை வைத்துக் கொள்ளுமாறு சேலம் ஆத்தூர் மாநாட்டில் தீர்மானம் போட்டார்.
தற்காப்புக்காகத் தானே தவிர யாரையும் குத்தவோ கொலை செய்யவோ அல்ல. கறுப் புச் சட்டைக்காரர்கள் அந்தக் கத்தியைக் கொண்டு யாரைக் குத் தினார்கள்? தகவல் இருந்தால் கல்கி கூறட்டுமே!
மாறாக பெரியார் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் நடத்திய போது பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று முதல் அமைச்சர் என்ற பொறுப்பு இல் லாமல் வன்முறையைத் தூண்டியவர் தான் கல்கிக்கு மிகவும் வேண் டப்பட்டவரான ஆச்சாரி யார் ராஜாஜி.
தற்காப்பு என்று கூறி துப்பாக்கியால் ஒருவரை சுட்டுக் கொன்றவர் ராஜாஜி என்பதையும் நினைவுபடுத்திக் கொள் ளட்டும். இவ்வளவு பேசும் இந்தக் கூட்டம் ஷாகா என்ற பெயரால் ஆர். எஸ்.எஸ். கும்பல் வன் முறை பயிற்சி அளித்து வருகின்றதே - அதுபற்றி மூச்சு விட்டதுண்டா?, பெண்களுக்கே ஆர். எஸ்.எஸ். பாசறையில் துப்பாக்கி சுடும் பயிற் சியை அளிப்பது எந்த நோக்கத்தில்?
இந்துக் கடவுள்கள் கைகளில் அரிவாள், அம்பு, சங்கு என்ற ஆயுதங்கள் ஏந்தி நிற்கின் றனவே. அதன் தாத் பரியம் என்ன?
இவை எல்லாம் நன் முறையின் சின்னங்களா? வன்முறை பெற்றுப் போட்ட குட்டிகளா?
இந்துக் கடவுள்களே சண்டை போட்டுள்ளன, கொலை புரிந்துள்ளன, கற்பழித்துள்ளன என்று புராணங்களை ஒரு பக்கம் எழுதி வைத்துக் கொண்டு, அதற்கு வக்காலத்துப் போட்டு எழுதும் கல்கி கள் வன்முறையைப் பற்றிப் பேசலாமா, வீணாக தந்தை பெரியாரை வம் புக்கு இழுக்க வேண்டாம்! - மயிலாடன்
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment